11-22-2005, 04:03 PM
நாங்கள் தமிழ் தலிபானா?: ராமதாஸ் ஆவேசம்
நவம்பர் 22, 2005
சென்னை:
தமிழர்களிண் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீரழிக்க திட்டமிட்ட சதி நடந்து கொண்டிருக்கிறது. அதை கண்டித்து குரல் கொடுத்தால் பிராந்திய வெறி என்கிறார்கள், தமிழ் தலிபான்கள் என்கிறார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
எழுத, பேச, கருத்துக் கூற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள அதே அரசியல் சட்டத்தில் தான் சில கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் கூறப்பட்டுள்ளன.
இப்படித்தான் வாழ வேண்டும் என்பது பண்பாடு, எப்படியும் வாழலாம் என்பது விதிவிலக்கு. ஆனால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் விதிவிலக்கை வழிகாட்டியாக மாற்ற முயற்சிக்கும்போது எதிர்ப்பு கிளம்புகிரது.
நமது பண்பாட்டை வெளிநாட்டவர்கள் போற்றுகிறார்கள். ஆனால், இங்குள்ளவர்கள் முற்போக்கு என்ற போர்வையில் பண்பாட்டு விரோத கருத்துக்களை கூறுவதும், அதை சிலர் ஆதரித்து வாதாடுவதும் வேடிக்கையாக உள்ளது.
தமிழர்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை சோற்றைவிட முக்கியமானது மானம் என்று கருதுபவர்கள். அதற்கு விரோதமான கருத்துக்கள் வரும்போது அதை எதிர்த்துக் கிளர்ந்தெழுவது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல.
அப்படி ஏற்பட்டிருப்பது தான் சமீபத்திய போராட்டங்கள் இவை தூண்டிவிடப்பட்டவை அல்ல. இந்த மண்ணுக்கு உரிய உணர்ச்சிகளின் அடிப்படையில் வெடித்துக் கிளம்பிய கிளர்ச்சிகள்.
தமிழ்மொழிக்கு எதிரான திணிப்பு ஏற்பட்டபோது தமிழர்கள் எப்படி கிளர்ந்து எழுந்தார்களோ, அதைப் போலவே தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு நவீனநச்சுக் கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடக்கிற போது தமிழர்கள் கிளர்ந்து எழுகிறார்கள்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் வழக்கம்போல் இதற்கும் களங்கம் கற்பிக்க முற்படுகிறார்கள்.
அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று ஒருவர் சொல்கிறார். இப்படிச் சொல்வது தவறில்லை என்கிறார்களா? திருமணம் ஆகப் போகிறவன் தனக்கு மனைவியாக வருபவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று குஷ்பு சொல்கிறார். இதை முற்போக்கானது என்று சொல்லி ஒப்புக் கொள்ளச் சொல்கிறார்களா?
தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரான நச்சுக் கருத்துக்களைப் பரப்ப முயல்வோர் தந்தை பெரியாரை துணைக்கு இழுக்கிறார்கள். பெண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று பெரியார் கூறவில்லை.
கடவுளைப் பற்றி, இந்து மதம் பற்றி பெரியார் ஏராளமாகப் பேசியிருக்கிறார். குஷ்பு விஷயத்தில் பெரியாரை துணைக்கு அழைப்பவர்கள் இந்த விஷயங்களிலும் பெரியாரின் கொள்கைகளை ஏற்கத் தயாரா?
தமிழர்களிண் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீரழிக்க திட்டமிட்ட சதி நடந்து கொண்டிருக்கிறது. அதை கண்டித்து குரல் கொடுத்தால் பிராந்திய வெறி என்கிறார்கள். தமிழ் தலிபான்கள் என்கிறார்கள்.
இந்த ஏச்சு, பேச்சுக்கள், ஏளனங்கள் தமிழ்க் கலாச்சார காவலர்களுக்குப் புதிதல்ல என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>