Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவிப்பு
#1
<span style='font-size:25pt;line-height:100%'>மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு யாழ். பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவிப்பு</span>

[செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2006, 04:01 ஈழம்] [யாழ். நிருபர்]

<b>மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவித்து அறிக்கையொன்றினை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பில் யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கை:

பொங்கியெழும் மக்கள் படை
யாழ். மாவட்டம்,
10.04.2006

அன்பார்ந்த தமிழீழ உறவுகளே

மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு வருந்துகின்றோம்.

இன்று மாலை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினர் மீது எம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக கியூடெக் நிறுவனத்தின் மனிதநேய பணியாளர்கள் இருவர் சிக்குண்டு உயிரிழந்தையிட்டு நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.

இவர்களுக்கு எமது அஞ்சலியை தெரிவிப்பதோடு, இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை சார்பாக எமது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். தவிர்க்க முடியாத சூழலினால் ஏற்பட்ட இழப்பிற்காக வருந்துகின்றோம்.

எமது தாயக நிலத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவ முகாங்களுக்கும் அருகில் இருப்பதையோ அல்லது அவர்களுடைய வாகனங்களுக்கும் அருகாகச் செல்வதையோ முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் பேசும் உறவுகள் எமது தாயகப் பூமியில் எங்கு தாக்குதலுக்கு உள்ளானாலும், கொல்லப்பட்டாலும் அதற்கு பொங்கியெழும் மக்கள் படை தனது பதிலடியை கொடுத்தே தீரும்.

துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைகின்றோம் அவர்களை முடக்குகின்றோம் ஜெனீவாவில் வாக்குறுதியளித்த இலங்கை இனவாத அரசாங்கம், இன்று தனது புலனாய்வு அமைப்பு மற்றும் இராணுவ இயந்திரத்தை வைத்து இந்த ஆயுதக் குழுக்களை பாதுகாத்து வைப்பதோடு மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுக்கள் தமது அலுவலகத்தை வெளிப்படையாகவே திறப்பதற்கு சகல வழிகளையும் செய்து கொடுத்துள்ள இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள் தனமாது.

வரும் நாட்களில் இராணுவத்தினராலோ அவர்களது புலனாய்வு அமைப்பினராலோ அன்றி துணை இராணுவக் குழுக்களாலோ எமது மக்கள் தாக்கப்படுவார்கள் ஆனால் எங்கள் வழியில் சென்று நாம் தொடர்ந்து பதிலடி கொடுப்போம், எமது தாக்குதல்களை தீவிரமாக தொடுப்போம். </b>

பொங்கியெழும் மக்கள் படை
யாழ். மாவட்டம்.

நன்றி:http://www.eelampage.com/?cn=25409
[b]
Reply
#2
இறந்த இரு தமிழ் உறவுகளுக்கு மட்டும் எனது கண்ணீர்
அஞ்சலி Cry Cry Cry
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)