Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ வெள்ளப் பெருக்கு உங்கள் பங்களிப்பு என்ன?
#1
அண்மையில் பெய்த கடும் மழையால் தமிழீழத்தில் வெள்ளப் பெருக்கு பற்றிய பல செய்திகளை அறிந்திருக்கிறோம். அதற்கு சில காரணங்களாக பூமியின் வேகம் குறைந்தது, பூமி வெப்பமடைதல் என விளக்கங்கள் வைக்கப்பட்டன. வழமைக்கு மாறான அதிகளவு மழை வெள்ளப் பெருக்கை உருவாக்குவதை தவிர்க்க முடியாது என் நினைத்தாலும் கடந்த ஆண்டிலும் ஆழிப்பேரலைக்கு முன்னர் தமிழீழப்பகுதிகள் வெள்ளத்தால் இடப்பெயர்வுகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முழு அளவு யுத்தம் நடக்கும் பொழுது இவ்வாறான இன்னல்களை மக்கள் எதிர்கொள்ளுவது இன்னும் பல மடங்கு கடினம்.


பெய்யும் மழையை முதலில் கடலுக்கு சென்று விரையமாக்காமல் சரியான முறையில் வடிகால் முறைகளால் சேர்க்கப்பட்டு நீர்தேக்கங்களிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பின்னர் சிறந்த நீர்ப்பாசன முறையில் அவற்றை தேவையான காலங்களின் பயிற் செய்கைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். வழமைக்கு மாறக அதிக மழை நீர் தேக்கத்திற்கு வரும் பொழுது நீர்தேக்க படலைகளை திறந்து விடுகிறார்கள் மழை நீர் கட்டுப்பாடான முறையில் கடலைச் சேர. இந்த அடிப்படை நாம் எல்லோரும் அறிந்தது.

முறையான வடிகால், நீர்தேக்கம் மற்றும் நீர்பாசன கட்டமைப்புக்கள் வெள்ளப் பெருக்கு அவதிகளை குறைத்துக் கொள்ள மாத்திரம் அல்ல அடிப்படி உணவுத் தேவையில் தமிழீழம் தன்னிறைவை அடைவதற்கு உரிய பயிர்ச் செய்கை சவால்களிற்கு மிகவும் அவசியமான ஒன்று. தமிழீழ பொருண்மிய மேம்பாடு பற்றி புத்தகத்தில் இவை பற்றி என்ன இருக்கிறது, அறிந்தவர்கள் இங்கே பகிருங்கள்.

தமிழீழத்தின் உயிர்நாடி என்றே கூறக்கூடி இந்த மிக முக்கியமான கட்டமைப்பை வலுப்படுத்த புலம் பெயர்ந்த உணர்வாளர்களின் பங்களிப்பு அதி முக்கியமானது. இவை சார்ந்த பொறியல் துறை Civilengineering இன் பிரிவுகளான Irrigation, Drainage போன்றவையாக பார்க்கப்படுகிறது என நினைக்கிறேன்.

இந்த பின்னணியில் கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்கள், வேலை செய்பவர்கள், ஆரவமுள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)