Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உனது நினைவுகளோடு
#1
'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' அண்மையில் வெளியான காதல் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த பாடல். அது என்னையும் கடந்த காலத்துக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது. என்னையும் அறியாமல் என் மனசு அந்த நாட்களை நினைவுகளுக்குள்ளும், கனவுகளுக்குள்ளுமாய் தொலைந்து விடுகிறேன்.

தினம் தினம் இல்லாது விட்டாலும் சிலநேரங்களில் மனசை அலைக்கழித்து விடுகின்ற அவளது நினைவுகள்.... வாய்கட்டப்பட்ட பிராணியாய் அல்லாடும் என்நிலை. என்னை வாழவைத்துத் தன்னையழித்துப் போன அவளது ஞாபகங்களுக்குள்ளிருந்து என்னால் எழமுடியாத துயரில் என் ஆயுள் கரைந்து விடும் நிலையில் இன்னொருத்தியின் கணவனாக நான்.

ஏன் நாங்கள் பிரிந்தோம் ? என்னிலா அவளிலா தவறு ? இருவரும் பங்காளிகளாய் எங்களையே ஏமாற்றி ஏன் இத்தனை வலியையும் சுமையாக்கி விட்டோமோ ? அவளை நினைக்கின்ற போதுகளில் இப்படித்தான் உள்ளத்து சிம்மாசனத்தில் ஏறி
உட்கார்ந்து விடுகின்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இன்றைய திகதியை என்றுமே மறந்துவிடாத நாளாக என்னுள் கண்ணீரைக் கனப்படுத்திய நாளிது. கட்டிலை விட்டு இறங்காமல் படுக்கையில் மனசை அலையவிட்டபடி விழிகளை மட்டும் மூடியபடி படுத்திருந்தேன்.
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" நெற்றியில் முத்தமிட்டு எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி....
"எழும்புங்கோ வெளியிலை போட்டு வருவோம்....."
என் துணைவியின் அக்கறை கலந்த எழுப்பல் அது.

"எழும்புங்கோ?"
என்னை உலுக்கிப் போர்வையை இழுத்தாள்.
"விடும் கொஞ்ச நேரம் படுக்கப்போறேன்."
"இல்லை எழும்புங்கோ. இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ கனநேரம் நித்திரை கொள்ளப்படாது."
"நீர் வெளிக்கிடும். நான் அதுக்கிடையில் எழும்பீடுவன்."

அவளைச் சமாளித்துக் குளிக்க அனுப்பிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன். கண்ணுக்குள் அவள்தான் கரைச்சல் தந்து கொண்டிருந்தாள். மனசெங்கும் அந்தரத்தில்
உடல் பதற உயிர் நாடிகள் வலியில் துடிதுடித்தபடியிருக்க.... மீண்டும் அவள் வந்துவிட்டாள்.
"என்ன இன்னும் எழும்பேல்லயா? எழும்புங்கோ?" யன்னல் திரைச்சீலையை விலக்கி வெளிச்சத்தை உள்ளே வர அனுமதி கொடுத்தது போல் சூரியஒளி என் முகம் வரையும் வந்து நின்றது. உடுப்பு அலமாரியைத் திறந்து C&A கடையின் பையொன்றை என்னிடம் நீட்டினாள்.

"என்ன இது? உங்களுக்கு நேற்றொரு உடுப்பெடுத்தனான். பாருங்கோ பிடிச்சிருக்கோண்டு....?"
"இதென்ன கேள்வி நீரெடுத்தா எனக்குப் பிடிச்சதாத்தானே எடுத்திருப்பீர்...."
"சரி.. எழும்பிக் குளிச்சிட்டு வாங்கோ வெளியிலை போட்டு இண்டைக்கு ரெஸ்ரோரண்டிலை மத்தியானம் சாப்பிடுவோம்."
இத்தனை அன்பால் என்னை நனைக்கின்ற இவளுக்குக்கூட ஒரு நம்பிக்கையுள்ளவனாக இல்லாமல் இன்னும் அவளும் எனக்குள் வாழ்ந்தபடி... நினைப்புகளையெல்லாம் ஆக்கிரமித்து... அவள்...

யாரை மறக்க? யாரை நினைக்க? குழப்பமில்லாத தெளிவான பதிலொன்றையும் என்னால் சொல்லிவிட முடியவில்லை. எழுந்து விறாந்தைக்கு வந்த நான் காதல் படத்தில் என்னைக் கொள்ளை கொண்ட அந்தப்பாடல் 'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' பாடலைப் போட்டுவிட்டுக் குளியலறைக்குள் நுழைகிறேன்.

என்றுமே நீ நிம்மதியாய் இருக்கக்கூடாது என்றோ என்னவோ என் காதல் ஏழு வருடங்களுக்கு முன்னால் கரைந்து போய் இன்னும் கலையாத நினைவுகளாய் என்னைக் கலங்கடிக்கும் என் காதல். அந்தப்பாடலை எத்தனையோ தரம் கேட்டாயிற்று.... இப்போ அந்தப்பாடல் எனக்கு மனப்பாடமாயும் விட்டது. அந்தளவுக்கு என்னை ஆக்கிரமித்துவிட்ட அந்தப் பாடலைக் கேட்டபடி குளித்து முடித்து வெளியில் வருகிறேன்.

இண்டைக்கும் சோகப்பாட்டோ ? சோகப்பாட்டிலை அப்பிடியென்ன சுவையோ தெரியாது?
அப்பாவியாய் சிரித்தபடி சேரனின் ஓட்டோகிராபிலிருந்து 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை மாற்றிவிட்டாள் அவள். நம்பிக்கை தரும் அந்தப்பாடல் அவளுக்குப் பிடித்த பாடல். அதை அடிக்கடி கேட்பாள்.

"இப்பிடியான பாட்டுக்களைக் கேளுங்கோ.... மனதுக்கும் சந்தோசமாயிருக்கும்..." என்றாள்.
"எத்தனை பாட்டுக்களைக் கேட்டாலும் 'உனக்கென இருப்பேன்' பாட்டுமாதிரியில்லை" என்றேன்.
"அப்ப ஓட்டோ கிராப் 'நினைவுகள் நெஞ்சினில்' பாட்டையேன் ஓட்டோகிராப் வந்த புதிசிலை கேட்டனீங்கள்?"
"அதுவும் நல்ல சோகப்பாட்டு அதுதான்..." என்றேன் தாமதிக்காமல்.
"இப்ப வாற படங்களிலையெல்லாம் எப்பிடியாவது ஒரு காதல் ஒரு சோகப்பாட்டு கட்டாயமாய் வந்திடும்..." என்றாள் அவள். எத்தனை வாதித்தாலும் கோபமே இல்லாமல் திரும்பவும் என்னிடமே அடைக்கலமாகிவிடுகிற அவளுடன் வாதிட்டு அவளை வலிப்படுத்த விரும்பாமல் அமைதியாகிவிடுகிறேன்.

மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டு கடைகளுக்குப்போய் அவளது உறவினர்களிடம் போய் எல்லோரும் எனக்கான பிறந்த நாள் வாழ்த்துத் தந்து வீடு திரும்பிவிட்டோம். நான் கணணிக்குள் புகுந்து இணையவலை நண்பர்களுடன் உரையாடலில் இறங்க, "வெளியிலை அக்காவீட்ட ஒருக்காப் போட்டு வாறன்" என மாலை 3.30 இற்கு வெளியில் போனவள், ஐந்து மணிக்குத் திரும்பி வந்து அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுக் கேட்டாள்.

"என்ன மௌனம்?"
"இல்லை இங்கை வாரும்..." என அழைத்தேன்.
"என்ன?" என் தோழில் சாய்ந்தபடி கேட்டாள். அவளை ஆதரவாக அணைத்து அவள் தலையை ஆதரவாகக் கோதிவிட்டபடி கேட்டேன்.
"உமக்குப் பெண்குழந்தையா, ஆண் குழந்தையா விருப்பம்?"
தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தபடி கேட்டாள்....
"உங்களுக்கு?"
"எனக்குப் பெண் குழந்தைதான் விருப்பம்..." என்றேன்.
"எனக்கென்ன குழந்தையெண்டாலும் பிரச்சனையில்லை...."
"பெண்குழந்தையெண்டா நீங்கள் பேர் வைக்கிறது.... ஆண் குழந்தையெண்டா நான் பேர் வைக்கிறது. உங்களுக்கு விருப்பமான பேரைச் சொல்லுங்கோ" என்றாள்.
எனக்குள் இருந்தவளின் பெயரைச் சொல்லிவிட... அவளும் ஒரு ஆண்குழந்தையின் பெயரைச் சொன்னாள்.
"உமக்கேனந்தப் பெயர் விருப்பம்?" இது நான்.
"உங்களுக்கேனந்தப் பெயர் விருப்பம்?" கேட்டாள்.
"நல்ல பெயர் அதுதான்" என்றேன். "எனக்கும் அப்பிடித்தான்" என்றாள் அவளும்.

என் கைகளிலிருந்து விலகி புத்தகம் ஒன்றினுள் தன் சிந்தனைகளைச் சிதறவிடுகிறாள். நான் மீண்டும் இணைய வலையில் இணைகிறேன். இணைய வலையில் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த இணைய வலைத் தோழியுடன் உரையாடல் தொடர்கிறது. பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னாள் என் இணையவலைத் தோழி.

பழைய ஞாபகங்களை அவளும் மீள ஞாபகப்படுத்திவிட்டு வெற்றியின் அடையாளமான படமொன்றை அனுப்பி வைத்தாள்.
இணைய வலையில் தன் எழுத்துக்கள் மூலம் எனக்கு அறிமுகமான அவளுடன் ஒருநாள் உரையாடலின்போது என் கடந்த காதல் பற்றியும் சொல்ல நேர்ந்தது. என் வாழ்வின் மறுபக்கத்தை அறிந்து வைத்திருக்கும் இரண்டாவது ஜீவன் என் இணைவலைத் தோழிதான். என் அன்புத் தோழனின் பின்னால் இணைவலையில் கிடைத்த தோழமை இவள் தான். இணைவலையில் அறிமுகமாகும் ஆயிரமாயிரம் பேருக்குள்ளிருந்து என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக என்னைவிட நான்கு வயதால் மூத்த அவளிடம் என் சோகக் கதைகளெல்லாம் சேமிப்பாகியிருந்தது. பலதரம் 'முட்டாள் பயலே' என்றும் திட்டியிருக்கிறாள்.

"அம்மா, அப்பா, சகோதரத்துக்காகத்தான் அவளை விட்டனான்... அவள் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்... அவையளைச் சமாளிச்சிருப்பன்.... அதுக்குள்ளை கட்டுநாயக்கா நான் தாண்ட அவள் நஞ்சைக்குடிச்சு..... இப்ப இருக்கிறாளோ இல்லையோ எதுவும் தெரியாமல் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்."

"என்ரை சினேகிதன்தான் ஆசுப்பத்திரியிலை போய்ப்பாத்தவன். பிறகு ஆளைக் காணேல்லயாம். அவளின்ரை தாய் தகப்பனும் எங்கையெண்டு தெரியேல்ல. ஆனா ஒருக்கா ஒரு சாத்திரி சொன்னதாம் எனக்கு நாப்பது வயதிலை அவளை திரும்பச் சந்திப்பேனாமெண்டு. அதுமட்டும் தானிருக்கமாட்டனாமெண்டு என்ரை சினேகிதனிட்டைச் சொல்லிவிட்டிருந்தவள். சிலவேளை அந்தச் சாத்திரி சொன்னமாதிரி நாப்பது வயதிலை அவளைச் சந்திக்காட்டிலும் பறவாயில்லை. இப்ப இருக்கிறாளா? இல்லையா? எப்பிடியிருக்கிறாளெண்டு தெரிஞ்சா போதுமெனக்கு."

"எட லூசுப்பயலே, அப்பிடியெண்டா எப்பிடியடா காதலை மறந்து இன்னொருத்தியைக் கலியாணங்கட்டச் சம்மதிச்சனி....."
"எல்லாம் அம்மா, அப்பா, சகோதங்களுக்காகத்தான்... ரண்டுவீடும் பணத்திமிர் பிடிச்சதுகள். அதுக்கு நானும் அவளும் பலியாகீட்டோம். கடைசியா நான் வெளிநாடு வெளிக்கிடுறதுக்கு முதல்நாள் காலியிலை சந்திச்சனான். அப்பவும் சொன்னனான் பொறுமையா இரு, நான் திரும்பி வருவனெண்டு...."
"இல்லை நாங்கள் சேரமாட்டம். அப்பாவின்ரை ஆக்களுக்கை ஆருக்கோ என்னைக் கட்டிக் குடுக்கத்தான் அப்பா முடிவெடுத்திருக்கிறார். என்னை இப்பவே உன்னோடை
கூட்டிக்கொண்டு போ... நான் இஞ்சை இருந்தா செத்துப்போவன்."

"என்ர நெஞ்சிலை விழுந்து அழுதாள். கடைசியா நான் வெளிக்கிடப்போறனெண்டதும் ஒரு கடிதத்தைத் தந்தாள் இதை நீ விமானத்திலையிருந்து வாசிக்க வேணுமெண்டு.... அந்தக்கடிதத்தை விமானம் ஏறமுதல் உடைக்கப்படாதெண்டு தன்ரை தலையிலை தொட்டு சத்தியமும் வாங்கிக் கொண்டு போனவள்தான், போயேவிட்டாள்."

"கட்டுநாயக்காவுக்கு தனிய வந்திருந்தாள். அவளுக்குக் கிட்டவும் போகேலாமல் வீட்டுக்காறர் நிண்டிச்சினம். அம்மா அந்தப்பிள்ளை பாவமம்மா. அப்பாட்டைச் சொல்லுங்கோம்மா.... நீங்கள் சொல்றவரையும் நான் காத்திருக்கிறனம்மா... உங்களோடை கூப்பிட்டு வைச்சிருங்கோம்மா.... என்னாலை நிம்மதியா வெளிக்கிடேலாமலிருக்கு.... கண்கள் கலங்கக் கெஞ்சினேன் அம்மாவிடம்...."

"நானென்னப்பு செய்ய... அப்பாவும் அதுகின்ரை அப்பாவும் எதிரும் புதிருமாயெல்லோ நிக்கினம்.... நீ யோசிக்காதை நான் அப்பாவோடை கதைக்கிறேன்.... அம்மாவும் கண்கலங்கி என்னை ஆறுதல்படுத்தி விமானம் ஏறும் நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்ப அவளும் வந்தாள். விமானநிலையத்தில் தெரிந்தவர்களிடம் தனது குடும்ப செல்வாக்கைப் பயன்படுத்தி என்னிடம் வந்து அழுதாள். அழுதது மட்டுந்தான்... எதையும் பேசவில்லை போய்விட்டாள்."

இதயத்தில் சுமையுடன் நான்... விமானம் மேலேறுகிறது. அவளது கடிதத்தை உடைக்கிறேன். வழமையான அன்பான விசாரிப்புடன்....
'நீ இந்த நாட்டின் எல்லையைத் தாண்டும் போது நான் செத்துவிடுவேன்.... என்னால் இந்தப் பணக்கார மனிதர்களோடு உயிருடன் வாழமுடியாது. நீ எங்காவது நன்றாய் வாழவேண்டும். இதயபூர்வமாகவே வாழ்த்துகிறேன். ஒரு நஞ்சுப்போத்தலுடன் என்னை முடித்து கொள்கிறேன்....
அன்புடன்
............................'

வானுக்கும் பூமிக்கும் இடையேயான அந்தரத்தில் நான்... பதின்னான்கு மணத்தியாலங்கள் தாண்டினால் மட்டுமே நான் ஒரு நிலத்தில் இறங்க முடியும். என்ன செய்ய? ஏது செய்ய? எதுவுமே புரியாது நான்.... மனம் நிறைந்த துயரை அடக்கியபடி விமானம் தரையிறங்கும் வரையும் ஊமைக் காயத்துடனான இதயவலியை உள்ளுக்குள் பூட்டிவைத்து அன்னிய மண்ணொன்றில் கால்பதித்து.... நண்பனிடம்தான் அவளைப்பற்றி விசாரித்தேன்.

"நான் போய்ப் பாத்தனான்.... நாலு நாளாலை ஆளில்லை ஆசுப்பத்திரியிலை.... தாய் தகப்பனும் எங்கையோ போட்டினம்.... சிலவேளை எங்கையாவது வெளிநாடு வெளிக்கிட்டிருப்பினமெண்டு நினைக்கிறேன்..... நீ யோசிக்காதை..... சந்திக்கிறதெண்டு விதியிருந்தா கட்டாயம் சந்திப்பாய்..." என்றான் அவன். அவளைப்பற்றி விசாரிக்காத நபர்களேயில்லை.... ஐந்து வருசமா தேடல் விசாரிப்பு.... ஒரு பதிலுமில்லை.... ஒருநாள் அம்மாதான் சொன்னா அவள் நஞ்சு குடிச்சதிலை உயிர் தப்பேல்லயாம்.... செத்துப்போட்டாளெண்டு..... போனவருசம் அப்பான்ரை சினேகிதன்ரை மகளான என் துணையை அப்பாவின் முடிவுடன் முடிவு செய்துவிட்டு எனக்கு அறிவித்தார்கள்..... தங்கைகளினதும் தம்பியினதும் வாழ்வை காரணம் காட்டி திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்து... கொழும்பில் போயிறங்கி.... என் காதலை என் காதலியைத் தேடி... எந்தப்பயனுமின்றி அவள் எங்கேயிருக்கிறாள்? என்ன செய்கிறாள்? எதுவுமே அறிய முடியாமல்.... இன்னொருத்தியின் கணவனாகி ஒரு வருசம் முடிஞ்சிட்டுது....

"அப்ப உம்முடைய துணைவிக்குத் தெரியுமா உமக்குள்ளை இருக்கிற அந்த ஒருத்தியைப் பற்றி?"
"இல்லை!"
"ஏன் சொல்லேல்ல?"
"அந்தளவு தைரியம் வரேல்ல?"
"இந்தப் பிள்ளை எனக்காக என்னவும் செய்யும். அந்தளவுக்கு என்னை நேசிக்குது.... நம்புது... அப்பிடியிருக்க எப்பிடி அதைச் சொல்ல...?"
"முதல் ஒருத்தி காதலாலை என்னைக் கரைச்சு அழவைச்சிட்டுப் போட்டாள்.... இவளோ தன்ரை நேசிப்பாலையும், நேசத்தாலையும் என்னை ஆக்கிரமிச்சு.... எனக்குள்ளையே இருந்திட்டுப் போகட்டும் இந்த நினைப்பும் சோகமும்...."

"அனேகமான காதல்கள் தோல்வியிலை தானே முடிஞ்சிருக்கு... இனி இருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழவேணும்."
'ஒவ்வொரு பூக்களுமே" பாடலை இணையம் வழிதந்துவிட்டு மீண்டும் சந்திப்பதாய் விடைபெற்றுச் சென்றாள் என் இணைய வலைத்தோழி....

என் சுவாச அறைகளின்
சுழற்சியாய் இருந்தவளே !
காதல் வார்த்தையையே
கௌரவப்படுத்திய கற்பூரமே.

கடைசியாய் நீ தந்த கடிதம்
என்றோ நீ சொன்னது போல
கைகூடாத காதலின் சாட்சியாக....
உனது கண்ணீர் முழுவதையும்
கட்டியனுப்பிய கடலது.

கட்டுநாயக்கா நான் தாண்ட
நஞ்சு தின்ற என் காதலியே !
எங்கேயடி இருக்கிறாய் ?
கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்....
கண்ணீரைத் துடைத்தபடி நான்....

முதற் காதல் - நீ
தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள்
இன்னும் விரல்களில்....
வாசமடிக்கிறது.

கூடப்பிறந்தவர்க்கும் ,
உன்னைக் காதலிக்க
உயிர் தந்தவர்க்கும்
அர்ப்பணமாய் என் காதல்.

அம்மாவிடம் உன்னைப்பற்றி
விசாரித்தேன்.
நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.
கனவெல்லாம் என்னை நிரப்பி
உன் வாழ்வையே தறித்து
எனக்கு வாழ்வு தந்தவளே !

உன்னோடு கழிந்த
ஒவ்வொரு கணங்களும்
நினைவுக் காப்பகத்தில்
கௌரவமாக - நான்
இன்னொருத்தியின் கணவனாக.....
உன் நினைவுகளோடு.....!

<b>எழுதியவர்: சாந்தி ரமேஸ்வவுனியன்
நன்றி: தமிழமுதம்</b>


Reply
#2
உண்மையான காதல் வேதனை மனதுக்குள்ளே அழுவதும் சுகம் தான் அது நாம் மடியும் வரை எம்முடன் தான் வரும் அதன் வலிகள் சொன்னால் புரியாது தனிமையில் அனுபவிக்கவேண்டும்.உயிரில் கலந்த காதலை சொல்லும் அந்த பாடலை தனிமையில் நடு இரவில் அனுபவித்து பாருங்கள் நல்ல கதை பாராட்டுக்கள்.
inthirajith
Reply
#3
ஏன் இப்படி பல மனம் மனிதருக்குள்...??! நேற்றுத்தான் எங்கையோ அடிப்பட்டது... உண்மையா காதல் ஒரு தடவைதான் வரும் என்று... அதைத் தெளிவாச் சொல்லுது கதை... நினைவுகளை அழித்து வாழ்வில் மீள பழைய நிலைக்கு வரமுடியும் என்பது வெறும் வாதமே அன்றி...நிஜத்தில் நடக்காது..! எனவே காதலை நிதானமாகப் பண்ணுங்கோ...! மற்றவர்களின் வாழ்வோடு மகிழ்ச்சியோடு விளையாடாதேங்கோ எவருமே..! Idea

கதையும் கவிதையும் நல்லா இருக்கு....! நன்றிகள் சாந்தி அக்கா.. படைப்பை இங்கு நகர்த்திய இளைஞனுக்கும் நன்றிகள்..! தமிழமுதம் சோழியான் அண்ணாக்கும் நன்றிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இதயத்தைத் தொட்டுவிட்ட மிக அருமையான கதை. யாதார்த்த வாழ்வில் நிகழும் நிகழ்வுகள்.
ம்ம் இப்படி பல காதல்கள் பெற்றோருன் விருப்பத்தற்காக த௯டைப்பட்டு போகின்றது. காதலில் பொறுமை வேண்டும்.
பொறுமையுடனும் நிதானத்துடனும் காதலிப்பீர் வெற்றி வெறுவீர்.
இணைப்புக்கு நன்றி இளைஞன்
<b> .. .. !!</b>
Reply
#5
கதை சொன்ன விதம் உணர வைத்தது. ஒன்று போனால் இன்னொன்று என்று ஆகிட்டோ உலகம் என்று நினைச்சன். நினைவுகள் வருடம் ஜீவன்களை கூறும் கதை அருமை. நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
Rasikai Wrote:இதயத்தைத் தொட்டுவிட்ட மிக அருமையான கதை. யாதார்த்த வாழ்வில் நிகழும் நிகழ்வுகள்.
ம்ம் இப்படி பல காதல்கள் பெற்றோருன் விருப்பத்தற்காக த௯டைப்பட்டு போகின்றது. காதலில் பொறுமை வேண்டும்.
பொறுமையுடனும் நிதானத்துடனும் காதலிப்பீர் வெற்றி வெறுவீர்.
இணைப்புக்கு நன்றி இளைஞன்

காலத்தோடு எல்லாத்திலும் மாறீட்டார்கள்...ஆனா காதல் என்ற உடன பெற்றோருக்காக முறிக்கிறம்...அவைக்காக இன்னொன்றோட வாழுறம் என்று கதை விடினம்..! காதலிக்கும் வரை பெற்றோர் கண்ணுக்குத் தெரியாயினமா.. அவையைக் கேட்டா நீங்கள் காதலிக்கிறியள்...இல்லை அவையைக் கேட்டா காதல் வருகுது... பெற்றோரிலையா எப்பவும் எல்லாத்திலும் தங்கி இருக்கிறியள் இல்லையே...!

காதல் திருமணம் என்பதெல்லாம் உங்கள் சொந்த வாழ்க்கை...! அதில் உங்களுடன் பெற்றோர் இறுதிவரை வரமுடியாது..! உங்கள் நிம்மதியை அழித்து ஒரு வாழ்க்கையை பெற்றோருக்காக தீர்மானிக்கிற ஆக்கள் ஏன் காதலிக்கினம்..! பிள்ளையாக பெற்றோறை கவனிக்கனும் இறுதிவரை...அதுக்காக உங்கள் மகிழ்ச்சியை தொலைக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம்..! உன்மையில் உங்களுக்கு காதலிருந்தா பெற்றோருக்காகப் பிரிகிறம் என்று சொல்லாமல்... பெற்றோரைப் பிரிந்தாலும்... சேர்ந்து வாழ்வீர்கள்..! அப்பா அம்மா கோவம் நிலைச்சதில்லை...பிள்ளைகள் மேல்..! ஆனா காதலிக்கிற ஒரு அன்பு ஜீவனை பாதியில விரட்டிறது போல கொடுமை எதுவுமே இல்லை...! ஒருவரை வருத்தி நீங்கள் இன்னொருவருடன் எப்படி உல்லாசமா அப்பா அம்மா விருப்பத்துக்கு வாழுறியள்..போலியாத்தானே..அப்படிப் போலியா உங்களுக்க எண்ணம் இருப்பதால்தான் உங்களில் காதலிலும் உறுதியா நிற்க முடியல்ல...! இதை ஆண் செய்தால் என்ன பெண் செய்தால் என்ன...தப்புத்தான்..! மகா கொடுமைதான்..!

(இதில் வரும் "நீங்கள்" "உங்கள்" ரசிகையைக் குறிக்கவில்லை...குறித்த செயலைச் செய்பவர்களை மட்டும் குறிக்கிறது)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
குருவிகள் இதைத்தான் நானும் சொல்லவந்தன். காதலிக்கும் போது தெரியவில்லை அப்பா அம்மா இருப்பது அப்புறம் கலியாணம் என்Dஅ உடனே மாத்திரம் அப்பா அம்மாவை காரணம் கூறிகிறார்கள்.
<b> .. .. !!</b>
Reply
#8
குருவிகள் இதைத்தான் நானும் சொல்லவந்தன். காதலிக்கும் போது தெரியவில்லை அப்பா அம்மா இருப்பது அப்புறம் கலியாணம் என்Dஅ உடனே மாத்திரம் அப்பா அம்மாவை காரணம் கூறிகிறார்கள்.

உண்மைதான்........ஆனா.. அம்மா அப்பா ஒருகாலத்தில இத எதிர்ப்பினம் எண்டுட்டு காதலிக்காம இருந்திட முடியுமா?ஆண்களை விடுங்கோ.. ஒரு பெண் தன் பெற்றோரை எதிர்த்து என்ன செய்திட முடியும்.. அப்படி ஒரு நிலையில் பெண் இருக்கும்போது ஆண்தான் என்ன செய்துவிட முடியும்............

பல உண்மைக்காதல்களுக்கு சந்தோசமான முடிவு இருப்பதில்லை..

கதை மிக நன்றாக இருக்கு.... நன்றி



!
--
Reply
#9
kpriyan Wrote:குருவிகள் இதைத்தான் நானும் சொல்லவந்தன். காதலிக்கும் போது தெரியவில்லை அப்பா அம்மா இருப்பது அப்புறம் கலியாணம் என்Dஅ உடனே மாத்திரம் அப்பா அம்மாவை காரணம் கூறிகிறார்கள்.

உண்மைதான்........ஆனா.. அம்மா அப்பா ஒருகாலத்தில இத எதிர்ப்பினம் எண்டுட்டு காதலிக்காம இருந்திட முடியுமா?ஆண்களை விடுங்கோ.. ஒரு பெண் தன் பெற்றோரை எதிர்த்து என்ன செய்திட முடியும்.. அப்படி ஒரு நிலையில் பெண் இருக்கும்போது ஆண்தான் என்ன செய்துவிட முடியும்............

பல உண்மைக்காதல்களுக்கு சந்தோசமான முடிவு இருப்பதில்லை..

கதை மிக நன்றாக இருக்கு.... நன்றி

பெண்கள் எப்பவோ..கட்டுக்களை தகர்த்து வெளிய வந்து செயற்படவும் தொடங்கியாச்சு..! ஆனால் ஆண்களை ஏமாற்ற மட்டும் இன்னும் அந்தப் பழைய போர்வைக்குள் அப்பப்ப ஒழித்துக் கொள்கிறார்கள் போல...! இல்ல ஏன் இப்படியான நொண்டிச்சாட்டுகளை கொண்டு வருகினம்...உண்மையான காதல் இருந்தா..! அதுக்காக பெண்கள் மட்டுமல்ல...குறிப்பிடத்தக்க அளவு ஆண்களும் இதே காரணத்தைக் காட்டி பெண்களை ஏமாற்றினம்..அதையும் என்னென்பது..! Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
Quote:பெண்கள் எப்பவோ..கட்டுக்களை தகர்த்து வெளிய வந்து செயற்படவும் தொடங்கியாச்சு..! ஆனால் ஆண்களை ஏமாற்ற மட்டும் இன்னும் அந்தப் பழைய போர்வைக்குள் அப்பப்ப ஒழித்துக் கொள்கிறார்கள் போல...! இல்ல ஏன் இப்படியான நொண்டிச்சாட்டுகளை கொண்டு வருகினம்...உண்மையான காதல் இருந்தா..!
இது தானே வேணாங்கிறது. இன்னும் வாய்திறந்து பெற்றோர்கள் முன் பேசத்தெரியாத பெண்களும் இருக்காங்க. அப்படி பேசினாலும் அதை கண்டபடி பேசிற ஆக்களும் இருக்காங்க. இதில காதலை எதிர்த்துச்சொல்றது கஸ்டம் எல்லா அவைக்கு. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
tamilini Wrote:இது தானே வேணாங்கிறது. இன்னும் வாய்திறந்து பெற்றோர்கள் முன் பேசத்தெரியாத பெண்களும் இருக்காங்க. ..................... :wink:

நம்ம தமிழினி அக்கா போல. அவா வீட்டிலே வாய் திறந்து ஒரு கேள்வியும் கேட்கமாட்டாவமே?
( எல்லாம் யாழில் மட்டும் தான்) :wink:
[size=14] ' '
Reply
#12
Quote:நம்ம தமிழினி அக்கா போல. அவா வீட்டிலே வாய் திறந்து ஒரு கேள்வியும் கேட்கமாட்டாவமே?
( எல்லாம் யாழில் மட்டும் தான்)
அது தான் உண்மையே :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
tamilini Wrote:
Quote:நம்ம தமிழினி அக்கா போல. அவா வீட்டிலே வாய் திறந்து ஒரு கேள்வியும் கேட்கமாட்டாவமே?
( எல்லாம் யாழில் மட்டும் தான்)

அது தான் உண்மையே :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

வாயால கேட்காம கையால பேசிக் கேட்பா போல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Quote:வாயால கேட்காம கையால பேசிக் கேட்பா போல...!
சனத்தின்ர நீண்டநாள் ஆசை தீந்திட்டுப்போல. ஏதாவது முன்பகையே. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி சரி கதை பற்றிய விமர்சனங்கள் வரட்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
:roll: :roll: எதோ உண்மைக்கதை படித்த ஒரு உணர்வு இருக்கிறது.... எனோ மனத்தையும் கனக்கவைக்கிறது.. காதலில் பொறுமை வேண்டும்.... ரசிகை சொன்னது போல... பொறுமையுடன் காதல் கொண்டு வெற்றி பெறவேண்டும்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)