Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரப்பனுக்கு அஞ்சலி!
#1
வீரப்பனுக்கு திடீர் அஞ்சலி! தர்மபுரியில் பரபரப்பு!


சந்தனக் கடத்தல் வீரப்பன் படத்திற்கு வன்னியர் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதால் தர்மபுரி மாவட்டம் பாளையபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழகஇ கர்நாடக காவல்துறையினருக்கு பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தவன் வீரப்பன். எத்தனையோ வியூகங்கள் அமைத்தும் கூட வீரப்பனை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவனைப் பிடிக்கவே முடியாது என்று உறுதியாக மக்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தலைமையிலான அதிரடிப்படை தர்மபுரி மாவட்டம் பாடி வனப்பகுதியில் வைத்து வீரப்பனை வீழ்த்தியது.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு அடுத்த மாதத்துடன் ஒரு ஆண்டு முடிகிறது. இந்த நிலையில்இ தர்மபுரி மாவட்டம் பாளையபுரம் என்ற கிராமத்தில் ஏராளமான இளைஞர்கள் வீரப்பனின் உருவப் படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

அந்த இளைஞர்கள் தாங்கள் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். வீரப்பன் படத்திற்கு அருகே சங்கத்தின் கொடி பறக்க விடப்பட்டிருந்தது ஜருகுஇ அசிப்பட்டிஇ கொங்கலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இங்கு வந்து மாலை போட்டு வீரப்பன் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப் பகுதி கிராமங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர்.

thatstamil
.
Reply
#2
Cry Cry Cry Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
கெட்டவனும் நல்லது செய்திருந்தால் தமிழ் மனம் அவனை வாழ்த்துமே.
.

.
Reply
#4
அதிகாரவர்கத்தின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் உள்ளவரை மக்களிற்கு அடிப்படை கல்வியறிவும் இல்லாதவரை நல்லவன் யார் கெட்டவன் யார் என்று என்னவெண்டு தெரியவரும்.

கலப்பஜ வில் இராசயன் குண்டு போடும் போது " he is our bast**d " பின்னர் 17 வருசத்துக்கு பிறகு தேவையேற்படும் போது எல்லாத்தையும் துசுதட்டி எடுத்து காரியம் முடிச்சாச்சு.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)