Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டு. புனர்வாழ்வுக்கழகம் மீது தாக்குதல்: காவலாளி கொலை
#1
மட்டு. புனர்வாழ்வுக்கழகம் மீது தாக்குதல்: காவலாளி கொலை
ஜபுதன்கிழமைஇ 28 செப்ரெம்பர் 2005இ 21:34 ஈழம்ஸ ஜமட்டக்களப்பு நிருபர்ஸ
மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதிச் சந்தியிலுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மாவட்ட அலுவலகம் மீது இன்றிரவு 8.20 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட தாக்கதலில் அங்கு இரவு நேர கடமையிலிருந்த காவலாளியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் வேலுப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் அலுவலகம் முன்பாக இறங்கிய இரண்டு நபர்கள் 5 கைக்குண்டுகளை வீசி இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

ஏற்கனவே டயஸ் வீதியிலுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அலுவலகம் சில மாதங்களுக்கு முன்பு இப்படியானதொரு தாக்குதலுக்கு இலக்கானதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டமை குறிப்படத்தக்கது.

சுட்டது புதினத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)