09-23-2005, 02:01 PM
1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளின் போதும் தன்னை தமிழராகக் காட்டிக்கொள்வதை விட இலங்கையனாகவே லக்ஸ்மன் கதிர்காமர் காட்டிக்கொண்டார் என்று ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கதிர்காமரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச பேசியதாவது:
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றியவர் அமைச்சர் கதிர்காமர். வரலாற்றின் சிறைக் கைதியாக இருக்க விரும்பாதவர்.
நாட்டை இரண்டாகப் பிரிக்கும் சித்தாந்தம் கொண்ட குழுவினரின் பிடியில் இருந்து விடுபட்டு வாழ்ந்தார்.
அவர் தன்னை ஒரு தமிழ் இனவாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் ஓர் இலங்கையன் என்று கூறுவதில் பெருமை கண்டவர்.
1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளின் போதும் அவர் இந்த நிலையில் இருந்து புரளவில்லை.
தான் ஒரு தமிழராக இருந்துகொண்டு, ஐக்கிய இலங்கை ஒன்றுபட்ட நாடு என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.
அதுவே அவருடைய உயிருக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்தது. ஆனால், அவர் தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்தையும் துச்சமாகக் கருதித் துணிச்சலுடன் செயற்பட்டார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக நோர்வே அனுசரணையாளர்களையும் துணிச்சலுடன் விமர்சனம் செய்தவர் கதிர்காமர்.
சந்திரிகாவின் பிறந்தநாள் தொடர்பான கட்டுரை ஒன்றிலேயே கதிர்காமர் இதனை விமர்சித்துள்ளார்.
இதன் மூலம் தாம் எவருக்கும் தலை வணங்காதவர் என்பதை அவர் உறுதிப்படுத்திவிட்டார்.
சர்வதேச மட்டத்தில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதற்கும் துணை நின்றவர். இது புலிகள் இயக்கத்திற்கு கிடைத்த ஒரு தோல்வியேயன்றி வெற்றி அல்ல.
கதிர்காமர் சிறுபான்மை இனத்தவராக இருந்தபோதும் அவரை இந்த நாட்டின் பிரதமராக்க முயற்சித்தோம்.
ஆனால், அது முடியாமல் போய்விட்டது. ஆனால், கதிர்காமருக்குப் பிரதமர் பதவியை விட உயர்ந்த பதவி ஒன்றையே வழங்கியிருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கின்றோம் என்றார் அவர்.
விமல் வீரவன்ச பேச்சு குறித்து கொழும்பு ஊடகவியலாளர்கள் நகைத்துக் கொண்டனர்.
கதிர்காமருக்கு பிரதமர் பதவியை அளிக்க சந்திரிகா முன்வந்த போது அதை மிகக் கடுமையாக எதிர்த்து தங்களது தலையாட்டி பொம்மையாக இருக்கும் மகிந்தவை முன் நிறுத்தியதும் கதிர்காமருக்கு முட்டுக் கட்டை போட்டதும் இந்த ஜே.வி.பி.தானே என்று அவர்கள் தங்கள் கருத்தை நாடாளுமன்றத்துக்கு வெளியே பரிமாறிக் கொண்டனர்.
........நன்றி புதினம்.......
http://www.eelampage.com/?cn=20276

" "