Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மின் அஞ்சலில் வந்த கேள்வி
#1
சென்ற வாரம் எனது மினஞ்சலுக்கு இந்த குட்டிக்கதயும் கேள்வியும் வந்திச்சு ... ஆனா அவங்க அதில சரியான விடையை தெரிவிக்கல ... சிந்தித்து பார்த்தன் .... நல்ல கேள்வியா இருந்திச்சு .... அதனால அத இங்க எழுதிறன் ..
விட தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா .....


[size=18]வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஒரு சுற்றுலா பேரூந்து முக்கி முக்கி ஏறிக் கொண்டிருந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடியைத் தவிர! வாகனங்கள் ஒதுங்க அமைக்கப் பட்டிருந்த நிறுத்தம் வந்ததும் அந்த காதல் ஜோடிகள் இறங்கிக் கொண்டார்கள்.

தோளில் கை போட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே அவர்கள் அருகிலுள்ள கடையை நோக்கி
செல்லும்போது, மிகுந்த ஓசையுடன் ஒரு பாறை அவர்கள் வந்த பேரூந்தின் மீது விழுந்து பயணம் செய்த அனைவரும் நசுங்கி, இறந்து விட்டார்கள்.

அதிர்ச்சியுடன் திரும்பிய காதலன், "சே! நாமும் அந்த பேருந்தில் இருந்திருக்க வேண்டும்!" என்றான். அதுவரை ஆசையுடன் அவனுடன் வந்த காதலி, முதல் முறையாக அவனை வியப்புடன் நோக்கினாள்.

[size=18]<b>பாறை விழுந்து கண் முன்னே நொருங்கும் பேருந்தைப் பார்த்து, சே! நாமும் அந்த பேருந்தில் இருந்திருக்க வேண்டும் என "ஏன்" காதலன் சொன்னான்?</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஏன் என களத்தில் இருக்கும் காதலர்களை தான் கேட்கணும் போலிருக்கு. :roll:
----------
Reply
#3
பேருந்து அவர்களை இறக்கவதற்காக மட்டுமே நிறத்தப்பட்டிருப்பின் அவர்களும் அந்த வண்டியில் இருந்திருந்தால் அனைவரும் காப்பாற்ற பட்டிருப்பார்கள் எனும் உள் நோக்காக இருக்கலாம்.
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#4
அவர்கள் தற்கொலைக்கு வந்தவர்களாக இருக்கலாம், ஏனெனில் வளைந்து செல்லும்பாதையை அனைவரும் ரசிக்க இவர்கள் ரசிக்காமல் இருக்க காரனம், வாழ நினைப்பவன்தான் எதையும் ரசிப்பான்.
அல்லது
இவர்கள் இறங்காது விட்டிருந்தான் பஸ் நிண்டிராது நிற்பாட்டாமல் பஸ் பயனித்திருந்தால் கல்விழுந்த இடத்தை பஸ் சிறிது நேரத்துக்கு முன் கடந்திருக்கும்.
.

.
Reply
#5
அவளுடன் வாழப்போவதை நினைத்து பயந்து போய், அப்படி நகைச்சுவையாக சொல்லியிருப்பார் இல்லையா
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)