Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டுப் படைகளை வைத்து சிறிலங்கா படையினர் தாக்குதல்கள்
#1
<b>ஒட்டுப் படைகளை வைத்து சிறிலங்கா படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்கள்: ஆதாரப+ர்வமான அம்பலம்
</b>
<b>திங்கட்கிழமைஇ 7 நவம்பர் 2005 ஸ ஜ நசார் ஸ
சிறிலங்கா படையினர் ஒட்டுப் படைகளை வைத்து தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்துவது இப்போது ஆதார பூர்வமாக அம்பலத்திற்கு வந்துள்ளது. </b>

<b>ஒட்டுப் படையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த மூன்று இளைஞர்கள் இந்த உண்மையினை ஊடகவியலாளர்களிடம் பகிரங்கப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் இன்று பி.ப.4.00 மணிக்கு நடைபெற்றது. </b>



கறுப்பளையைச் சேர்ந்த கனகசுந்தரம் சுரேஸ் (வயது 16), மாங்கேணி மதுரங்குளத்தைச் சேர்ந்த செல்வம் பாபு (வயது 15), கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த சண்முகம் சர்வராஜா (வயது 21) ஆகிய மூவருமே இவ்வாறு சரணடைந்தவர்களாவர்.




கறுப்பாளையைச் சேர்ந்த கனசுந்தரம் சுரேஸ் கருத்துத் தெரிவிக்கையில்:-

<img src='http://img16.imageshack.us/img16/417/suresh1cd.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'>கனகசுந்தரம் சுரேஸ் (வயது 16</span>)



நான் கூலித்தொழிலான மில் வேலை மற்றும் வரம்பு வேலை செய்பவன். முறக்கொட்டான்சேனையிலுள்ள உறவினர் வீட்டில் நின்று கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிக்கந்தையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பிடித்தனர்.

பிடித்து கருணா குழு எனக் கூறும் ஒட்டுப் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஒரு நாள் இருட்டு அறைக்குள் பூட்டி வைத்தனர். மறுநாள் சித்தா மற்றும் சிலர் என்னை அவர்களுடன் இணைந்து செயற்படுமாறும் மாதம் ஆறாயிரம் ரூபாய் தருவதாகவும் கூறி கட்டாயப்படுத்தினர். பின்னர் ஆறுநாள் பயிற்சி தந்தார்கள். அதன் பின் என்னையும் வேறு ஒரு பெடியனையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான காக்காச்சிவட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.

என்னுடன் வந்த இளைஞர் விடுதலைப் புலி உறுப்பினரைச் சுட்டதும் அவரிடம் இருக்கும் அடையாள அட்டை மற்றும் பொருட்களை எடுத்து வருமாறும் கூறியிருந்தனர். இவ்வாறு வந்து தங்கி நின்ற போது தான் பிடிபட்டதாகவும் மற்றைய நபர் ஓடி விட்டதாகவும் தெரிவித்தார். தற்போது எதுவித பயமுமின்றி இருப்பதாகவும் கூறினார்.

<img src='http://img242.imageshack.us/img242/3777/papu3uz.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'>செல்லம் பாபு வயது 15 </span>

<b>மாங்கேணி மருதங்குளத்தைச் சேர்ந்த செல்லம் பாபு வயது 15 தெரிவிக்கையில்:- </b>

நான் கூலி வேலை செய்பவன். ஓமடியார் மடுவில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒட்டுப் படையைச் சேர்ந்த ராஜிகுமார், ரங்கன், மாயவன் ஆகிய மூவரும் என்னைப் பிடித்தனர்.

எங்களோடு நில்@ உனக்கு மாதம் ஆறாயிரம் ரூபா சம்பளம் தருவோம் எனக் கூறினர். பின்னர் தீவுச்சேனைக்குக் கொண்டு சென்றனர். அங்குதான் ஒட்டுப் படையினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ஐந்து நாள் பயிற்சி தந்தார்கள்.

பின்னர் வாகரை, கட்டுமுறிவுக் குஞ்சன் குளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்குக் கூட்டிச் சென்றனர். (30.10.2005) அங்கு விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆமிக்காரர்களும் வந்தார்கள். இவர்கள் சிங்களம் பேசினார்கள். பின்னர் மகேசன் என்னும் போராளி மீது கைக்குண்டை வீசி விட்டு வா. உனக்கு பத்தாயிரம் ரூபாய் தாரன். அதன் பின்பு வீட்டுக்குப் போகலாம் எனத் தெரிவித்தனர். நான் கைக்குண்டையும் எடுத்துக் கொண்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தேன் எனத் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த சண்முகம் சர்வராசா (வயது 21) தெரிவிக்கையில்:-

<img src='http://img16.imageshack.us/img16/639/sarvarasa7kk.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'>சண்முகம் சர்வராசா (வயது 21)</span>



நான் வெளிநாடு சென்று கட்டாரில் வேலை செய்தேன். அப்போது ஒட்டுப் படையிலுள்ள மார்க்கன் என்னோடு தொடர்பு கொண்டு நீ கொழும்பு திரும்பு. உனக்கு வேறு நாட்டில் நல்ல வேலை பெற்றுத் தருகிறேன் என்றார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையம் நடத்துவதாகவும் குறிப்பிட்டார். அதனை நம்பி நான் கொழும்பு திரும்பிய போது விமான நிலையத்தில் காத்திருந்த மார்க்கன் என்னை ஏற்றிக் கொண்டு தீவுச்சேனைக்குக் கொண்டு வந்தார்.

சேனபுர என்ற முகாமுக்குக் கூட்டிச் சென்று என்னை படையினரிடம் அறிமுகப்படுத்தினார். இவர் எங்களுடைய ஆள். வெளிநாடு சென்றிருந்தவர். தற்போது வந்திருக்கிறார். இவர் போக்குவரத்துச் செய்யும் போது ஒத்துழைப்பு வழங்குமாறு கூறியிருந்தார்.

பின்னர் தாக்குதலுக்குப் போகும் முன்பு படை முகாமுக்குப் போவார்கள். அங்கு ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள் எல்லாம் வழங்கப்படும்.

ஆமிக்காரர்களும் ஒட்டுப் படையினரின் முகாமுக்கு வந்த போவார்கள் எனத் தெரிவித்த சர்வராசா ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்:-

தற்போது தீவுச்சேனையில் 65 ஒட்டுப் படையினர் உள்ளனர். இவர்களில் அநேகமானோர் முதியவர்கள். தொழிலில்லாது கஸ்டப்பட்டவர்களுக்கு மாதம் ஆறாயிரம் தருவதாகக் கூறியே இணைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

திருமலையில் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான டிக்கான் மீது தாக்குதல் நடத்தியது சிறிலங்கா கடற்படையினர் தான். ஏனெனில், சிறிலங்கா கடற்படையினர் வந்து இவர்களையும் கூட்டிச் சென்றனர் என்றார்.

இறுதியாக மட்டக்களப்பு பற்பொடி கம்பனியிலுள்ள சிறிலங்கா படை புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியான குமாரசேன என்பவர் இராணுவ வாகனத்தில் ஏற்றிக் கொண்டு 25.09.2005 அன்று இரவு மண்முனை ஐந்தாம் கட்டை எனும் இடத்திற்கு என்னைக் கொண்டு வந்தனர். அங்கே மண்முனை சிறிலங்கா அதிரடிப் படையினரின் வாகனம் வந்தது. அதில் குமார சேன ஏற்றி விட்டு ஒரு ரைபிளைத் தந்து கொக்கட்டிச்சோலைக்குப் போய் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரைச் சுட்டு விட்டு வருமாறு கூறினார்கள்.

அதிரடிப் படையினர் மண்முனைக்கு வந்ததும் மீன்பிடி தோணிகளில் ஏற்றி என்னை கொக்கட்டிச்சோலைக்கு அனுப்பினார்கள். நான் விடுதலைப் புலிகளிடம் வந்து சேர்ந்தேன் என்றார்.

http://www.nitharsanam.com/?art=12878

http://www.eelampage.com/?cn=21500

http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=3458
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
ஐயோ ஐயோ...எண்ட கட்சிலையும் கனக்க பேரை பிடிச்சு வைச்சு 7000 ரூபா சம்பளம் குடுத்து வைச்சிருக்கிறதை கேள்விபட்டாங்கள், அம்புட்டும்தான் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மக்கள் வார எலக்ஸனில மகிந்த மாத்தையா சார்பா எனக்கு வோட்டு குத்தி குத்தி பிஞ்சுபோய் இருக்கிற இந்த முகத்தில காறி துப்புவாங்களப்ப.... நிதர்ச***ம்.நெட் மரமண்****கள் இப்ப அறிக்கை விடுவங்கள் பாருங்க புலி உறுப்பினர்கள் 3 இராணுவத்திடம் சரன் எண்டு.... ஐயோ ஐயோ.... :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)