Posts: 170
Threads: 43
Joined: Sep 2004
Reputation:
0
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக வாழுமா எங்கள் தமிழினம்???
யாழ்குடா நாட்டில் உள்ள அச்சுவேலி எண்டெரு இடத்துக்கு பக்கத்தில் சில கிராமங்களில் (தம்பாளை, பத்தமேனி, இடைக்காடு) ஒரே பதபதட்டம்.. காரணம் அங்கே தம்பாளை கூட்டம், இடைக்காட்டு இளைஞன் ஒருவரை மிகக்கொடுரமான முறையில் காட்டி மீராண்டி தன முறையில் கொலைசெய்தது..
பிரச்சினை என்ன???
இந்த இரு ஊருக்கும் பல காலமாக வாய் சண்டை நடந்திருக்கின்றது, இரு ஊருக்கும் என்பதை விட இரு ஊரில் உள்ள இளைஞர் கூட்டங்களுக்கும். அச் சண்டை சில வேளைகளில் வாய் சண்டை, சாதரன கைச்சண்டை, அதுவே செல்வச்சன்னதி கோயில் கொடியேற்றத்துடன் விசுபரூபம் எடுத்தது, காரணம் தொண்டமான்ற்றில் உள்ள பாலம் இராணுவ நடவடிக்கையில் சேதமடைந்து அது திருத்தபடமல் இருந்து வந்தது. அதை இடைக்காட்டு மக்கள் தாங்கள் திருத்துகின்றோம் எண்டு சொன்னதிற்கு தம்பாளை மக்கள் மறுத்துவந்திருக்கிறார்கள்....
இடைக்காடு, தம்பாளை உறவு எப்படி??
பலாலியில் இருந்து அச்சுவேலி செல்லவேண்டுமெனில், வசாவிளான், வளலாய், இடைக்காடு, தம்பாளை, பத்தமேனி அச்சுவேலி..உண்மையில் இடைக்காட்டு மக்கள் தம்பாளை மக்களை விட வசதி படைத்தவர்கள், காரணம் அவர்கள் சொந்தமாக விவசாய கானிகளை வைத்து விவசாய செய்பவர்கள், அத்துடன் அங்கே வாழும் குடும்பங்களில் குறைந்த பட்சம் ஒரு அங்கத்தவர் புலத்திலே வாழுகின்றனர். ஆனால் தம்பாளை மக்களிடம் அவ் வசதி இல்லை, அவர்கள் இடைக்காட்டு மக்களிடம் வந்து கூலிக்கு வேலை செய்வார்கள். ஆனாலும் அந்த இரு கிராமத்து மக்களிடம் சுமுகமான உறவு நிலவிவருகிறது, ஆனால் அந்த இரு கிரமாத்து இளைஞர்கள்தான் இவ் பிரச்சினைக்கு அத்திவாரம் இட்டவர்கள்.
என்ன பிரச்சினை..
தம்பாளை இளைஞர்கள் தங்களுக்கு பொழுது போகாவிட்டால் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் புதிய மோட்டார்சைக்கிளில்களில் கூட்டம் கூட்டமாக வந்து இடைக்காட்டு பெண்களை சைட் அடிப்பார்கள். அதுவே பின்பு சண்டைக்கு வழிவகுக்கும்,, இப்படி சிறிய சிறிய சண்டை தொண்டமானாறு பாலம் சம்பந்தபட்ட பிரச்சினையும் தம்பாளை இளைஞர்கள் சிலரை எரிச்சலடைய வைத்திருக்கின்றது.. ஆனால் இங்கே கவனிக்கபடவேண்டிய முக்கியவிடயம் இடைக்காட்டு இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு எண்டு இருப்பார்கள், காரணம் அவர்கள் விவசாயம் செய்பவர்கள், ஓவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பயிர்களை செய்து அதை ஏற்றுமதி செய்வார்கள்
என்ன நடந்தது???
பல முறை இடைக்காட்டு இளைஞர்களுடன் சண்டை போட்டு தம்பாளை இளைஞர்கள் தோற்று உள்ளார்கள். இதனால் இம்முறை தோற்ககூடாது என்று என்னி யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சில இளைஞர்களை பிடித்து இவ் பாரிய சாதனையை செய்திருக்கிறார்கள்.. இடைக்காட்டில் பெரும்பாலும் படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றார்கள்.. அப்படி இருப்பவர்களில் 28 வயது நிரம்பிய இளைஞர் அவர் பெயர் ஆனந்தன் ஆங்கில ஆசிரியாராக பணியாற்றும் இவர் இயற்கையிலே மிகவும் பண்பானவர், எந்தவித வம்புகளுக்கும் செல்லாதவர்,அதிலும் ஆசிரியர் எண்டு சொன்னால் எப்படி எண்டு சொல்லத்தேவையில்லை..
ஆனந்தனுக்கு என்ன நடந்தது.. கவனீங்க இதை காட்டுமிராண்டியிலும் விட காட்டுமீராண்டிக்கூட்டம் என்னம் பூமியில் உயிரோடு இருக்கிறது,
ஆனந்தன் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு அலுவல் காரணமாக அச்சுவேலிக்கு சென்று, இருள்ப்பட்டதும் தம்பாளை வழியாக சைக்கிளில் இடைக்காடு வந்துகொண்டு இருந்தார், அப்பொழுது தம்பாளையில் வைத்து அதுவும் பின்னால் வந்து அவரின் தலையில் (முள்முருங்கை கொட்டனில் பெரிய ஆணிகளை இறுக்கி அந்த கொட்டனால் உச்சந்தலையில் பல முறை ஓங்கி அறைந்துள்ளனர்,,) ஆனந்தன் அப்படியே அடிபட்டு மயங்கு பொழுது கவனீங்க மிளகாய்த்தூளை எடுத்து கண்ணுக்குள் தூவவில்லை கொட்டி இருக்கிறார்கள், விட்டார்களா?? சாரயத்தை பருக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்கள்.. அவரை றோட்டில் கன்னுற்ற சிலர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் கோமாவில் கிடந்திருக்கிறார்,,, பின்னர்?????
அதன் பின்னர் நடந்தது என்ன?? தொடரும்...
இவற்றில் கற்பனை ஏதுமில்லை,, தேவையெனில் அச்சுவேலிக்கு சென்று விசாரிச்சுப்பாருங்கள்.. நிகழ்ந்த கொடுரத்தை..
[b]
,,,,.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
சரி செல்வன்,
உணர்ச்சி வசப்படுவதில் பயன் இல்லை,இச் சம்பவம் யாழில் உள்ள அரசியற் பணியகத்துக்குத் தெரியப் படுத்தப் பட்டதா?விசாரணைகள் நடைபெறுகின்றனவா?இப்படியான மனிதர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்,சட்டம் ஒழுங்கு சிதையும் தருணங்களை இவ்வாறானவர்கள் பயன் படுத்துகிறார்கள், ஆகவே பொறுத்திருங்கள் ,உங்கள் கவலை புரிகிறது.
இவ்வாறான சம்பவங்களை பெரிது படுத்தி பிரதேசவாதச் சண்டைகளை உருவாக்க சில சக்திகள் முனயலாம்,ஆகவே உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகச் சிந்திப்போம்,செயற்படுவோம்.
Posts: 170
Threads: 43
Joined: Sep 2004
Reputation:
0
தொடர்ச்சி...
இவர்கள் ஏன் ஆனந்தனுக்கு சாரயத்தை பருக்கினார்கள்??
ஆனந்தன்மீது பழி போட்டுவிட்டு தப்பிப்பதற்க்கு அவர்கள் இப்படி திட்டம் போட்டிருக்கிறார்கள்.. ஆனந்தன் குடிபோதையில் வந்து இங்கே உள்ள பெண்களிடம் சேட்டை செய்தார் எண்டு...
இடைக்காட்டு இளைஞர்கள் என்ன செய்தார்கள்???
இவ்வ் செய்தியை கேள்வியுற்ற 15,20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தம்பாளைக்கு சென்று அங்கே ஒவ்வொரு வீடுகளுக்குள் சென்று சட்டிபானைகளை வெளியில் எறிந்து (இவற்றுக்கும் அவர்கள் தம்பாளை இளைஞர்களை தாக்குவதற்கெண்டு எந்தவித ஆயுதங்களை கையில் எடுத்துச்செல்லவில்லை) சில கொட்டில்களுக்கு தீயை வைத்துக்கொண்டு இருந்தபொழுது இதைப்பார்வையுற்ற தம்பாளை இளைஞர்கள் ஒரு புலி உறுப்பினரை அழைத்துக்கொண்டுவந்து அங்கே.,, (இவ் புலி உறுப்பினர் தம்பாளையில் பிறந்தவர்) அங்கே நிண்டவர்களை சரமாரியாக வாள்களினால் வெட்டி உள்ளார்கள்.. (புலி உறுப்பினரும் சேர்ந்து) அவ் இளைஞர்களீன் கை கால் நெத்தி, வெட்டு விழுந்து இருக்கின்றது,,இதில் வேடிக்கை என்னெவென்றால் தம்பாளை இளைஞர்கள் வெட்ட இளைஞிகள் தூளை அள்ளி கொட்டி இருக்கிறார்கள்.. அதில் 15 இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளார்கள்.. ( இது நடந்தது போன வாரம்)..
இதற்கிடையில் ஆனந்தனுக்கு என்ன நடந்தது என்று விசாரிக்க வந்த அந்த இடத்து புலிகளின் பொறுப்பாளருக்கு தம்பாளை இளைஞர்களும், இவர் குடிபோதையில் வந்து பெண்களிடம் சேட்டை செய்திருக்கிறார் எண்டு சொல்ல அந்த பொருப்பாளரும் நம்பிவிட்டார்,, (ஏற்கனவே வைத்தியசாலைக்கு சென்றுபார்த்திருக்கிறார்,, ஏற்கனவே அவருக்கு பருக்கப்பட்ட சாரயத்தை பார்த்திருக்கிறார் அதனால் அவர் நம்பிவிட்டார்)..
இப்படியிருக்க ஆனந்தனி உயிரை காப்பாற்றுவது கஸ்டம் எண்டிருக்க,, இடைக்காட்டில் பிறந்து படிச்சு புலிகளின் உறுப்பினராக இருக்கின்ற ஒரு பெண் மருத்துவரிடம் இவ் விடயத்தை பற்றி சொல்ல அவர் மேலதிக நடவடிக்கை எடுத்து ஆனந்தனை விமானம் மூலம் கொழும்பு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. கொழும்பு வைத்தியசாலையில் வெள்ளி அல்லது சனி ஆனந்தனி உயிர் பிரிந்தது.. இதில் பரிதாபம் என்னவெனில் ஆனந்தன் சில மாதங்களுக்கு முன் ஒரு சிறு விபத்தில் தலையில் தையல் போடப்பட்டிருந்தது அது என்னம் ஆறாத நிலையில் காட்டுமிராண்டிகளினால் தாக்கப்பட்டுள்ளார்,. இதில் என்னொமொன்றை கவனிக்கவேண்டு ஆனந்தனுக்கு தம்பாளை இளைஞர்களோடு எண்டைக்குமெ வம்பு தும்புகளுக்கு போனதில்லை.. (ஆனந்தன் எனது நண்பர், 4 மாதங்களுக்கு முன் இடைக்காடு சென்றபொழுது சந்தித்தேன்.. கிட்டத்த்தட்ட 10 வருடங்களுக்கு பின்னர் நானும் அவரும் (அவர் என்னைவிட 8 வயது மூத்தவர்,,,) சந்தித்துக்கொண்டோம்..
இன்று அவரின் நல்லடக்கம் இடைக்காட்டில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது,, நான் தொலைபேசியில் கதைத்தேன் எனது நணபர்களுடன்... இடைக்காடு (அங்கே கிட்டத்தட்ட 8,000 பேருக்கு மேல் வசிக்கிறார்கள்)இடைக்காடு 3 நாட்களாக சோகத்திலும் பயத்திலும் இருப்பதாக தெரிவித்தார்கள்.. அங்கே உள்ள இளைஞர்களின் பொற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காப்பதற்க்கு பெரும்பாடு படுகின்றார்கள்.. ஏனெனில் இடைக்காட்டு இளைஞர்கள் கடும்கோவத்தில் இருக்கிறார்கள்.. என்றோ முடித்து வைக்கப்படாத சிறிய விடயத்தால் இன்று அந்த கிராமத்தில் இன்று சோக நாள்.. இது பொய் என்றால் நீங்கள் அங்கே சென்று பாருங்கள்..
முற்றும்
[b]
,,,,.
Posts: 170
Threads: 43
Joined: Sep 2004
Reputation:
0
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->சரி செல்வன்,
உணர்ச்சி வசப்படுவதில் பயன் இல்லை,இச் சம்பவம் யாழில் உள்ள அரசியற் பணியகத்துக்குத் தெரியப் படுத்தப் பட்டதா?விசாரணைகள் நடைபெறுகின்றனவா?இப்படியான மனிதர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்,சட்டம் ஒழுங்கு சிதையும் தருணங்களை இவ்வாறானவர்கள் பயன் படுத்துகிறார்கள், ஆகவே பொறுத்திருங்கள் ,உங்கள் கவலை புரிகிறது.
இவ்வாறான சம்பவங்களை பெரிது படுத்தி பிரதேசவாதச் சண்டைகளை உருவாக்க சில சக்திகள் முனயலாம்,ஆகவே உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகச் சிந்திப்போம்,செயற்படுவோம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதை நான் பிரதேசவாதமாக பார்க்கவில்லை.. ஒரு சிறு சண்டையை எவ்வாறு திட்டம்போட்டு ஒரு அப்பாவியை அதுவும் அருகருகே இருந்துகொண்டு அண்ணன் தம்பி போல் இருக்கவேண்டியவர்கள்,, ஏன் இவ்வாறு செய்கிறார்கள்.. இப்பொழுது விடயம் மேலிடத்துக்கு சென்றுவிட்டது,, (அந்தமருத்துவர்மூலம்) ஆனால் விடயம் சென்றவுடன் தம்பாளையில் பல இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்..
நான் அண்மையில் இடைக்காட்டுக்கு சென்ற பொழுது 2 முறை அந்த இளைஞர்கள் வந்தார்கள்,,
இதில் வேடிக்கை என்னெவென்றால்.. அந்த தம்பாளை இளைஞர்களிடம் மோட்டர்சைக்கிள், தொலைபேசி அதுவும் புதியது,,ஆனால் அவர்களின் பெற்றோர்கள் இங்கே வந்து கூலி வேலை பார்க்கிறார்கள்.... இன்று தொலைபேசியில் உரையாடியபொழுது அவர்கள் அழுகின்றார்கள், <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதை எனது ஊர் என்றவுடன் நான் பெரிதாக்கவில்லை..[b]தமிழும் தமிழீழமும் எமது இருவிழிகள்
[b]
,,,,.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
கடவுளே இப்படியான ஆக்கள் எம்மினத்திலே இருக்கினமா :evil: :roll: :roll:
உயிரிழந்தவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இது போல சம்பவங்கள் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டில இருக்கும் போது நடப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு
. .
.
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
 hock:  hock:
பத்திரிகையில் வரவில்லையா?? இந்த செய்தி :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இதில் ஒரு பக்க கருத்தை மட்டும் கேட்டு
எந்த முடிவுக்கும் வரமுடியாதே..
அதுவும் நீங்கள் அந்த ஊர்க்காரர். பாதிக்கப்பட்டவர்
உங்கள் நண்பர். இதெல்லாம் தொலைபேசியில்
கேட்டு அறிந்துள்ளீர்கள். இதைவைத்து எந்த முடிவுக்கும்
வர முடியாது தானே?
மற்றய பக்கத்தை பற்றி யாராவது சொன்னால்
தான் இதில் உள்ள உண்மை பொய்கள் விளங்கும்.
ஆனால் நடந்த சம்பவம் காட்டுமிராண்டித்
தனமானது.
Posts: 170
Threads: 43
Joined: Sep 2004
Reputation:
0
நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் 4 மாதங்களுக்கு முன்னர் நானே அதை நேரில் பார்த்திருக்கிறேன்.. பின்னேரம் அல்லது பொழுதுபடும்பொழுது வருவார்கள்.. சைக்கிளில் அல்ல புத்தம் புதிய மோட்டார்சைக்கிளில்.. மோட்டார்சைக்கிளில் கோனுக்கு பதிலாக இசை (பாடல்களின் மெட்டு)பூட்டி வைத்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியும் எங்கே எங்கே அவர்கள் அந்த கோனை பாவிக்க வேண்டும் என்பது, அதனால் பிரச்சினை ஏற்படும் எந்தவிதத்தில் எண்டால், ஒரு வீட்டில் அண்ணன் தங்கை, அக்காவை கிண்டல் செய்தால் அண்ணன் என்ன செய்வான் என்ன சேட்டை எண்டு கேட்டால் சரி 5 மோட்டர் சைக்கிள் வரும் அதில் 15 பேர்கள் (1ல 3பேர்படி) அவங்கட ஊரில வந்து கதைச்சால் அவங்க சும்மா இருப்பாங்களா,, இது தான் பிரச்சினை..
அதைவிட இறந்த அந்த இளைஞரின் தாயரை கொழும்பு ஆஸ்பத்திரியில் டக்டர்கள் கேட்டார்களாம் யார் இதைச்செய்தது எண்டு.. காட்டுமிராண்டித்தனமா தாக்கி இருக்கிறார்கள் (இறந்தவர் ஒருவகையில் சொந்தக்காரர் வேற, அவரின் தாயார் இதை தெரிவித்து இருந்தார்)..
சரி ஒரு பக்கம் தான் பிழை இருக்கெண்டு வைப்பமே..அப்ப தம்பாளை இளைஞர்கள் அதைச்செய்வதற்க்கு இடைக்காட்டு இளைஞர்கள்தான் காரணம் எண்டு சொன்னால்,, இவ்விடயம் தற்பொழுது புலிகளின் மேலிடத்துக்கு சென்றுள்ளது, இதை அறிந்ததும் பல தம்பாளை இளைஞர்கள் தலைமறைவு ஆகிவிட்டார்கள்.. அவர்களில் குற்றம் எதுவும் இல்லையெண்டால் அவர்கள் ஏன் தலைமறைவு ஆக வேண்டும்,,
மறுபுறம் தம்பாளையில் ஒரு ஊரையே அழிக்கும் திறமைகொண்ட இளைஞர்கள் இருக்கும்பொழுது ஏன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞர்களை வரவழைத்தார்கள்?? :?
எது எப்படியோ எமது விடுதலைப்புலிகள் இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை..
[b]
,,,,.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கத்தான்
வேண்டும். எடுப்பார்கள்.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
நான் அறிந்தவரை இது சில காலத்திற்கு முன் நடந்த தாக அறிந்தேன். இப்பிரச்சினை புலிகளின் கவனத்தில் அப்போதே கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பாட்டில் இல்லாத ஒரு பகுதியில் புலிகளின் நடவடிக்கைகளை எதிர்பார்ப்பது எமது அறியாமையே...
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 170
Threads: 43
Joined: Sep 2004
Reputation:
0
இல்லை அறுவி.. இது நடந்தது 1 கிழமைக்குள்த்தான்... ஏனெனில் நாளைதான் அன்னாரின் நல்லடக்கம் இடம்பெறுகிறது.
[b]
,,,,.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
தமிழாக்கள் எல்லாம் காட்டுமிராண்டியள் தானே. கல்யாணங்கட்டின பிறகு மனுசிமார அடிக்குிறது பிள்ள பிறநஇது பிறகு பிள்ளையள அடிக்கிறது. மதம் பிடிச்சு மோதுறது சாதி வெறியில சண்டை பிடிக்கிறது காதலெண்டோடன பெட்டைக்காண்டி குத்துப்படுறது பெட்டை ஏலாதெண்டோடன பெட்டை வீட்டுக்காரர கொலை செய்யுறது. எண்டைக்குத்தான் தமிழாக்கள் ஒற்றுமையா இருபஇபினம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
அப்ப நீங்களும் காட்டுமிராண்டியோ அக்கோய்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
இடைக்காட்டு சல்லியடியிலதான் பலாலி தொடர் காவலறண் இருந்ததே இப்பவும் இருக்கிறதா பத்தமேனி முரசொலி தாண்டி ஒட்டகபுலம் தொழில்பேட்டை பகுதியில வடிசாரயம் (பேரில கசிப்பு)காய்ச்சு வார்கள் இப்பவும் செய்கிறார்களா. அது இலங்கைப் போலீஸின் உதவியுடன் நடந்தது. அப்பிடியான சம்பவங்கள் அதிகம் நடப்பதுக்கு இராணுவ போலீஸ் ஆதரவு அதிகம். இது பிரித்தாள்வதன் ஒரு தந்திரம் (மக்களின் மனதை திசை திருப்பல்) ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் கலாச்சாரத்தை அழித்தால் போதும் அவ்வினம் தானாக அழிந்துவிடும். (சொல்வது நான் இல்லை, அது ஆரிய மந்திரி சாணக்கியர் எழுதிவைத்தது) அதை அரசாங்கம் நன்றாக பின்பற்றுகிறது.
கலாச்சார அழிவில சிக்கி சின்னாபின்ன மாகிக்கொண்டு இருக்கும் தேசத்தில் முதலாவதாய் இருப்பது ஆப்கானிஸ்தான். பெண்களை வெளியே விடாத நிரம்பிய மதவெறி பிடித்த தேசத்தில் ஆபாச பட இறுவெட்டுக்கள் கடைதெருவில் மலிவு விலையில் வாங்கலாமாம்.
இதோடு ஒப்பிடும் போது எமது தேசம் எவ்வளவோ பரவாய் இல்லை. தூண்டி விடுபவர்கள் இருக்கும் வரை எதையும் கட்டுக்குள் கொண்டுவருவது கடினம்.....
::
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[quote=selvanNL]
[size=12]இதைப்பார்வையுற்ற தம்பாளை இளைஞர்கள் <b>ஒரு புலி உறுப்பினரை அழைத்துக்கொண்டுவந்து அங்கே.,, (இவ் புலி உறுப்பினர் தம்பாளையில் பிறந்தவர்) அங்கே நிண்டவர்களை சரமாரியாக வாள்களினால் வெட்டி உள்ளார்கள்.. (புலி உறுப்பினரும் சேர்ந்து)
செல்வன் உங்களின் ஆதங்கம் புரிகிறது. இறந்தவர் உங்களிற்கு உறவானவராகவும் உள்ளார்
ஆனால் முதலில் நாம் சிலதைப் புரிந்துகொள்ளவேண்டும். எடுத்ததற்கெல்லாம் நாம் குற்றச்சாட்டை அடுக்கமுடியாது.
விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரும் சம்மந்தப்பட்டுள்ளார் என நீங்கள் கூறுகிறீர்கள் அதற்கான தகுந்த ஆதாரம் இருந்தால் நீங்கள் யாழிலுள்ள அரசியற்துறை அலுவலத்தில் மனுச்செய்யலாம். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கிளிநொச்சியில் உள்ள தலைமையகத்திற்கு மனுச்செய்யலாம் அல்லது நேரடியாகத் தலைவரிற்கு மனுச்செய்யலாம்.
இவற்றினை விடுத்து இவ்வாறான பொதுத் தளங்களில் விவாதிப்பது சிறந்ததல்ல. விடுதலைப்புலிப் புலிப்போராளிகள் தம் ஆசைதுறந்து இளைய இனிய உயிர்களை எம்மினம் வாழ உவந்து வழங்குபவர்கள். நாம் இன்றும் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அவர்களே காரணம். <i>[b]அவர்கள் தவறிழைக்கமாட்டார்கள் என்று சொல்லவரவில்லை</b></i>. தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அவர்களுடன் சேர்ந்து நிற்கவும் வாய்ப்புண்டு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Aruvi Wrote:[quote=selvanNL]
செல்வன் உங்களின் ஆதங்கம் புரிகிறது. இறந்தவர் உங்களிற்கு உறவானவராகவும் உள்ளார்
ஆனால் முதலில் நாம் சிலதைப் புரிந்துகொள்ளவேண்டும். எடுத்ததற்கெல்லாம் நாம் குற்றச்சாட்டை அடுக்கமுடியாது.
உண்மையில் நானும் இடைக்காட்டுக்கு சேர்மதியானவன் தான். அதனால் உண்மைகளை திரித்து கூறப்போவதில்லை. செல்வன் சொல்வது என்னவென்றால் புலி உறுப்பினரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்றாரே தவிர புலிகள் அமைப்பை குறை கூறவில்லை. ஏனென்றால் பல புலிப் போராளிகளை போராட்டத்திற்கென களம் இறக்கி விட்டதில் இடைக்காடு ஒன்றும் சளைத்ததல்ல. *********னின் மனைவியான வைத்தியகலாநிதி கூட இடைக்காடு தான் ஈன்றது. இதை விட பல போராளிகளும், மாவீரர்களும் நாட்டிற்காக களம் இறங்கி நிற்கின்றார்கள்.
யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளாராகிய இளம்பரிதியின் வேண்டுகோளுக்கமையவே அமைதியாக ஊர் இருக்கின்றது. அதை விட குருநகர் பிரச்சனையில் தேசத்துரோகிகளின் பங்களிப்பை உணர்ந்து எம் பிரச்சனையில் அது குறித்துமிகவும் அவதானமாக இருக்கின்றோம்.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
|