11-10-2005, 01:47 PM
<b>இசைஞானியா இப்படி?
-அதிரவைக்கும் நிஜம்..!</b>
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/ilayaraja01.jpg' border='0' alt='user posted image'>
<i> லண்டனில் திருவாசகம் சி.டி வெளியாவதற்கு முன்பே தமிழ் தொண்டார்வம் உள்ளவர்கள் நாற்பது லட்சத்திற்கு கஸ்பாரிடம் விலை பேசினார்களாம். விலை ஒரு பக்கம் பேசி கொண்டிருக்க இளயராஜா இன்னொரு பக்கம் சத்தமில்லாமல்..... </i>
இனம், மொழி எல்லாவற்றையும் கடந்தது இசை. அதனால்தான் திருவாசகத்தை இசை வடிவில் கொடுக்க இசைஞானி இளையராஜா முன் வந்தபோது, அதற்கு பக்க பலமாக நின்றார்கள் வின்சென்ட், கஸ்பார் என்ற இரண்டு பாதிரியார்கள். ஆனால், கேட்பவர்கள் மனசை உருக வைத்த இசைஞானி அந்த இரண்டு பாதிரியார்களின் மனசை மட்டும் பதற வைத்திருக்கிறார் என்பது எத்தனை பரிதாபமான விஷயம்?
கொஞ்சம் விளக்கமாக பார்ப்போமா? சிம்பொனிக்கு இளையராஜா இசையமைத்த பிறகு அந்த சிம்பொனியின் இசை தொகுப்பு எப்போது வரும் என்று எதிர்பார்க்காத உள்ளங்களே இருந்திருக்க முடியாது. ஆனால், இந்த வருடம் வரும்..அடுத்த வருடம் வரும் என்று நாட்களை கடத்திய ராஜா, ஒருகட்டத்தில் அந்த எண்ணத்தையே கிடப்பில் போட்டுவிட்டார். இந்த நிலையில்தான் அந்த அறிவிப்பு வந்தது. திருவாசகத்திற்கு இசைஞானி இசையமைக்க போகிறார். அது ஒலிவடிவில் உலகம் மொத்தத்தையும் தாலாட்ட போகிறது. இந்த அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ஜனங்களின் எதிர்பார்ப்புக்கும் இறக்கை முளைக்க துவங்கியது.
வின்சென்ட், கஸ்பார் என்ற இரண்டு பாதிரியார்கள் முயற்சியில் சாந்தோம் கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் பலருடைய ஆதரவில் தயாரிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்ள, மெல்ல மெல்ல வளர்ந்தது திருவாசக இசை. கூடவே அதன் வியாபார விஷயங்களும் அலசப்பட்டன.
இந்த திருவாசக இசையை யோசித்தபோதே இதை எந்த கம்பெனி தயாரித்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனையும் கூடவே வந்தது. அப்போது சோனி போன்ற பெரிய நிறுவனங்களை அணுகலாம் என்று யோசித்தாராம் ராஜா. ஆனால், திருவாசகத்திற்கு இசையா (மேலும் தமிழ் சிம்பொனிக்கா?) என்று யோசித்த பல பன்னாட்டு இசை கம்பெனிகள், இத்திட்டத்திற்கு தங்கள் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதை தெள்ளந் தெளிவாக விளக்கிவிட்டது. அதன்பிறகுதான் சாந்தோம் கம்யூனிகேஷன் மூலமாக தாங்களே அதை செய்யலாம் என்று முன்வந்தனர். ஊர்ஊராக நாடுநாடாக இசை நிகழ்ச்சி நடத்தி விற்கத் தொடங்கினார்கள்.
லண்டனில் சி.டி வெளியாவதற்கு முன்பே தமிழ் தொண்டார்வம் உள்ளவர்கள் நாற்பது லட்சத்திற்கு கஸ்பாரிடம் விலை பேசினார்களாம். விலை ஒரு பக்கம் பேசி கொண்டிருக்க இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் தன் உறவினர்களை வைத்து அதே வேறு கம்பெனியில் வியாபாரம் பேசினாராம் ராஜாவும். இரு பாதிரியார்களுக்கே தெரியாமல் லண்டன் ரைட்சை விற்றுவிட்ட ராஜா.
ஆரம்ப செலவிலிருந்து, இந்த சி.டி யின் விளம்பரம் வரைக்கும் மாய்ந்து மாய்ந்து செலவு செய்த சாந்தோம் கம்யூனிகேஷனும், மேற்படி பாதிரியார்கள் இருவரும், திருவாசக ஆதவாளர்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
உருக வைக்கும் திருவாசகத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதை....! ம்ம்ம்... என்ன சொல்வது?
-வம்பன்
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...oct/291005a.asp