Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005..
#41
சர்வதேசம், உதவி வழங்கும் நாடுகளுக்கான இணைத்தலமை எனக் கூறிக் கொண்டோரும் தமது பொறுப்புக்களை பக்கச்சார்பின்றி செய்யவில்லை. கடந்த சமாதான முயற்சியில் சிங்கள இனவாதம் தான் யதார்த்தத்தை உணராது மகாவம்ச மனோபாவத்தோடு நடந்து கொண்டது என்பது மட்டுமல்ல சர்வதேசமும் பயங்கரவாதம் என்ற பதத்தை சந்தர்ப்பவாத அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியம் அற்றது என்பதை தலைவர் நாசூக்காக சொல்லியிருந்தார். இந்த சர்வதேசத்தின் பொறுப்பற்ற நிலைப்பாடு தவறுவிடுபவர்களை ஊக்குவித்தும் உள்ளது.

சமாதான முயற்சிக்காலத்தில் இனவாதத்தின் பெயரால் வினை விதைத்தவர்கள் இன்று அதை அறுவடை செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் மீண்டும் ஜரோப்பிய ஓன்றியம் போன்றோர் சர்வதேசத்தின் சார்பில் பக்கச்சார்பாக பயங்கரவாத முத்திரை குத்திவிடபோவதாக மிரட்டி தமிழர்களை அடிபணிய வைக்கலாம் என நினைப்பது தவறு. புலத்தில் தமிழ் மக்களின் ஆதாரவு தொடரும் அதை ஒரு அழுத்தக்கருவியாக பயன் படுத்த முடியாது, உங்கள் நிலைப்பாட்டை இந்த முறை சரிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தனக்கே உரித்த பாணியில் மதியுரைஞர் நகச்சுவை கலந்த பேச்சில் சொல்லியுள்ளார்.

பிரச்சனைக்கு தீர்வு இருதரப்பாருக்கும் கொளரவமாக இருக்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பது தேவையானது.

ஆனால் மத்தியஸ்தம் வெற்றியடைய மூன்றாம் தரப்பு பிரச்சனையிலுள்ள இருதரப்பையும் சமமாக நோக்க வேண்டும், பக்கச்சார்பாக நடத்தமுடியாது. பயங்கரவாதிகளாக ஒரு தரப்பை முத்திரை குத்திக் கொள்பவர்கள் மத்தியஸ்தத்திற்கு தகுதியான நிலைப்பாட்டைக் எடுக்க முடியாது.

மேலும் ஒரு தரப்பு ஜனநாயகரீதியில் தேரிவு செய்யப்பட்ட குடியரசு, ஏலவே அங்கீகரிக்கப்பட்ட நாடு என்றரீதியில் இரு தரப்பையும் சமமாக நேக்குவது இயலாது என்று தர்க்கிக்க முயன்றால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தோடு அனைவருக்கும் கொளரவமான சமாதானத்தை அடைய முடியாது.

http://www.tamilcanadian.com/pageview.php?ID=20&SID=22
http://www.tamilcanadian.com/pageview.php?ID=65&SID=39
http://www.tamilcanadian.com/pageview.php?...?ID=3413&SID=52
Reply
#42
தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரையை தொடர்ந்து தான் சமாதானத்துக்கு எதிரானவர் அல்ல என்று காட்டி கொள்ளவதற்காகவும் பந்தை புலிகள் பக்கம் தள்ளி விடுவதற்காகவும் பிரபாகரன் உரையின் சில அம்சங்களை வரவேற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராஜபக்ஷ.

இந்த இணைப்பில் படித்து பாருங்கள் (ஆங்கிலத்தில்)

<b>Rajapakse reiterates 'invitation' to LTTE leader for talks</b>

http://www.hindu.com/thehindu/holnus/00120...1618.htm[/size]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#43
புலிகளுடன் பேச மஹிந்த மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான பேச்சுக்களை புதிதாக ஆரம்பிக்க நாட்டின் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு மறுபடியுமாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச மற்றும் உள்நாட்டு ராஜீய அதிகாரிகளை முதல்முறையாக சந்தித்தபோது மஹிந்த இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பதாக ஜனாதிபதி செயலக அறிக்கை ஒன்று கூறுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தன்னை நடைமுறை அரசியலில் நம்பிக்கைகொண்ட யதார்த்தவாதி என்று மாவீரர் தின உரையில் கூறியிருப்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

அமலில் இருக்கும் யுத்தநிறுத்த உடன்படிக்கையின் நடைமுறைகளை மீளாய்வு செய்வது தொடர்பாக பேசுகின்ற அதேவேளை இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு தொடர்பான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபடலாம் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய மாவீரர் தின உரைக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் உத்தியோகபூர்வ பதில் என்று ஜனாதிபதியின் இன்றைய அறிக்கை கருதப்படும்போதிலும், நேற்றைய உரையில் விடுக்கப்பட்ட அவசிய மற்றும் அவசர கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் இன்றைய அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<b>பிபிசி தமிழ்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#44
கவர்ச்சி வசனங்கள் நிறைந்த அறிக்கைகள் விட்டு ஊடகங்களின் செய்திப்பசிசை போக்குவது அரசியல் இராஜதந்தரத்தில வழமை. சிறானின் (SHIRAN) செயற்பாடுகளை முடக்கி, யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை அமுலாக்கலை பூரணப்படுத்தாது 2002 ஆண்டையும் 2003 ஆரம்பப்பகுதியையும் இறுதித் தீர்வு பற்றிய பேச்சு, மாநிலசுயாட்சி எண்டு கடத்தினவை. இடைக்கால வரைபை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் பேசலாம் என்றால் மாற்று யோசினை தாங்கள் சமர்பிக்க வேணும் எண்டு மிச்சக் காலத்தை ஓட்டிச்சினம்.

2004 ஆட்சி மாறினா பிறகு பேச்சு வார்த்தை மீள் ஆரம்பம் பற்றிய பேச்சு, பேச்சுவார்த்தைக்கான நிகழ்சிநிரல் தயாரிப்பு எண்டு காலத்தை ஓட்டிச்சினம்.

பிறகு சுனாமிப் பொதுக் கட்டமைப்பு என்று இந்த ஆண்டு முதல் பகுதி ஓடி முடிஞ்சுது. உந்த அறிக்கை விட்டு காலம் கடத்திறதை ஏற்றுக் கொள்ள முடியாது எண்டதை தான் குறுகிய காலம் தரப்பட்டிருப்பதாக, அவசர வேண்டு கோளாக சொல்லியிருந்தார் தலைவர். இந்து போன்ற ஊதுகூழலுக்கு கவர்ச்சியாக அறிக்கை எழுதுறது மாத்திரம் நடைமுறை அரசியலில் நம்பிக்கைகொண்ட யதார்த்தவாதியின் நம்பிக்கையை கட்டியெழுப்பிற நகர்வாக இருக்காது.

இந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டால் இன்னொரு சிங்கள அரசியல் தலமையோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்பதை இறுதி வேண்டுகோளாக கூறியிருந்தார். போர் ஆரம்பித்தால் ஆட்சிமாறும் மீண்டும் காலம் கடத்தி ஓராட்டலாம் என்று சிலர் இன்னும் :roll: சில தமிழ் ஊடகங்களும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில ஏறின கதையாக தலையங்கங்கள் தீட்டி துணைபோவது கவலைக்குரியது.

தற்போது வரும் (சர்வதேச) ஊடகங்களினதும், ஊதுகுழல்களினதும் பரபரப்பான தலையங்கங்களிற்கு மாமனிதர் சிவராமின் பதில் எவ்வாறு இருந்திருக்கலாம்?
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14796
இதன் மூலம் தமிழில் உள்ளவர்கள் இணைத்து உதவுங்கள்.
Reply
#45
இந்த முறை மாவீரர் நாள் உரையின் குறிப்பிடத்தக்கவை வருமாறு:

<ul>
<li> சிறிலங்காவின் பயங்கரவாதம், மத்தியகிழக்கு(சர்வதேச) பயங்கரவாதத்தை ஒத்து, மத அடிப்படையிலான நம்பிக்கையை வேராக கொண்ட பயங்கரவாதம்.

<li> தமிழீழ அரசு இன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு, இயங்கிக்கொண்டு இருக்கும் அரசு. அதற்கான அங்கீகாரம் பேச்சுவார்த்தை மூலம் நிறுவப்படுவதே போரை தவிர்க்கும் வழியாகும்.

<li> தமிழீழ அரசுக்கும், சிறிலங்காவில் நடந்த/நடக்கும் கொலைகளுக்கும் சம்பந்தம் இல்லை. இவை சிறிலங்கா அரசின் பின்ணணியுடன் இயங்கும் பயங்கரவாதிகளின் செயல்கள் ஆகும்.

<ul>

இந்த மாவீரர் நாள் உரையின் சர்வதேச ரீதியான இராஜதந்திர தாக்கம் காத்திரமானது. அரசாக பரிமாணம் பெற்றுள்ள தமிழீழ அரசு, சிறிலங்காவின் பின்ணணியுடன் இயங்கும் பயங்கரவாதிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போது, சர்வதேச சமுகத்துடன் சேர்ந்து தமிழீழ அரசும் இந்த மதவாத பயங்கரவாதிகளை கண்டிக்க வேண்டும். இவ்வாறே தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவில் பயங்கரவாத செயல்கள் இடம்பெறும் போதும், சிறிலங்கா அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயற்படும் போதும், சிறிலங்காவின் மதவாத பயங்கரவாத்தை தமிழீழ அரசு கண்டிக்க வேண்டும். சர்வதேச சமுகம் முன்வந்து கண்டிக்கும் போது, பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களின் அரசு கண்டிக்காகமல் விடக்கூடாது. இந்த மாவீரர் நாள் உரை அதற்கு அத்திவாரம் போல அமைந்திருக்கிறது.
''
'' [.423]
Reply
#46
ரணில் விக்கிரமசிங்க ஜெகான் பெறேறா போன்றோர் சமாதான வேடத்தால் மூடி மறைத்த சிங்களத்தின் அநாகரீகமான அகோர இனவாதம் அம்மணமாக்கப்பட்டுள்ள போதுதான் இலங்கையின் சமூகங்கள் பெரிய அழிவின் விழிம்பில் இருப்பதாக "இலங்கையின் சர்வதேச நண்பர்கள்" எண்ணுகிறார்கள். இவர்களிற்கு சிங்கள இனம் ஆபத்தின் விழிம்பின் இருக்கும் போது தான் அது இலங்கையின் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சனையாக பார்க்க முடிகிறது. தமிழர்கள் யுத்த நிறுத்த காலத்தில் பட்ட பட்டுக் கொண்டிருக்க அவதிகள் அழிவுகள் பற்றி இதன் ஒரு சிறுவீதம் ஆவது இந்த சர்வதேசத்தின் நேர்மையான கவனத்திற்கு வந்ததா?
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16458
Reply
#47
சமாதான பேச்சுவார்த்தைகளின்போது கொடுக்கப்பட்ட செய்திகளையும்... பின்னர் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டநிலையில் கொடுக்கப்பட்ட செய்திகளையும்.... முழங்குவதாக அமைந்தது இவ்வருட மாவீரர்நாள் உரையினுடைய பாலா அண்ணாவின் விளக்க உரை.

பலமுறை அவ்வுரையை மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டு அதில் ஏதோ இருக்கின்றது என்று கருதி அபிப்பிராயம் கேட்கவே இக்களத்துள் இணைந்தேன்...

களத்துள் எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களை பார்க்கும்போது எவரும் இங்கு சுயஅறிவுடன் இருப்பதாக தெரியவில்லை... புரிந்துகொள்ளும் நிலையிலும் இல்லையென்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்து களத்திலிருந்து வெளியேறுகிறேன்
8
Reply
#48
Vaanampaadi Wrote:இப்ப சிறிது நேரத்திற்க்கு முன்னர் பாலசிங்கத்தின் நகைச்சுவை உரையை டிடிஎன் வாயிலாக கேட்டேன்... இவரு சொல்றது கொழந்தைகளுக்கு கூட நன்றாக விளங்கும்....

<b>கொழந்தைகளுக்கு விளங்கும் குரங்குகளுக்கு எப்படி விளங்கும்?</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)