Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
.... இலங்கையிடம் இந்திய அரசு வலியுறுத்து
#1
நோர்வேயிடம் அனுசரணையை தொடருமாறு இலங்கையிடம் இந்திய அரசு வலியுறுத்து

இனப்பிரச்சினைக்கான சமாதான நடவடிக்கைகளுக்கு நோர்வேயை தொடர்ந்து அனுசரணையாளராகப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நோர்வேயைத் தொடர்ந்தும் அனுசரணையாளராகப் பயன்படுத்துமாறு இந்திய அரசாங்கம் முறைப்படியாக விடுத்த வேண்டுகோளைத் தொடந்து இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் இறுதி முடி வெடுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் கடந்த வாரம் இந்தியாவிற்குச் சென்று நிலைமைகளை இந்திய அதிகாரிகளுக்கு விளக்கினார்.

சொல்ஹெய்மின் வருகையைத் தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு வேண்டுகோளை விடுத்ததாக அமைச்சரக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பில், எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ள பயணத்தின் பொழுது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

தினகுரல்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)