Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதயராஜிற்கு தீர்வு கிடைக்குமா?
#1
இலங்கை அகதியென்பதால் மருத்துவ பீடத்துக்கு இடம் கிடைக்காமல் தவிக்கும் மாணவன் உதயராஜ் ஜெயலலிதா அரசு கருணை காட்டுமா?
தமிழ்நாட்டின் மேலூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 இல் முதலிடம் பெற்று, டாக்டருக்கு படிக்க எண்ணிய மாணவர் `இலங்கை அகதி' என்ற காரணத்தால் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். தமிழக அரசின் உதவி கிடைக்குமா என மாணவர் உதயராஜ் காத்துக் கொண்டிருக்கிறார்.

திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் சிவலிங்கம், லட்சுமி. இவர்கள் மகன் உதயராஜ். கடந்த ஆண்டு பிளஸ் 2 இல் இவர் 1200 இற்கு 1137 மார்க் பெற்று மேலூர் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்றார். அதன் பின் டாக்டராக எண்ணிய அவர் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் 96.66 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, ஒதுக்கப்பட்ட 20 மருத்துவ பட்டியலில் இவரது பெயர் 7 ஆவது இடத்தில் இருந்தது. ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக ரூ. 2 ஆயிரத்து 500 க்கான காசோலை எடுத்துக்கொண்டு சென்னை சென்றவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இலங்கைத் தமிழரான இவருக்கு இந்தப் பிரிவில் ஆசனம் வழங்க முடியாது என்று, இவருக்கு அனுப்பியிருந்த தபால்களை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழகத்தில் படிக்க அனுமதித்த அரசு, மேற்படிப்பை படிக்க அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் முதல் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை உதயகுமார் மனு செய்தார். ஜனாதிபதி மாளிகையிலிருந்து அவரது உதவியாளர் ஆசிஸ் கால்யா ஒரு தபால் அனுப்பி உள்ளார். அதில் தமிழக அரசு இவரது மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான உதயராஜ் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இது குறித்து சிவலிங்கம் கூறியதாவது:

1990 இல் நான் இலங்கை வவுனியா பகுதியில் இருந்து தமிழகம் வரும் போது உதயராஜ் 2 வயது சிறுவன். மதுரை பெரியார் நகர் மற்றும் தெற்குவெளி வீதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்தான். பின்னர் திருவாதவூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தான். பிளஸ் 2 இல் உயிரியலில் 200, வேதியியலில் 200, இயற்பியலில் 199, கணிதத்தில் 197, தமிழிலில் 188, ஆங்கிலத்தில் 153 மார்க்குகள் பெற்றான். இவ்வளவு நன்றாக படிக்கும் மாணவனுக்கு இலங்கை அகதி என்ற ஒரே காரணத்தால், டாக்டருக்கு படிக்கும் படிப்பை மறுப்பது வேதனையளிக்கிறது என்றார்.

தாயார் லட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:

படிப்பு ஒன்றை மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பான். தற்போது மேல் படிப்பு படிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் இருக்கிறான். நாங்கள் இருவரும் படிப்பறிவு இல்லாதவர்கள். எங்கள் மகனாவது நன்றாக படித்து வேலைக்கு செல்வான் என்று எண்ணியதும் கனவாக போய்விட்டது. தமிழக அரசு எங்கள் மீது கருணை கொண்டு, அவனது படிப்பு தொடர அனுமதிக்க வேண்டும் என்றார்.

செப்.29 விடுபட்டவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர கடைசி நாளாகும். அதற்குள் உதயராஜிற்கு நல்ல தீர்வு கிடைக்குமா

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
தமிழீழம் ஒன்று தான் எல்லாத்திற்குமே தீர்வு.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)