Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியத் தலைவரின் படத்தை விழுங்கச் சொல்லும்இராணுவநடவடிக்கை '
#1
தேசியத் தலைவரின் படத்தை விழுங்கச் சொல்லும் சிங்கள இராணுவ 'நடவடிக்கை'
[செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2005, 14:58 ஈழம்] [தாயக செய்தியாளர்]
தேசியத் தலைவரின் உருவப்படத்தை பணப்பைக்குள் வைத்திருந்த இளைஞரை கடுமையாக சோதனையிட்ட படையினர் அந்தப் படத்தை வாய்க்குள் போட்டு விழுங்குமாறு நிர்ப்பந்தித்துள்ளனர்.


திருகோணமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் இராணுவச் சோதனைச் சாவடி மீது நேற்று முன்தினம் மாலை கைக்குண்டு வீசப்பட்டது.

இதன் பின்னர் அப்பகுதிக்கு வந்திருந்த இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவினர் இந்த இளைஞரை வழிமறித்து உடற் சோதனைகுட்படுத்தினர்.

இதன்போது தேசிய அடையாள அட்டையை இராணுவச் சிப்பாய் ஒருவர் கேட்டபோது பணப்பைக்குள் எடுக்க முயன்றார்.

அதில் தமிழீழத் தேசியத் தலைவரின் புகைப்படம் இருந்ததைப் பார்த்த இராணுவத்தினர் அப்படத்தை விழுங்குமாறு நிர்பந்தம் செய்துள்ளனர். அப்படத்தை விழுங்காமல் நகர அனுமதிக்கமாட்டோம் என்றும் கொடுமை செய்துள்ளனர்.

வேறு வழியின்றி தேசியத் தலைவரின் படத்தை உள்விழுங்கிய பின்னரே அந்த இளைஞரை அந்த இடத்திலிருந்து நகர சிங்கள இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
தமிழரின் இதயத்தில் அவர் நிரந்தரமாக இருக்கும் போது, இவ்வறான செயல்களினால் சிங்கள அரசும், அதன் ராணுவமும் தழரின் எதிரிகளாவது உறுதி. :evil: :twisted: :twisted:
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)