Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதிர் காளையர்
#1
காளையர் விடியல்!(விடியல்காளை)

தாய்க்குத் தலைமகனாகப் பிறந்துவிட்டால் சொந்த ஊரோ அந்நிய தேசமோ, குடும்பத்தின் அத்தனை சுமைகளும் அவன் தலையில்தான். பெண் சுதந்திரம் பேசும் பெண்களும் எதோ ஒரு வகையில் அண்ணன்களை சுரண்டுவது நம்மூர் நியாயம். அங்கு பெண் உரிமை முன்னிலையில் இருக்காது. கடமை, அன்பு என்று ஏகப்பட்ட சாக்குப்போக்குகளின் போர்வையில் உறிஞ்சல்கள் இருக்கும். `சீர் கொண்டு வந்தால் சகோதரி’- மிக மிக உண்மை. அங்கே பெண்மை சுயநல பூதம்.
பெற்றோர்களின் நிலைமை, ஒவ்வொரு குடும்ப சூழ்லைப் பொருத்து ஓரளவு சுயநலமாகவே வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. வலியோரிடமிருந்து பெற்று வறியவர்க்கு கொடுப்பது தமது கடமை என்றே நினைக்கிறார்கள். பணத்துக்காக வேண்டுகோள் விடுக்கும்போதும், தன் மகனுக்கு பிடித்த சீடை, முறுக்கு இன்ன பிற பொருட்களைத் தெரிந்தவர்கள் மூலம் கொடுத்தனுப்புவதும், தங்களின் guilty conscience-ல் இருந்து ஓரளவு தேற்றிக் கொள்ளவே!
முதிர் காளையர்( முதிர் கன்னியரின் ஆண்பால்) என்ற ஜனத்தொகை அதிகமாவது இந்த எதிர்பார்ப்புகள் பாசம் கடந்து, பணம் ஒன்றே குறிக்கோளாகும் போதுதான். `உன்னை என்ன பாடு பட்டு படிக்க வைத்தேன்’ என்று இவர்கள் மறுபடி மறுபடி புலம்ப வேண்டியதில்லை. அது மனதில் பதிந்த மகன்கள்தான் இந்த மாதிரி தங்களின் சுகங்களைத் துறந்து வீட்டுக்காக வாழ்வது. ஓரளவு எதார்த்த சிந்தனாவாதிகள் தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறார்கள். என்ன , கொஞ்ச நாள் தங்கள் மகன் சொல்லாமல் சட்டைகாரியையோ சல்வார் கமீஸையோ `சேர்த்துக்கிட்டான்’னு புலம்பிட்டு,மறுபடியும் தங்கள் விண்ணப்பங்களைத் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆதலால் புதிதாக புலம்பெயர்ந்த காளையரே விழிப்புடன் வாழ்வீர்! ஆத்துலே(வீட்டில்) போட்டாலும், ஆத்திலே (ஆறு) போட்டலும் அளந்துதான் போடோணும்!!!
நன்றி>குரல்
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)