10-19-2005, 09:02 PM
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ரகளை: அமைச்சரைத் தாக்கிய எம்.பி. ஒரு வாரம் சஸ்பெண்ட்
சிட்னி, அக். 20: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமைச்சரைத் தாக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒரு வாரத்துக்கு அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நியூசவுத்வேல்ûஸச் சேர்ந்த சாலைகள் துறை அமைச்சர் ஜோ திரிபோடி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பேசிக்கொண்டிருந்தார். தன்னுடைய தொகுதிக்கு அரசு போதிய வசதிகளைச் செய்யவில்லை என்று நேஷனல் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஆண்ட்ரூ பிரேசர் அப்போது அமைச்சர் மீது குற்றஞ்சாட்டினார்.
உறுப்பினரின் தொகுதியில் சாலை மேம்பாட்டுப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நேரில் கடந்த வாரம் சென்றேன், அப்போது அவர் தொகுதிக்கே வரவில்லை என்று அமைச்சர் அவருக்குப் பதிலடி கொடுத்தார். உடனே கோபமடைந்த பிரேசர் அமைச்சரை நோக்கிப் பாய்ந்தார். அவருடைய சட்டையைப் பிடித்து உலுக்கினார். ""நான் என்ன மட்டமா, என்னுடைய தொகுதிக்கு எதுவும் செய்யமாட்டீர்களா'' என்று கேட்டார்.
மேற்கொண்டு ரசாபாசம் ஆகிவிடாமல் நாடாளுமன்ற அவைக் காவலர்கள் ஓடிவந்து உறுப்பினரைப் பிடித்து இழுத்து அமைச்சரைக் காப்பாற்றினார்கள். பிறகு அமைச்சரின் அறைக்குச் சென்ற பிரேசர் அங்கும் இதே போல கத்தி கூச்சல் போட்டார். அமைச்சர் நல்ல வேளையாக டேபிளுக்கு எதிர்ப்புறத்தில் போய் பாதுகாப்பாக நின்று கொண்டார். அங்கு அவருடைய மெய்க்காவலர்கள் வந்து உறுப்பினர் நெருங்கிவிடாதபடி பார்த்துக் கொண்டனர்.
எல்லாம் முடிந்த பிறகு உறுப்பினர் ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->