Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டெக்ஸாஸ் நோக்கி ரீட்டா சூறாவளி
#1
<b>ரீட்டா சூறாவளி மணிக்கு 165 மைல் வேகத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தை நோக்கி விரைவு மக்கள் வெளியேற்றம்; அவசரகால உதவிகளுக்கு ஏற்பாடு </b>
டெக்ஸ்ஸாஸ்,

ரீட்டா என்னும் சூறாவளி மணிக்கு 165 மைல்வேகத்தில் (265 கிலோ மீற்றர்) டெக்ஸாஸ் மாநிலத்தை நோக்கித் திரும்பியுள்ளது. இது சனிக்கிழமை இம்மாநிலத்தைத் தாக்கலாமென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அமெரிக்கா இதுவரை காணாத அதிக சக்தி படைத்ததாக, இச்சூறாவளி உருக் கொண்டுள்ளது. இதனால் டெக்ஸாஸில் பாரிய அனர்த்தம் விளையலாம் என வானிலை அவதானிப்பு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இச் சூறாவளியையொட்டி, டெக்ஸாஸ் மாநிலத்திலும் அயலிலுள்ள லூசியானா மாநிலத்திலும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

வெளியேற்ற உத்தரவுகளை கடைப் பிடியுங்கள். தட்டிக் கழிக்காதீர்கள். ரீட்டா சூறாவளி பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடாது என நாம் பிரார்த்திக்கின்றோம். அத்தகைய அனர்த்தங்கள் ஏற்படமாட்டாவென்றும் நம்புகின்றோம் என்றும் புஷ் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருப்பினும், இச் சூறாவளியைப் பொறுத்தமட்டில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். எச்சரிக்கை தேவை. இதற்கு முகம் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மெக்சிக்கோ வளைகுடாவில் ரீட்டா சூறாவளியின் பலம் இரட்டிப்பாக அதிகரித்தது. இது ஐந்தாந்தர சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே சூறாவளிகளில் ஆகக் கூடிய சக்திபடைத்ததாகும்.

கடந்தமாதம் அமெரிக்காவின் கரையோரப் பிரதேசங்களான நியூ ஓர்லியன்ஸ், மிசிசிப்பி, லூசியானா, அலாபாமா ஆகியவற்றைத் தாக்கிய கற்றினா சூறாவளி, தாக்க அளவில் நான்காவதாக வகைப்படுத்தப்பட்டதாகும்.

டெக்ஸாஸிலுள்ள கல்வெஸ்டன், கோர்புஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்களிலிருந்தும் ஹூஸ்டனின் பல பகுதிகளிலிருந்தும் உடனடியாக வெளியேறிவிடுமாறு குடியிருப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெக்ஸாஸில் அகதிகளாக தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான லூசியா மக்கள், ஆர்கன்ஸாஸ், டெனிஸி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். கற்றினா சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான லூசியானவிலிருந்து, இவர்கள் அகதிகளாக வந்து, டெக்ஸாஸில் தஞ்சமடைந்திருந்தார்கள்.

அனைத்து மக்களையும் வெளியேற்றுவதற்கு போதிய அரசாங்க வாகனங்கள் கிடையாது. இது விடயத்தில், மக்கள் வெளியேற்றத்துக்கு நண்பர்களும் அயலவர்களும் தவறாது உதவ வேண்டுமென இத்தருணத்தில் ஹுஸ்டன் மாநகர பிதாபில் வைட் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

எல்லோருமே அஞ்சுகின்றனர். அதனால் நாங்களும் வெளியேறுகின்றோம் என கல்வெஸ்டன் குடியிருப்பாளர் மரியா ஸ்டிபன்ஸ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார்.

கற்றினா சூறாவளி அனர்த்தங்களை தொலைக்காட்சியில் பார்த்தேன். மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள். நீரில் சடலங்கள் மிதந்தன. இக்கதி எனது குடும்பத்துக்கும் நேரிட்டு விடக் கூடாது என்று அப் பெண்மணி குறிப்பிட்டார்.

ரீட்டா சூறாவளி திரும்பியுள்ள மார்க்கத்தில் நியூ ஓர்லியன்ஸ் அமையவில்லை. எனினும் கடும் காற்றாலும், பலத்த மழையாலும் அனர்த்தங்கள் ஏற்படலாம். வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என, இங்கு மீள் கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியியலாளர்கள் அச்சம் தெரிவித்தார்கள்.

மெச்சிக்கோ வளைகுடாவில், எழுபது வீதமான எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ஹூஸ்டனிலுள்ள ஜோன்சன் விண்வெளி ஆய்வு மையம், ரீட்டா சூறாவளி அனர்த்தங்களையொட்டி மூடப்பட்டு விட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு மைய கட்டுப்பாட்டகம் ரஷ்யாவுக்கு மாற்றப்பட்டுள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாஸா தெரிவித்தது.

சமஷ்டி அதிகாரிகள் மீட்பு நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். அவசரகால ஊழியர்கள், மருத்துவக் குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ட்ரக்குகளில் நீர், உணவு, மருந்து வகைகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மெச்சிக்கோ கிழக்குக் கரையோரப் பிராந்தியங்களில், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரீட்டா சூறாவளி செவ்வாய்க்கிழமை புளோரிடா கீஸைத்தாக்கியது. அப்போது இது மூன்றாம் தர சூறாவளியின் பலத்தையே பெற்றிருந்தது. அதனால் பாரிய அனர்த்தங்கள் விளையவில்லை எனினும் வெள்ளப் பெருக்கெடுத்தது. மின் விநியோகம் தடைப்பட்டது. கட்டிடங்கள் சேதமடைந்தன.

இச் சூறாவளியையொட்டி இடம் பெயர்ந்தவர்கள் தற்போது தம் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இச் சூறாவளியின் வலிமை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

¿ýÈ¢: ţ縺â
Reply
#2
<b>சூறாவளி ரிடா: அமெரிக்க வரலாற்றில் பெருமளவில் மக்கள் இடம்பெயரும் ஒரு நிகழ்வு</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40834000/jpg/_40834366_bus_grab203.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்காவின் வளைகுடா கடற்கரை "ரிடா" புயற்காற்றின் தாக்கத்தை சமாளிக்க தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், அப்பகுதியிலிருந்து,
சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கடற்கரைப் பகுதியை விட்டு உள்நாடு நோக்கி விரைகிறார்கள்.

இதுதான் அமெரிக்க வரலாற்றில், பெருமளவிலான மக்கள் அப்புறப்படுத்தப்படும் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று.

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/africa_enl_1127484427/img/laun.jpg' border='0' alt='user posted image'>
<i>சூறாவளி ரிடாவின் செய்மதித் தோற்றம்.....</i>

இந்த புயல் காற்று, சனிக்கிழமை அமெரிக்க உள்ளூர் நேரப்படி அதிகாலையில், கடற்கரையை, ஒருக்கால், இப்போது எல்லோரும் வெளியேறிவிட்ட
டெக்சாஸ் மாநிலத்தை, துறைமுக நகரான கால்வஸ்டொன் நகரைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்பிரதேசத்தில், நெடுஞ்சாலைகளில், சாரி சாரியாக வாகனங்கள் தேங்கிக்கிடக்கின்றன.

அப்புறப்படுத்தப்பட்ட முதியவர்கள் சிலரை ஏற்றி வந்த பேருந்து ஒன்று, டல்லாஸ் நகரம் அருகே, ஒரு நெரிசல் மிக்க சாலையில்
தீப்பிடித்துக்கொண்டபோது, 20 பேர் கொல்லப்பட்டனர்.

விமான போக்குவரத்து நிறுத்தப்படுவதற்குள் இந்தப்பிரதேசத்திலிருந்து வெளியேற மேலும் கூடுதல் விமான சேவைகளை மக்கள் கோரிவருகின்றனர்.

இன்று பின்னதாக அமெரிக்க அதிபர் புஷ் டெக்சஸ் செல்லவிருக்கிறார்.

கடந்த மாதம் கத்ரீனா புயற்காற்றால் பேரழிவுக்குள்ளான நியூஒர்லீன்ஸ் நகரில், வெள்ளத்தடுப்பு சுவர்களை மழை நீர் உடைத்துவிட்டது.

- BBC tamil

<img src='http://cache.boston.com/bonzai-fba/Globe_Photo/2005/01/03/1104745555_1393.jpg' border='0' alt='user posted image'>
<b>துன்பத்தால் துயருறும் அப்பாவி மக்கள் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.</b>
Reply
#3
இந்த இயற்கை அனர்த்தினால் அப்பாவி உயிர்கள் பலியாகமிலிருக்க ஆண்டவன் அருள்புரியவேண்டும்
selva
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)