Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அச்சத்தில் கண்காணிப்புக் குழு
#1
அரச ஆயுதக் குழுவின் தாக்குதல் அச்சத்தில் கண்காணிப்புக் குழு: உறுப்பினர்கள் திடீர் மாற்றம்! பாதுகாப்பு அதிகரிப்பு!!
[வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2005, 18:49 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<b>சிறிலங்கா அரச படைகளுடன் கருணா குழு என்ற பெயரில் இயங்கி வரும் ஆயுதக்குழுவினர் எந்த நேரத்திலும் தம் மீது தாக்குதல் நடாத்தக் கூடும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அச்சத்தில் உள்ளது</b>.

இதையடுத்து கண்காணிப்புக் குழுவின் அலுவலகங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தாக்குதல் அச்சம் அற்ற பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி வெலிக்கந்தையில் திறக்கப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்த கண்காணிப்புக்குழுவின் கிளை அலுவலகத் திட்டமும் இந்த அச்சுறுத்தலால் கைவிடப்பட்டது.

மட்டக்களப்பிற்கு வருகை தந்த கண்காணிப்புக் குழுவின் தலைவர், கடந்த இரு தினங்களாகத் தங்கியிருந்து இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் உரையாடியுள்ளதாகத் தெரியவருகிறது.

இவ்விடயத்தில் அதீத நம்பகத்தன்மை காணப்படுவதாக கண்காணிப்புக்குழு கருதியதையடுத்து மட்டக்களப்பில் அமைந்துள்ள கண்காணிப்புக்குழுவின் பிராந்தியத் தலைமையகம் மற்றும் வாழைச்சேனை கிளை அலுவலகம் ஆகியவற்றிற்கு 24 மணிநேர காவல்துறை-இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்புக் குழுவின் இரு முக்கிய உறுப்பினர்கள் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கொழும்பிலுள்ள கண்காணிப்புக்குழுவின் அதிகாரியொருவரிடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டபோது,

இக்கேள்விக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்தார் என்பதும் மறைமுகமாக அக் கேள்வியை சார்ந்த வகையிலேயே கருத்துக்களைத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரச படையுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழு பற்றிய உண்மைகளை கண்காணிப்புக்குழு வெளிக் கொணர்ந்ததையடுத்து இந்த அச்சுறுத்தலை ஆயுதக் குழுவினர் விடுத்துள்ளனர்.

பொலநறுவை மாவட்டம் தீவுச்சேனையில் அரசபடைகளின் கண்காணிப்பின் கீழிருந்த ஆயுததாரிகள் பற்றிய செய்திகள் வெளியாவதற்கு கண்காணிப்புக் குழுவே காரணம் என்ற நிலையிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் கண்காணிப்புக் குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ளது.

கௌசல்யன் கொலை தொடர்பான சிறிலங்கா அரச தலைவர் ஆணைக்குழு முன்னான சாட்சியத்தின் போது தீவுச்சேனையில் ஆயுததாரிகள் இருப்பது பற்றி கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் தீவுச்சேனைப் பகுதியில் ரோந்து சென்ற போது கருணா குழு என்ற பெயரிலான ஆயுததாரிகளைச் சந்தித்து இதனை கண்காணிப்புக்குழுவினர் மீண்டுமொருமுறை நிரூபித்திருந்தனர்.

இச்சந்திப்புப் பற்றிய செய்திகளேதும் கண்காணிப்புக் குழுவால் வெளிவராதபோதும், அது பற்றிய செய்தியை சிறிலங்கா அரசின் அனுசரணையில் இயங்கும் தமிழின விரோத இணையத்தளமும், மட்டக்களப்பின் குறிப்பிட்ட பகுதிகளில் இராணுவத்தால் இரவு வேளைகளில் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரமொன்றுமே வெளிக்கொணர்ந்தன.

இவ்வாறு சிறீலங்காப் படைத்தரப்பு இச்செய்தியை வெளியிட்ட பிற்பாடே, கண்காணிப்புக்குழுவின் தீவுச்சேனைச் சந்திப்புக் குறித்த உண்மையான விடயங்கள் வெளியுலகின் பார்வைக்கு வந்தன.

குறிப்பாக, அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழே இந்த ஆயுதக்குழு இயங்குகிறது என்பதை நிரூபிப்பதற்கான சந்திப்பே அது என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இப்படியான திரிசங்கு சொர்க்க நிலையையடைந்த மேற்படி ஆயுதக்குழு மற்றும் சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.


http://www.eelampage.com/?cn=20432
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)