Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தீவிர இலக்கியம் என்றால் எப்படிப் பொருள்படுகின்றது.சாதாரண இலக்கியத்திற்கும்(பொதுசன அல்லது வெகுசன இலக்கியத்திற்கும்) இதற்கும் என்ன வித்தியாசம்.
யாராவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்
\" \"
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
திலகபாமா:
Quote:எனக்குத் தெரிந்து என் பார்வைக்கு வந்ததில் கடந்த இரண்டாண்டுகளாக புதிய புத்தகங்களில் வாசிப்பின் மேல் ஒரு தொடர் சலிப்பு ஏற்படிருந்தது
நவீனம் , தீவிர இலக்கியம் எனும் பெயரில் ஒரு பக்கம் மேலைத் தேய நாடுகள் தூக்கி எரிந்த விடயங்களை இதுவரை இங்கு காணாத ஒன்றாக இருந்ததினாலேயே புதிய ஒன்றாக அல்லது மறைக்கப் பட்ட நிழலுக்குள்ளிருக்கும் விசயங்களை கட்டுடைத்து வெளிக் கொண்டு வருவதாக சொல்லி ஒருவகை அதீதங்களை கையிலெடுக்கும் போக்கு தரும் அதிர்ச்சியும் புதிதாய் தலையெடுக்கும் இளைஞர்களின் ஒட்டு மொத்த சிந்தனைப் போக்கை தான் கைக்கொள்ள நினைக்கும் அந்நிய நாடுகளின் திக்கங்களுக்கு , சிந்தனைகளை முளையிலேயே குறைப்பிரசவமாக்கிவிட அவர்கள் போடும் எழும்புத் துண்டுகளுக்காக விலை பேசும் இலக்கிய பத்திரிக்கை எனும் போர்வையில் நாட்டின் பெருமையை அடகு வைக்கும் இலக்கிய அறிவில்லாது ஏன் சமுதாய பிரக்ஞை துளி கூட இல்லாது வெறும் வியாபார தந்திரங்களில் “அடக்குமுறைக்கெதிராக, வன்முறைக்கெதிரான” எனும் கோசங்களின் பின் செயல்படும் சிற்றிலக்கியப் போக்கும் இவற்றை வன்மையோடு ஓன்று கூடி எதிர்த்து விட முடியா நேர்மையான சிந்தனையாளர்களின் இலக்கிய வாதிகளின் இயக்கவாதிகளின் ஒற்றுமையின்மையும் அவ்வொற்றுமையின்மையாள் அவர்கள் நல்ல விசயங்களை நிலை நிறுத்த முடியாமல் போன போக்கும் தந்திருந்த சலிப்புக்கிடையில் இன்னமும் அவ்வப் போது சில புத்தகங்கள் வந்து என் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கின்றன.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
தீவிர இலக்கியம்:
Quote:நேர்காணல் : கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
கே: தீவிர இலக்கியம் என்றால் என்ன?
பதில் :
பல்வேறு வகை வாசகர்கள் பல்வேறு வகை மனத்தளங்களில் இயங்குகிறார்கள்.
ஒருவருடைய மனத்தினுடைய உயரம் என்பது இன்னொருவரின் மனத்தின் உயரம் போன்று இருக்காது. உலகம் பலவகைப்பட்டது. ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள்.
ஆழ்ந்த இலக்கியம் என்பது மனம் முதிர்ந்த வாசகர்களுக்காக வாழ்க்கையினுடைய உண்மைகளை ஒரு விசாரணையின் மூலம் தேடிக் கண்டுபிடித்து இப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என்பதைச் சொல்கிறது.
சா.கந்தசாமி, ஜெயமோகன், சுந்தரராமசாமி, ஜானகிராமன் போன்றோரின் நாவல்களைப் பார்த்தால், அவற்றில் வாழ்க்கையைப் பற்றிய விசாரிப்பு இருக்கும். வாழ்க்கையின் ஆழ்ந்த தத்துவங்கள் அவர்களின் நாவல்களில் இருக்கும். உலகில் மனிதன் பிறக்கிறான், ஒருநாள் இறக்கிறான். இடையில் இருக்கும் வாழ்க்கையில் பல்வேறு வகையான கருத்துப்போக்குகள், உணர்ச்சிகள் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப்பற்றிய ஆழ்ந்த விசாரணையாக அமைவது ஆழ்ந்த இலக்கியம்.
மேலோட்டமான எழுத்து என்று ஒன்று இருக்கிறது. அந்த வாசகத் தளத்தில் இருப்பவர்களுக்கு அத்தகைய எழுத்து தேவையானதாக இருக்கும். அவர்களுக்காக அத்தகைய எழுத்து வரும். ஆனால், அவை இலக்கியமாகா. அதே சமயத்தில் இன்றைக்கு இருக்கிற பல நவீன இலக்கியவாதிகள் ஏதோ சொல்லவருவதாக நினைத்துக்கொண்டு யாருக்கும் புரியாத மொழியில் ஒரு போலி இலக்கியம் செய்து, பம்மாத்துசெய்வதும் இலக்கியமல்ல. இலக்கியத்துக்கு நாம் இலக்கணம் வகுத்து, இப்படித்தான் இலக்கியம் என்று சொல்வதைவிட கு.ப ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன் போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் எழுதியதைப்போன்ற எழுத்துக்கள் இலக்கியம் என்று சொல்லலாம்.
இவை ஏன் இலக்கியத்துக்கான இலக்கணம் என்றால் இவர்கள் வாழ்க்கையைப் பற்றிய விசாரணைகளில் இறங்குகிறார்கள். இவர்களின் எழுத்தைப் படிப்பதன் மூலமாக நமக்கு உள்ளுணர்வில் ஒரு மேம்பாடு ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை அத்தகைய தளத்தில் சொல்வது இலக்கியம் ஆக முடியும்.
எல்லாம் இலக்கியம் என்று சொல்லமுற்பட்டால் மர்ம நாவல் கூட இலக்கியமாகிவிடும். அவை எல்லாம் தமிழ் எழுத்தின் வகைகள் என்று சொல்லலாம். எல்லா விதமான எழுத்துக்களும் தேவைதான். அவற்றையும் சிலர் விரும்பிப் படிப்பார்கள். சமூகவிரோதம் இல்லாத எழுத்து எதுவாக இருந்தாலும் அது சமுதாயத்திற்குத் தேவைதான்.
தற்போது பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு உடையவர்கள் பலர் எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்து நேரடியாக, கருத்துகளை அப்படியே சொல்வதுபோல் இருக்கிறது. அவர்கள் இலக்கிய வடிவத்தைவிடக் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, சின்னப்பபாரதி போன்றோர் அதை அடக்கி வாசிக்கிறார்கள். பொதுவுடைமைக் கருத்துகளை வெளியில் துருத்திக்கொண்டு நிற்காமல் உள்ளடங்கிக் கொடுப்பதால், அவை இலக்கியமாகின்றன.
ஒரு விஷயத்தை இலக்கியம் அல்லது இலக்கியமல்லாதது என்று பிரிப்பது எப்படி என்றால், அந்த இலக்கியம் மனித வாழ்விற்குப் பயன்படுகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தது. நான் பொதுவுடைமைவாதி அல்ல. ஆனால், நான் பொதுவுடைமை சார்ந்த இலக்கியத்தை ரசிக்கிறேன். கொண்டாடுகிறேன். இதற்குக் காரணம், எல்லோருக்குமே ஏதாவது ஒரு வயதில் பொதுவுடைமைக் கண்ணோட்டம் இருந்திருக்கும். உழைப்பாளிகளும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியான வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்பது ஒருவகையில் பார்த்தால் வள்ளலாரின் தத்துவம்தான். ஆகையால், அடிப்படையில் அதில் எனக்கு எந்தவித வேறுபாடும் இல்லை. கட்சிசார்ந்து நான் இயங்கவில்லை. அந்தக் கருத்தின் தாக்கம் எல்லோருக்கும் ஏன் மனித குலத்துக்கே, இருக்கிறது. நம் தேசப் பிதா காந்தியின் லட்சியத்தைப் பார்த்தால் அதுவும் பொதுவுடைமை இலட்சியத்துடன் தான் இணையும். ஆனால், வழிகள் தாம் வெவ்வேறு.
எல்லா இலக்கியப் போக்குகளும் தமிழுக்குத் தேவைதான்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
வெப்தமிழன்:
Quote:எழுத்து வன்முறை
-திலகபாமா (mathibama@yahoo.com)-
தீவிர இலக்கியம் , சிற்றிதழ்களில் இலக்கியம் என்ற பெயரில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?. இந்த வார்த்தைகளை சொல்பவர்கள் இலக்கியமாக எதை நிறுவப் பார்க்கிறார்கள்? “ காலச் சுவடுக்கு கண்டனம்” தெரிவித்த அதே மாதத் தொடர்ச்சியில் உயிர்மையில் கட்டுரை, புதிய பார்வையில் அதே தினுசில் கவிதை கள் தொடர்ந்து கைக்கு வந்த சில கவிதைத் தொகுப்புகள் யவனிகா ஸ்ரிராமின் “ கடவுளின் நிறுவனம்,” இன்று என் கைகளில் கிடைத்த “புது எழுத்து” என எல்லா பத்திரிக்கைகளுமே பின் நவீனம் என்கின்ற பெயரிலும் நவீனம் எனும் பெயரிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
வார்த்தைக்ளுக்குள்ளும் வார்த்தைகளில் வழிய விட்ட வக்கிரங்களோடும் இருக்கும் எழுத்துகளையே பிரசுரித்து அதன் பத்திரிக்கை போக்கை தீர்மானிக்கின்றனவா? இல்லை இலக்கியங்களில் பாதைகளையே தீர்மானிக்கின்றனவா?
உனக்கேன் அக்கறை? சூழ இருக்கும் நண்பர்களின் அறிவுரை கேட்கிறது எனக்கு உனது சக்தியை விரயம் செய்ய வேண்டாம் காலம் தீர்மானிக்கும் எது நல்ல இலக்கியமென்று?
காலம் தீர்மானிக்கும் உண்மைதான் . அந்த காலத்திற்கு நாம் தந்து விட்டு போவது தான் என்ன? நூறு ஆண்டுகள் கழித்து பாரதியை படித்து மகிழ்கின்றோம்.. அவனது வார்த்தைகளின் வழி அந்த கால போராட்ட வாழ்வை சிந்திக்கின்றோம். பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த காப்பியங்கள் , சங்க இலக்கியங்கள் வாயிலாக நாகரீகங்களை, வாழ்வியல் முறைகளை உணர்ந்து கொள்கின்றோம் அதே உணருதல்களையும், பெருமையையும் சொல்லும் படியாக பல தலைமுறை கடந்தும் வாசிப்பவர்கள் நினைத்து சிந்திக்கும் படியாக, இந்த எழுத்து இருக்குமா? எல்லா காலத்திலும், அந்த அந்த காலத்தில் இலக்கியம் எதுவென்று தீர்மானிக்கின்ற அளவு கோள்களும், விமரிசகர்களும் இருந்த படியே தான் இருந்திருக்கின்றனர் . எல்லா எழுத்துகளும் இலக்கியமாக அரங்கேறி விட முடியாது.
யாருக்கும் எதுவும் எழுத உரிமை உண்டு தான் . யார் கையையும் பற்றி எழுத விடாது செய்து விட முடியாது தான் ஆனால் எழுத்து என்று வந்து அச்சுக்கு வந்த பின் விமரிசிக்க நிராகரிக்க அதே அளவு உரிமை வாசகனுக்கும் சமுதாயத்திற்கும் உண்டல்லவா?
ஒடுக்கப் பட்ட மனிதனின் வலியும் வாழ்வும் இப்படித்தான் இருக்கின்றது, ஆகவே அதன் வழி வந்த எழுத்து இப்படித்தான் இருக்கும் என்று சொல்பவர்களுக்கும் ஒரு வார்த்தை.
ஒடுக்கப் பட்ட மனிதன் , சாதி சார்ந்தோ, பால் சார்ந்தோ இருப்பினும் , யாருக்கு கஞ்சிக்கு போராடும் வாழ்வு விட்டு காமத்தின் பின்னால் செல்ல நேரமிருக்கின்றது. நடுத்தர வர்க்கமோ, மேட்டுக் குடியோ எல்லாத்திலும் வலியவன் ஆதிக்கம் செலுத்துவதும், எளியவன் தாழ்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் விடயங்களே. உணர்வு தளத்தில் மனிதன் ஆதிக்க மனோபாவங்களை தொலைக்க வேண்டி செயல்படுவதும் அதற்கு தேவையான கருத்தாக்கங்களை உருவாக்குவதும் தான் இலக்கியத்தின் தேவையாக இருந்து வந்திருக்கின்றது.. ஆயிரத் தெட்டு உணர்வுப் பிரச்சினைகளின் நெருக்கடியில் நௌ¤ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு மீண்டு வருவதற்கான வழியைப் பேசுவதை விட்டு உணக்கான இலக்கியம் இது. உனக்கான வார்த்தைகள் இவை என்று இலக்கியத்திலும் அவர்கள் மேலே வந்து பொது நிலையில் கலந்து விட விடாத போக்கு தான் நிலவிக் கொண்டிருக்கின்றது.
இன்னமும் சொல்லப் போனால் இவர்கள் மேலே வந்து விட்டால் போராடுவதாய் பாவலா காட்டி பணமும் புகழும் சேர்க்க நினைக்கும் கூட்டத்திற்,கு வேலை இல்லாமல் போய் விடும் எனும் பயம் இவர்களுக்கு இருக்கின்றது.
பாலியல் வார்த்தைகளை வக்கிரங்களாக வெளிப்படுத்தும் கலாப் பிரியா தொடங்கி( பெண்ணுறுப்பை சொல்லும் வார்த்தைக்கு , கருப்பை என்று அர்த்தம் கொள்கிறாராம். இவரது தற்போதையை தொகுப்பான வனம் புகுதலிலும் , நெடுகிலும் இதே வார்த்தைகள். நல்ல நவீனம் தான். ஒரு முறைதான் நிகழும் அற்புதம் கலாப் பிரியா எனும் அடை மொழி வேறு ) யவனிகா ஸ்ரீராம் , அன்பாதவன், கண்டராதித்தன், ப்ரேம்-ரமேஷ் லஷ்மி மணி வண்ணன் , சங்கர ராம சுப்ரமணியன், ஜீ. முருகன், இவர்களை வளர்த்து விடும் காலச் சுவடு, உயிர்மை, புது எழுத்து, ஆசிரியர்கள் இவர்கள் எல்லாம் தங்கள் பெண் குழந்தைகளின் முன், மனைவியின் முன் உரத்து இந்த எழுத்துக்களைப் படிக்க இயலு,மா?
நக்கீரனும் சங்கப் பலகையும் இல்லாத காலத்தில் எது எழுதினாலும் இலக்கியம் என்று ஆகி விடுமா? காலம் தீர்மானிக்கின்ற போது தீர்மானிக்கட்டும். வாழும் காலத்தில் எது இலக்கியம் என்று நாம் ட்தீர்மானிக்க வேண்டாமா? டூன்றைக்கு விமரிசகர்கள் ஒன்று பேராசிரியர்களாகவோ? அல்லது அந்த அந்த குழுவைச் சேர்ந்த ஒரு சிலராகவோ இருக்கின்ற பட்சத்தில், இலக்கியம் எதுவெண்று அடையாளம் காட்டக் கூடிய விமரிசகர்கள் போய் சிலரைத் தூக்கவும், பிடிக்காதவர்களைப் போட்டு உடைக்கவும், மௌனங்களை எதிர்ப்புகளாய் சொல்பவர்களி ன் மௌ நங்கள் சம்மதமாய் முகம் மாற்ரி கண்பிக்க பட்டபடியும் பயன் பட்டுக் கொண்டிருக்கின்றன.
நச்சு இலக்கியம் நசிவு இலக்கியம் என்ற வார்த்தைகளை கொண்டு பேசிய ஜீவாவின் வழி வந்தவர்களோ அவர்களது இயக்கங்களும் கூட இந்த போக்குகளை கண்டு பாராமுகமாகவே இருந்து வருகின்றன.
“ நாச்சார் மட விவகாரத்திலும்”, எம்.ஜி. சுரேஷின் “சிசிஃபல்ஸ்” கதையில் மட்டுமல்ல எழுத்து வன்முறை . ஒரு சமுதாயத்தை , அதன் போக்கை பிரதி பலிக்க வேண்டிய எழுத்து , விதி விலக்குகளை தூக்கிக் கொண்டு பேசுவதும், எல்லா விடியல்களுக்கும் தானே காரணம் என்று கொக்கரிப்பதும் கூடத்தான் எழுத்து வன்முறை.
என் பார்வையில் உண்மையில் இந்த எழுத்துக்கள் எல்லாமே ஒட்டு மொத்தமான இன்னுமொரு விசயத்தையும் சேர்த்தே செய்து வருகின்றன.. பெண்ணை உடல் சார்ந்த பொருளாகவே பார்ப்பதையும், நுகர்பொருளாகவே அவள் உணரப் படுவதையுமே தான் நிறுவிக் கொண்டிருக்கின்றன.” நூறு இளைஞர்களைக்கொடுங்கள் “ இந்தியாவையே மாற்றிக் கட்டுகிறேன் என்பது விவேகானந்தரின் மிக முக்கிய அறைகூவல். ஆனால் இன்று இலக்கிய வாதிகளின் மத்தியில் ஊரறிந்த இரகசியமாக உலவிக்கொண்டிருக்கும் ஒரு கவிஞரும், பத்திரிக்கை ஆசிரியருமான ஒருவரின் அறைகூவல் என்ன தெரியுமா? “ நூறு அழகிய பெண்களைக் கொடுங்கள் , கவிதாயிணிகளாக மாற்றிக் காட்டுகின்றேன் என்பது. இவர் போன்றவர்கள் உருவாக்கிய கவிதாயிணிகள் தான் பெண் உறுப்புகளை எழுதுவதையே கவிதை என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் நெருப்பை நெஞ்சில் சுமந்து எழுதிய ஒரு சில பெண் கவிஞர்களையும் கூட இவர்கள் தன் எழுத்து போக்குகளின் பக்கம் திருப்பி இன்று இவர்களே போட்டு மிதிக்கின்றார்கள் . பாவம் இந்தப் பெண்கள் இவர்கள் கீழே போடத்தான் தூக்குகின்றார்கள். என்று அறியாமல் அவர்களை சார்ந்தே இருக்கின்ற தவறைச் செய்கின்றார்கள் பெண் சுயமாக வெளிக் கிளம்பி விடக் கூடாது. அவள் படுக்கை யறையிலும், அடுப்படியிலும் இருப்பதே சுகம், அதை பற்றியே பேசினால் போதும் என தீர்மானித்து வலை விரித்து வைக்கிறார்கள். ஆக மொத்தத்தில் பெண்ணுக் கெதிரான சதி அவர்களே அறியாமல் நடத்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றது
மொத்தத்தில் புதிய சமுதாயம், முற்போக்கான விசயங்களை சிந்தித்து விடக் கூடவே கூடாது என்று யாருடைய கைக் கூலியாகவோ சில சிற்றிதழ்களும் சில எழுத்துக் காரர்களும் இயங்கி வருகின்றனர்.
அறியப் பட்ட எழுத்தாளர்கள் கூட புத்தகம் போட்டு விட்டு அதை, கையை கடிக்காத அளவுக்காவது விற்று காசாக்கி விட பிரம்ம பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, இது போல் திசை திருப்பும் எழுத்துக்களைக் கொண்டு வருபர்கள் மட்டும், வழ வழ தாளில் பிரம்மாண்டமாகவும், கெட்டி அட்டையில் அதிக செலவிலும் புத்தகம் போட்டுக் கொண்டிருப்பது எப்படி சாத்தியமாகின்றது. இவர்களுக்கு எங்கிருந்து அதற்கான பண வசதி கிடைக்கின்றது. . நிச்சயமாக அவர்களது சொந்த உழைப்பில் விளைந்த காசில் அவை புத்தகமாகுவதில்லை. யாருடையா காசிற்கோ அவர்கள் விலை போகிறார்கள்
பண்டிகை காலங்களில் கடைகளில் அறிவிக்கப் படுகின்ற தள்ளுபடி எனும் வார்த்தை போல நவீனம், பின் நவீனம், தீவிர இலக்கியம் எனும் எந்த வார்த்தையும் இவர்களில் எழுத்துக்களினால் அர்த்தம் தொலைத்த படியே தான் இருக்கின்றன.
இந்த எழுத்துக் கெதிராக எழுத்து வடிவத்தில் மட்டுமன்றி தீவிர செயல் பாட்டின் மூலமும் களையெடுக்கும் முயற்சியை நாம் தொடங்கியே தீர வேண்டும்.
சிற்ரிதழ்கள் கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் எல்லாவற்றையும் பிரசுரிக்காது, தங்களது பத்திரிக்கைக்கான கொள்கைகளை வடிவமைக்கட்டும். ( காலச் சுவட்டில் எனது கண்டனக் கடிதம் வெளியாகியிருந்த அதே இதழிலும் , எதற்காக கண்டணம் தெரிவிக்கப் பட்டதோ அதே தினுசில் ப்ரேம் ரமேஸின் கவிதை, எதிர்ப்புகளில் குளிர் காய்வதை விட்டு திருத்திக் கொள்ள முயலாத் தனம்)பத்திரிக்கைகளுக்கு விளம்பரமும், பண உதவியும் செய்பவர்கள் அந்த பத்திரிக்கை சரியான விசயங்களை பேசுகிறதா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கட்டும். . வக்கிரங்களை எழுத்தாக வெளிப்படுத்துபோது எதிர்ப்பை வாசகர்களூம் விமரிசகர்களும் தயை தாட்சண்யமின்றி தெரிவிக்கட்டும், எதிர்ப்பில் குளிர்காய முடியாத வகையில்
வாழ்வில் இருளும் ஒலியும் தான் நிஜம், உண்மையை பேசுகின்றேன் என்பதற்காக இருளை பேசிய படியே இருப்பதை விட இருளை வெல்வதற்கான போராட்டமே வாழ்க்கை. அதை பேசுவதே இலக்கியம் . அந்த இலக்கியம் ஆதிக்க மனோபாவங்களூக்குள்ளும், உத்திகளூக்குள்ளும் சிக்காது உண்மைகளையும் உண்மை உய்ய வேண்டிய வழிகளையும் பேசட்டும். புனிதங்கள் மேட்டுக் குடிக்கு மட்டு மல்ல. எல்லாருக்குமானதாய் உருவெடுக்கட்டும்.
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
நல்லது.. பூனைக்குட்டி.. விவாதத்திற்கு உகந்த விடயங்களை வெளியிடுகிறீர்கள். ஆக்கபூர்வான விவாதத்திற்கு இவ்வாறான கருத்துக்கள் வழி செய்யும்..
|