Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை
#1
இலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமாயுள்ளது புலிகளின் அவகாசத்தை அரசு பயன்படுத்த வேண்டும்

சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கையில் ஒட்டுமொத்த சூழ்நிலை மிகவும் மோசமானதாகவும் பலவீனமானதாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, விடுதலைப் புலிகள் அளித்துள்ள கால அவகாசத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயன்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச தரப்பினையும் விடுதலைப் புலிகளையும் சந்திந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஜரின் கான் நேற்று திங்கட்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இது குறித்து தெரிவித்துள்ளார்.

மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைவரத்தை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்துவது எமது நோக்கம்.

படுகொலைகள் குறித்து விசாரிக்க சுயாதீன குழுக்களை அமைக்க வேண்டும். அரச கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெறும் கொலைகள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

புதிய அரசாங்கத்தை சந்தித்து கருத்து பரிமாறுவதே எமது இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம்.

யுத்தத்தினாலும் கடல்கோளினாலும் இடம்பெயர்ந்தவர்கள் குறித்து ஆராய்வதும் அவர்களது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதும் எமது நோக்கமாகும்.

எனினும், எமது விஜயத்தின் மிக முக்கிய நோக்கம் புதிய அரசாங்கத்தை சந்தித்து, மிக மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரம் குறித்த எமது கவலையை தெரிவிப்பிதே.

இதுதவிர விடுதலைப் புலிகளையும் சிவில் உரிமை அமைப்புகளையும் சந்தித்தோம்.

மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைவரத்தை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்துவதும் எமது நோக்கம்.

வட, கிழக்கில் கொலைகள் மிக அச்சம் தரும் வகையில் அதிகரித்துள்ளன. கொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இவற்றால் சமூகங்களின் மத்தியில் பதற்றமும் காணப்படுகின்றது.

அச்ச சூழ்நிலை காரணமாக பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்க அஞ்சுகின்றனர்.

விடுதலைப் புலிகளுடனான சந்திப்பின் போது அவர்களுடைய சர்வதேச கடப்பாட்டை வலியுறுத்தினோம்.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன் இரண்டரை மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.

அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்படும் விதமே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என தெரிவித்தார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒழுங்கான விதத்தில் அமுல்படுத்தப்படாமையே மனித உரிமை நிலைவரம் மோசமடைய காரணம் என தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் புதிய யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு தயாராயில்லை.

மனித உரிமைகள் நிலைவரம் குறித்து விடுதலைப் புலிகள் விரக்தியடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகள், புதிய ஜனாதிபதிக்கு கால அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

காலம் செல்கிறது. எனினும், சிறிது வாய்ப்புள்ளது.

இந்த அவகாசத்தை பயன்படுத்துமாறு நாம் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளோம்.

மனித உரிமை நிலைவரத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளோம். மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தால், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பு இல்லாமல் போகலாம். உடனடி முன்னேற்றம் ஏற்படுவது அவசியம்.

கொலைகள் குறித்து எமது கவலையை வலியுறுத்தினோம். படுகொலைகள் குறித்து விசாரிக்க சுயாதீன குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடக்கும் கொலைகள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை.

யாழ்ப்பாண கொலைகள் குறித்து ஆராய இருவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். கிழக்கு குறித்து ஆராயவும் இவ்வாறான குழுவை அமைக்கப் போவதாக தெரிவித்தார்.

இந்தக் குழுக்கள் மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம்.

சகல தரப்பினரும் சகலரையும் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும்.

சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக தமது பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு புலிகள் அழைப்பு விடுத்தனர்.

ஒட்டுமொத்த சூழ்நிலை மிக மோசமானதாக மிகவும் பலவீனமானதாக உள்ளது. இது குறித்து எமது கவலையை வெளியிட்டோம்.

அவசரமாக செயற்பட வேண்டியவை பற்றி மிக முக்கியமாக வலியுறுத்தினோம்.

அரசாங்கம் மிக தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புதிய அரசாங்கங்களுக்கு எப்போதும் புதிய வாய்ப்பு கிடைப்பது வழமை.

மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு ஜனாதிபதியை கேட்டோம். வன்முறையை கட்டுப்படுத்துமாறு கேட்டோம். ஜனாதிபதி இதுவரை சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை.

படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது கடினமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மனித உரிமை அரசியல் விடயமாகிவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கு அவர்களுடைய கடப்பாட்டினை நினைவூட்டினோம். ஆயுத குழுக்கள் என்ற ரீதியில் அவர்களுக்கும் சர்வதேச கடப்பாடுகள் உள்ளன.

இருதரப்பிற்கும் தெளிவான கடப்பாடுகள் உள்ளன.

நோர்வேயின் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தமது அதிகாரங்கள் போதாது என தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி யுத்த நிறுத்த உடன்பாட்டை தொடர விரும்பும் அதேவேளை, மாற்றங்களையும் விரும்புகின்றார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் வரையறைக்குள் அதனை எவ்வாறு பலப்படுத்துவது என்பதே முக்கியமானது.

யுத்த நிறுத்த உடன்படிக்கை வலுவானது இல்லை என்கிறார் ஜனாதிபதி. விடுதலைப் புலிகள் அமுல்படுத்தும் விதமே முக்கியம் என்கின்றனர்.

மனித உரிமை துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த சகல தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொலைகளுக்கு யார் காரணம் என்பதில் மக்கள் மத்தியில் குழப்பம் காணப்படுகின்றது.

ஆயுதக் குழுக்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டு பகுதியில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலைகள் குறித்து விசாரிக்க சுயாதீன குழுக்களை அமைக்குமாறு ஜனாதிபதியை கேட்டுள்ளோம்.

கிழக்கில் இதுவரை 200 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து விசாரணைகள் இடம்பெறவில்லை.

அரசாங்க அமைப்புகள் இந்த விடயத்தில் சிறப்பாக செயற்படவில்லை என்றார்.

தினகுரல்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)