Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
நிதி சம்பந்தமாக ஜூட் அவர்களின் கருத்துதான் என்னுடையதும்... ஆனால் எட்டவேண்டிய தூரம் நிறைய உள்ளது..
::
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
மேலுள்ள பல விடயங்கள் ஒன்றோடொன்று தொடர்பானவை.
ஜூட் விளக்கிய படி எமக்கு பொருளாதார அபிவிரித்தி அடயவும் எமது சுயாதீனமான நிதி மற்றும் வணிப கொள்கைகள் வரி வித்திப்பு என்பவற்றை அமுல் படுத்த நிச்சயமாக எமக்கு பாதுகாப்பான ஒரு துறைமுகம் அவசியம்.
இபோது எமது கட்டுப் பாட்டில் இருக்கிகும் முல்லைத்தீவுத் துறை முகத்தை ஒரு வணிபத் துறை முகமாக்குவதற்கும் அதற்கான பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கும்,திரிகோணமலை மற்றும் பதவியாவில் நிலை கொண்டுள்ள இலங்கை வான் மற்றும் கடற் படை அச்சுறுத்தலாக இருக்கும்.இதற்கான் மாற்று வழிகள் என்ன என்ன
1)திரிகோணமலை துறைமுகம் எமது கட்டுப் பாட்டுக்கு வருவது.
2)இலங்கை வான் படயின் தாகுதல் திறனை மழுங்கடய வைப்பது.
3)முக்கியமான விடயம் இந்திய வான் படையின் வல்லாதிக்கத்தை எவ்வாறு சமாளிப்பது.
4)இந்திய வான் தலையீட்டை தடுக்க என்ன செய்வது.
5)இந்தியா திரிகோணமலயோ அல்லது வேறெந்த துறை முகமும் எமது கட்டுப் பாட்டுக்கு வரும் நிலயய் சும்மா பாத்துக் கொண்டிருக்குமா?
6)இதற்கு என்ன எதிர் நடவடிகயை நாம் எடுக்கலாம்?
7)இது இந்தியா அவ்வாறான ஒரு முடவை எடுப்பதை தடுக்கக் கூடிய அரசியல் நிலமைகளை தமிழ் நாட்டில் எவ்வாறு உருவாக்குவது எனபதில் தங்கி உள்ளது.
8)அல்லது இந்திய வான் தலையீட்டை எதிர் கொள்ளச் செய்யக் கூடிய எதிர் வினை எது?
9)எம்மல் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முடியுமா அல்லது அந்த தொழில் நுட்பத்தை உள் வாங்க முடியுமா?
10)இங்கே தான் ஏவுகணை தொழில் நுட்பத்தின் கேத்திர முக்கியத்துவம் உணரப் படுகிறது.
11)இஸ்ருலேலியர்கள் பல அரபு நாடுகளை வெற்றி கொண்டதர்கு முக்கிய காரணம் அவர்கள் ஏவுகணை தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் இருந்து புலன் ஆய்வு நடவடிக்கை மூலம் உள் வாங்கிக் கொன்டனர்.அணுவாயுத தொழில் நுட்பத்தையும் உள் வாங்கினர்.
12)இது இன்று புலத்தில் உள்ள தமிழ் தொழில் நுட்பவியலாளரின் கூட்டினாலேயே சாத்தியமாகும்.
13)இதற்கு நாங்கள் என்ன நடவடிகை எடுத்துள்ளோம் என்பதை ஆராய்வது சாலச் சிறந்தது.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஊடுருவலை நிறுத்தி முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாததால் உரிமை கோரும் பிரதேசங்களிற்கான வரைபை (தற்காலிகமாயினும்) மாற்றுவது சரியா?
ஊடுருவல் தாக்குதல் என்று பார்க்கும் போது யாருமே அதிலிருந்து பாதுகாத்து முற்றாக தடுத்து நிறுத்துகிற அளவிற்கு தமது பிரதேசங்களை கட்டுப்பாட்டில்வைத்திருக்கிறார்களா என்ற ஒரு கேள்வியும் உண்டு. ஊடுருவல் தாக்குதல்களிலிருந்து உண்மையான பாதுகாப்பு அவ்வாறு நடைபெற்றால் அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த பதில் நடவடிக்கை எடுக்கக்கூடி ஆற்றலில் தான் உள்ளது.
அதாவது சிறீலங்கா படைகளோடு குறைந்தபட்சம் இராணுவச்சம நிலை தேவை ஆனால் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிகள் தொடர்ந்தாத்தான் அந்த குறைந்தபட்ச சமநிலை பேணப்படும். இந்த பதில் தாக்குதல் திறமை தனியே இராணுவ வலிமையில் அன்றி பொருளாதாரா இராஜதந்திரரீதியிலும் காலப்போக்கில் வழர்த்தெடுக்கப்பட வேண்டும். முக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட தமீழத்தின் மீதான சதிகளை வலிந்து தாக்குதல் முயற்சிகளை தெளிவாக ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துகிற பக்குவத்தை அடைய வேண்டும்.
ஈழப்போர் 3 முடிவிற்கு வந்ததற்கு ஒரு காரணம் தொன்பகுதி மக்கள் பெருமளவில் யுத்தத்தில் நம்பிக்கையிழந்ததால். கட்டுநாயக்கா போன்ற தாக்குதல் மற்றும் இறந்த அங்கவீனமுற்ற படைகள் சாதாரண தென்பகுதி மக்கள் மத்தியில் உருவாக்கிய உளவியல்த் தாக்கம். போரினால் சீரழிந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டிருந் தனியார்துறை. இவைதான் தமிழீழத்திலிருந்து ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட்டபின்னர் ஊடுருவல் தாக்குதல் மற்றும் வலிந்து தாக்குதல் முயற்சிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவ முடியும். அதாவது புலிகளின் பதில் தாக்குதலின் உக்கிரத்தால் ஏதிர்கொள்ள வேண்டிய எதிரொலிகள் பக்கவிளைவுகள் தான் ஊடுருவல் தொல்லைகளிற்கு பாதுகாப்பு. அத்தோடு புலநாய்வு மற்றும் முறையடிப்பு ஆற்றல்களும் மிகமுக்கியம்.
பெரும்பான்மையான சிங்கள மக்களை தமிழீழம் என்ற ஒன்றை ஏற்று தமிழ்மக்களை சுயமரியாதையுடன் வாழ அனுமதித்தால் தான் தாமக்கு ஒரு வாழ்வு உண்டு என்ற உண்மையை நிரந்தரமாக உறைக்கவைக்கிற போராக தமிழீழப் பிரகடனத்திற்கு முன்னரான இறுதிப்போர் இருக்க வேண்டும். ஆனால் சிறீலங்காவில் இராணுவ சர்வாதிகார ஆட்சிவந்தால் இந்த பாதுகாப்பு இருக்காது. அந்த சர்வாதிகாரத்திலிருந்து சிங்கள மக்களை மீட்கிற பொறுப்பும்.. :roll: :?
தமிழீழத்தின் பொருளாதார வழர்ச்சிக்கு அதன் அனைத்துப்பகுதிகளும் மிக முக்கியம். ஒவ்வொன்றிற்கும் பிரத்தியோக முக்கியத்துவமும் பயன்பாடும் உண்டு. முழுக்கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பிரதேசம் புலிகளின் இராணுவ பலத்தை கட்டியெழுப்பவும் விருத்தி செய்யவும் உதவுகிறது. மிக முக்கியமாக மரபுவழி போர்திறனை வழர்க்க தேவையான ஒன்று. ஆனால் இதே பாணியில் தான் தமிழீழத்தையும், அதன் பொருளாதார நிர்வாகக் கட்டமைப்புகளையும் அங்கீகார நிலைக்கு கட்டியெழுப்ப ஒரு சிறிய பகுதியை உயர்பாதுகாப்பு வலையமாக வைத்து பூர்த்தி செய்ய முனைவது சரியா?
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
நீங்கள் கூறுவது போல் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரரீதியில் நாம் பாரியளவு முன்னேற்றமடைய வேண்டும். தமிழீழத்தின் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள அவற்றை தொடர்ச்சியாக பேண வேண்டும். இதற்கு முக்கிய பங்களிப்பை புலம் பெயர்ந்தவர்களால் தான் செய்ய முடியும். புலத்திலுள்ள ஒவ்வெரு தமிழனின் ஆர்வமும் உணர்வும் வெல்லப்பட வேண்டும். முக்கியமாக புலத்தில் பிறந்து வளர்ந்து வருகிற (அல்லது சிறுவயதில் வந்த) இரண்டாம் தலைமுறை மனோபாவம் கொண்டவர்களிற்கும் முதலாம் தலைமுறைகளின் மனோபாவத்திற்கும் இடையிலான இடை வெளி குறைக்கப்படவேண்டும். இங்கு முதலாவது தலைமுறை என்று கூற முனைவது போரின் வடுக்களை எதிர் கொண்டவர்;களை இனவாதத்தை அனுபவித்தவர்களை. இரண்டாம் தலைமுறை என கூறவருவது போராட்டத்தின் தேவையை நியாயத்தன்மை செந்த வாழ்வின் அனுபவங்களின் மூலம் உணரக்கூடி சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்.
முதலாவது தலைமுறையினர் இரண்டாந்தலைமுறை மனோபாவம் உள்ளவர்களை துரோகிகளாக பார்க்கும் மிகுந்த வேதனைக்குரிய நிலையில் இன்று நாம் உள்ளோம். இரண்டாந்தலைமுறையின் நிலையிலிருந்து பார்க்கும் போது நியாயமாகப்படுகிற எண்ணங்கள் கேள்விகள் முதலாவது தலைமுறையால் போராட்டத்தை கொச்சைப்படுத்த கேலிப்படுத்த முனைவதாகப்பார்க்கப்படுகிறது. அதற்கும் மேலாக ஒருவித அர்ப்பணிப்பு அற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். முதலாவது தலைமுறை காட்டும் வெறித்தனமான அர்பணிப்புக்களை சொந்த அனுபவங்களிற்கு பழிவாங்கும் மனநிலையின் வெளிப்பாடு தானா என எண்ணவைக்கிறது. அந்த எண்ணங்களை உருவாக்கக்கூடிய விதத்தில் முதலாம் தலைமுறை புலத்து போராட்ட ஆதரவாளர் தொடர்ந்து நடந்து கொண்டால் இரண்டாந் தலைமுறையின் முக்கிய பங்களிப்புகளை தமிழீழம் பெறுவது கடினமே.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நீங்கள் மேற்குறிப்பிட்ட ஐந்தும் ஒரு நாட்டுக்கு முக்கியமானது என்பது உண்மைதான். ஆனால் இவற்றில் எவை எம்மிடம் நிறைவாக உள்ளனஇ என்பதில் தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது.
1... சிறப்பான தலைமை
நிச்சயமாக சிறப்பான தலைமை உள்ளது. இந்த தலைவரின் வாழ்நாட்களுக்குள் தனிநாடு உருவாகாவிட்டால் பிறகு அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கருணாவும்இ மாத்தையாவும் இதனை விளக்க போதுமான காரணங்கள்.
2....அரசியல்ஃசட்டம்
பேச்சுவார்த்தைஇ போர்நிறுத்தம் என்று வந்தபிறகு விடுதலைப்புலிகள் காட்டிய அரசியல் முதிர்ச்சியும்இ சட்ட அறிவும்இ தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சட்ட அமுலாக்கலும்இ ஒரு முதலாம் உலக நாட்டுக்கு நிகரானவை.
3.....ராணுவம்ஃபாதுகாப்பு
விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும்இ இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள்இ சர்வதேச கடற்பரப்பிலிருந்துஇ வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும்இ முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும்இ ஆயுத பலத்திலும் பார்க்கஇ அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.
4.....புலனாய்வு
விடுதலைப்புலிகளின் புலனாய்வு சிறந்தது என்ற பெயர் இருக்கிறது. ஆனால்இ ஒரு மாத்தையாவும்இ ஒரு கருணாவும்இ தலைமைக்கு மிகவும் நெருக்கமாக உருவான நிலையும்இ நிலைகொண்ட காலமும்இ ஊடுருவித்தாக்குதல் செய்தவர்கள்இ தளபதிகள் பலரை பலி கொண்ட சம்பவங்களும்இ புலனாய்வு துறையையே தமிழீழத்தில் இன்று மிகவும் பலவீனமான துறையாக காட்டுகின்றன. இந்த துறை உறுதியாகவும்இ வேகமும்இ விவேகமும் உள்ளதாகவும்இ இருப்பது அத்தியாவசியமானது.
5......நிதிஃ முதலீடுகள்ஃ வருவாய்
சர்வதேச கடன்வசதிகளும்இ நிதிகளும்இ அன்பளிப்புகளும்இ நாட்டின் முழுமையான பொருளாதாரமும்இ அள்ளி வழங்கிய பணத்தில் யுத்தம் புரிந்த இராணுவத்துக்கு சமமாக ஆயுதங்களும்இ ஆள்பலமும் கொண்டுஇ ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து கொண்டு மோதிய விடுதலைப்புலிகளுக்கு தெரியாத பொருளாதாரமா? இந்த நிலையிலேயேஇ இவ்வளவுக்கு நிதியும் சேர்த்துஇ முதலீடுகளும் செய்ய அவர்களால் முடிகிறது என்றால்இ ஒரு நாடாக இயங்க ஆரம்பித்தவுடன் பொருளாதாரத்துறையில் அவர்கள் மேலும் சிறப்புடன் செயற்படுவார்கள்.
ஆகவே இராணுவ தொழில்நுட்பத்திலும்இ புலனாய்வில் எல்லாவகையிலும் நிறைய முன்னேற வேண்டும் என்பதேஇ எனது கருத்து.
_________________
யுட் அண்ணா நீங்களா????? நம்ப இயலாமால் இருக்கு
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
இந்தியாவின் வெளிப்படையான தலையீட்டிலிருந்து பாதுகாப்பு இந்தியவின் பொருளாதார அபிலாசைகள். அத்தோடு சீனா போன்ற பிராந்திய பொருளாதார சக்திகளிடமிருந்து எதிர்கொள்ளும் சவால்கள் போட்டிகள்.
புலிகளோடு நேரடியாக ஒரு யுத்தத்தில் தனது வான்படையோ அல்லது கடற்யை ஈடுபடுத்தி இறங்குவதன் மூலம் இந்தியவின் நிலமை அமெரிக்கா இன்று எதிர்கொள்ளும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை விட மோசமாக இருக்கும்.
புலிகள் என்றுமே இந்தியாவை எதிரிகளாக பார்த்ததும் இல்லை பார்க்கப்போவதும் இல்லை. ஊழல்களற்ற பொறுப்புள்ள பக்குவமான நிர்வாகக்கட்டமைப்பிற்குள் உள்ள புலிகளை சதிகள் மூலம் சிதைக்கலாம் என நினைப்பது கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிவதற்கு சமன்.