Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள இனவாதத்தின் ஓலம்!!
#1
பிரபாகரனுக்கு ஈழம்; தொண்டமானுக்கு மலையகம்; ஹக்கீமுக்கு முஸ்லிம் தேசம் சிங்களவர்கள் சிவனொளிபாதமலையை தரிசிக்க ஆறுமுகத்திடம் விசா பெறும் நிலை வரும்

ரணில் உடன்படிக்கை செய்திருப்பதாக ஹெல உறுமய கண்டனம்

பிரபாகரனுக்கு தனித் தமிழீழம் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலைநாடு, ஹக்கீமுக்கு முஸ்லிம் தேசம் வழங்குவதாக உடன்படிக்கைகளை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக முயல்கிறார். இதற்கு சிங்கள பௌத்த மக்கள் இடமளிப்பதா என்பதை சிந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென தெரிவிக்கும் சம்பிக்க ரணவக்க, ரணில் ஜனாதிபதியானால் சிவனொலி பாதமலையை தரிசிக்க சிங்கள மக்கள் ஆறுமுகனிடம் விசா பெறும் நிலை உருவாகுமென்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று சனிக்கிழமை மஹரகம நகர சபை மைதானத்தில் ஜாதிக ஹெல உறுமய நடத்திய பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அதன் கொள்கை வகுப்பாளர் சம்பிக ரணவக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்ற தனி நபரை வெற்றி பெறச் செய்வது எமது நோக்கமல்ல. ஒற்றையாட்சியின் கீழ் சமஷ்டி முறை என்ற கோட்பாட்டை ஒழித்து அதனை ஏற்றுக் கொண்ட கொள்கையை வெற்றிப்பெறச் செய்வதே எமது நோக்கமாகும்.

ரணில் வென்றால் அது பிரபாரகன், ஆறுமுகன், ஹக்கீமின் வெற்றியாகும். இதன் மூலம் இனங்கள், நாடு பிளவு படும் இதன்போது இரத்த ஆறு ஓடும் இதனை மக்கள் விரும்புகிறீர்களா என்பதை தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும்.

நாக தீபவிலிருந்து தீகவாபிவரை உள்ள பிரதே சங்கள் சிங்கள பௌத்தர்களுக்கே உரிமையானது இதனை யாராலும் பிரிக்க முடியாது களையவும் முடியாது.

வட, கிழக்கிலிருந்து 6 இலட்சம் வாக்குகளை பிரபாகரன் பெற்றுக் கொடுப்பாரென ரணில் கனவு காண்கிறார். அது ஒரு போதும் நிறைவேறாது. தற்போது அவசர காலச் சட்டம் அமுலில் இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையாளரும், இராணுவத்தினரும் கள்ளவாக்குப் பதிவை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று கருணாவிடம் மண்டியிட்டு தமது பயணங்களைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத புலிகளால் கள்ள வோட்டு போட முடியாது.

விடுதலைப் புலிகளால் இன்று யுத்தத்தை ஆரம்பிக்க முடியாது அந்தளவிற்கு கட்டுண்டு போயுள்ளனர். எனவே, மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்படுமென்ற மாயைக்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

ரணில் வெற்றி பெற்றால் ஒஷாமா பின்லேடனுக்கு கிழக்கு மாகாணத்தை தாரைவார்க்க வேண்டிய நிலை உருவாகும்.

இலங்கையின் கடைசி அரசனை காட்டிக் கொடுத்தவர் தோம்பி முதியன்சே . இவர் யார் ரணிலின் மூதாதையர்கள். அவர்களுக்கு வழி வகுத்தால் நாடு பிரியும். ஆறு முகன் தொண்டமானினாலோ, ஹக்கீமாலோ, சந்திர சேகரனினாலோ எமது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க முடியாத நிலையை சிங்கள தேசிய வாதிகள் இன்று உருவாக்கியுள்னர்.

ஒஸ்லோ உடன்படிக்கையில் உள்ள உண்மையை ரணில் சிங்களத்தில் வெளியிட வேண்டுமென்று சவால் விடுக்கின்றேன். அப்போது உங்களுக்கு உண்மை புரியும் என்றும் சம்பிக் ரணவக்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் அங்கு பேசும் போது;

ஐ.தே.கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ வெற்றி பெறச் செய்வது எமது நோக்கமல்ல, கொள்கையுடனான சிங்கள பௌத்த தேசியத்தை வெற்றி பெறச் செய்வதே எமது நோக்கமாகும். எனவே, அதற்கு எதிராக செயற்படும் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக் கொண்ட மகிந்தவை ஆதரிக்க நாம் முன் வந்தோம் என தேரர் தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் அங்கு பேசும் போது கூறியதாவது:

இன்றை காலம் சவால் நிறைந்த காலம். துட்டகைமுனு பாதுகாத்த எமது ஒற்றையாட்சி முறையை பாதுகாத்து சமஷ்ட்டி முறையை அழிப்பதே எமது நோக்கமாகும். உணவு, உடை, சுகாதார வசதிகள் எமது முக்கியமல்ல, நாடு பிரிவுபடாமல் இருந்தால் தான் அதனை மேற்கொள்ள முடியும். அதற்காக ஒன்று படுங்கள் என இங்கு பேசிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

நன்றி ஞாயிறு தினக்குரல்
http://www.thinakural.com/New%20web%20site...Important-4.htm
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)