Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலேரியாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
#1
<b>மலேரியாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள் </b>

மலேரியா நோயின் தாக்குதலை தடுக்கக் கூடிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக
சர்வதேச விஞ்ஞானிகள் கொண்ட ஒரு குழு தெரிவித்துள்ளது.

கமரூனில் நடந்து வரும் ஆப்பிரிக்க மலேரியா கருத்தரங்கில்
வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, தடுப்பு மருந்து
கொடுக்கப்பட்ட பிறகு 18 மாத காலம் வரை
மூளையத் தாக்கும் மலேரியாவில் இருந்து
குழந்தைகளைக் காப்பாற்றலாம் என்று தெரிவித்துள்ளது.

மொசாம்பிக்கில் நடத்தப்பட்ட சோதனையின்
அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில்,
தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன பிறகு,
தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளில் 60 சதவீதத்தினர்
மலேரியா நோயில் இருந்து காக்கப்பெற்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த சோதனை நீண்ட காலத்துக்கு செய்யப்படவில்லை
என்று விஞ்ஞானிகள் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.மலேரியாவுக்கு எதிரான
தடுப்பு மருந்து உருவாக்குவதில் கிழக்கு
ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவித
பூஞ்ஞை முக்கிய பங்கை ஆற்றும் என்றும்
விஞ்ஞானிகள் இக்கருத்தரங்கில் தெரிவித்தனர்.

bbc.com
http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)