Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாகிஸ்தான் வெற்றி
#1
இந்திய கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபையின் 75வது ஆண்டு நிறைவுவிழா சிறப்புப் போட்டியாக கொல்கத்தா நகரில் இன்று இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற பரபரப்பான கிரிக்கற் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கற்களால் வெற்றியீட்டியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 பந்துமாற்றங்கள் நிறைவில் 292 ஓட்டங்களை 6 விக்கற்களை இழந்து பெற்றுக்கொண்டது. இதில் யுவராஜ்சிங் 78 ஓட்டங்களையும்இ வீரேந்தர் சேவாக் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49 பந்துமாற்றங்கள் நிறைவில் 4 விக்கற்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் சல்மான் பட் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும்இ சொஹைப் மலிக் 61 ஓட்டங்களையும் இன்சமாம்-உல்-ஹக் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நன்றி - பிபிசி ஸ்போட்ஸ்
--
--
Reply
#2
ஆஸ்திரேலியாவிடம் வாங்கிய அடியில் இருந்து இன்னும் முற்றாக மீளாத இந்தியாவுக்கு மீன்டும் ஓா் பலத்த அடி. மீள்வது கடினம் தான் இருப்பினும் கங்குலியைத் துாக்கினால் வாய்புகள் உண்டு.
<b>!!! !!!</b>
Reply
#3
Maramandai Wrote:ஆஸ்திரேலியாவிடம் வாங்கிய அடியில் இருந்து இன்னும் முற்றாக மீளாத இந்தியாவுக்கு மீன்டும் ஓா் பலத்த அடி. மீள்வது கடினம் தான் இருப்பினும் <b>கங்குலியைத் துாக்கினால் வாய்புகள் உண்டு</b>.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பாக்கிஸ்தான் அணி சோகிப் மலிக்கின் விக்கெட்டை இழந்தவுடன் மிகவும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடத்தொடங்கியது. அதன் தலைவர் இன்சமாம் உல் கக்கும் யூசும் ஜொகானாவும் மிகவும் மோசமான ஆட்டத்தை ஆடி பாக்கிஸ்தான் ஆணியை மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் சென்றனர். இதில் இன்சமாமின் ஆட்டம் மிகவும் பொறுப்பற்றதனமாகவும் வீசப்படும் பந்துகளைத் தடுத்தாடுவதில் கூட அக்கறையீனத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் யூசும் யுகானாவின் ஆட்டமிழப்புடன் காயம் காரணமாக வெளியேறிய சல்மான் பட் மீண்டும் மைதானத்திற்கு வந்தவுடன் இன்சமாம் உல் கக் மிகவும் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். ஆனால் சல்மான் பட் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரரைப் போல் பதட்டமேதுமில்லாமல் நிதானமாகவும் வேகமாகவும் ஓட்டங்களைக் குவித்தார். இவரின் சிறப்பான ஆட்டமே இன்றைய பாக்கிஸ்தான் அணியின் வெற்றிக்குக் காரணம்.
<b>
?
- . - .</b>
Reply
#5
[img]www.indiavarta.com/gallery/images/2004/dec[/img]
Reply
#6
<b>அக்தரிடம் மண்டியிட்டது இங்கிலாந்து</b>

தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஒரு இனிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

"நான்காம் நாள் ஆட்ட இறுதியில் இங்கிலாந்துஇ இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ஓட்டங்களை எடுத்திருந்தது. பெல் (60) மற்றும் கோலிங்வூட் (37) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சனிக்கிழமை ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. கோலிங்வூட் மற்றும் பெல் பொறுமையாக துடுப்பெடுத்தாடினர். உணவு இடைவேளை வரை விக்கெட்டுகள் எதுவும் விழாமல் இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு கோலிங்வுட் (80) கனேரியா சுழலில் ஆட்டம் இழந்தார். அதிரடி வீரர் பீற்றர்சன் (1) மற்றும் பிளின்டாப் (0) வந்த உடன் கனேரியா பந்தில் பெவிலியன் திரும்பினர். கனேரியாவின் 5 பந்துகளில் ஆட்டம் பாகிஸ்தான் வசம் வந்தது. இதோடு மட்டுமல்லாமல்இ மறு முனையில்இ

ஹராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' அக்தர் பந்து வீசத் தொடங்கினார். அவரது வேகத்தில் பெல் (92) ஜோன்ஸ் (1) மற்றும் ப்ளங்கட் (0) ஆட்டமிழக்க இங்கிலாந்து தோல்வியின் விளிம்பில் போராடத் தொடங்கியது.

இறுதியில் 248 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அக்தர்இ கனேரியா முறையே 5.4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இரு அணிகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் டிச. 10 இல் தொடங்கவுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட இழந்தது இல்லை. வெஸ்ட் இண்டீஸ் (2 முறை)இ தென் ஆபிரிக்காஇ நியூஸிலாந்துஇ பங் களாதேஷ்இ அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரை வென்றுள்ளது. இந்த வெற்றி நடைக்கு பாகிஸ்தான் முடிவு கட்டியுள்ளது.


<b>3வது டெஸ்ட் ஸ்கோர் விபரம்</b>

பாஸ்தான் - <b>636 /8</b>
Mohammad Yousuf - 223
+Kamran Akmal - 154
*Inzamam-ul-Haq - 97

இங்கிலாந்து - <b>288 & 248</b>
IR Bell 92 (2nd inngs)
PD Collingwood 80 ( "

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06...-03DEC2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ஓ இங்கிலாந்து தோத்து போட்டுதா??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)