10-14-2005, 04:15 AM
பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளில் நேற்று வியாழக்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது அங்கு பணியாற்றிய 48 தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரனையின் பின்பு இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த அரிசி ஆலைகளில் பணியாற்றுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டது
இதேவேளை பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலைகளில் பணியாற்றும் தமிழர்கள் தொடர்பான விபரங்களை காவல்துறையினர் உரிமையாளர்களிடம் பெற்றுள்ளனர்.