Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கராச்சாரியார் மீது திருட்டு வழக்கு
#1
ஜெயேந்திரர் மீது திருட்டு வழக்கு: பழி வாங்க முயற்சி?முன் ஜாமீன் கோருகிறார்
டிசம்பர் 15, 2005

திருவாரூர்:

கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த நவரத்தின கற்களை ஜெயேந்திரர் திருடிச் சென்று விட்டதாக அவர் மீது திருவாரூர் மாவட்டம் கோட்டூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என அஞ்சும் ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

தன்னை அதிமுக அரசு போலீஸ் உதவியுடன் பழிவாங்க முயல்வதாக ஜெயேந்திரர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்து வருபவர் சுரேஷ் என்கிற கிருஷ்ணன். இவரது சொந்த ஊர் கோட்டூர் அருகே உள்ள பெரியகுடி. இவர் கோட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், பெரியகுடி கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மூலவர் சிவலிங்கத்திற்கும், இன்னொரு சிவலிங்கத்திற்கும் கீழே தங்கம், வைரம், கோமேதகம், மரகத கற்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதன் விலை அப்போதே ரூ.2 லட்சம் என்று கூறப்பட்டது. இந்தக் கோவிலில் கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் திருப்பணியின் போது இந்தக் கற்கள் சிலைகளுக்குக் கீழே வைக்கப்பட்டன.

அப்போது நானும் அந்த இடத்தில் இருந்தேன். கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதியன்றும், 2000மாவது ஆண்டு ஜூன் 14ம் தேதியன்றும் ஜெயேந்திரர் இக்கோவிலுக்கு வந்தார்.

அந்த சமயத்தில் நடந்த திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர் கலந்து கொண்டார். சமீபத்தில் கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரர் இக்கோவிலுக்கு மீண்டும் வந்தார்.

அப்போது சிவலிங்கத்தின் அடியில் இருந்த கற்களை ஜெயேந்திரர் வெளியே எடுத்தார். எதற்காக கற்களை எடுக்கிறீர்கள் என்று நான் கேட்ட போது, அதற்கு மருந்து சாத்த வேண்டும்.சாத்திய பின் திரும்பவும் உள்ளே வைத்துவிடலாம் என்று கூறி அதை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

ஆனால் எடுத்துச் சென்ற கற்களை இதுவரை கொண்டு வந்து வைக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுரேஷ். இந்தப் புகார் குறித்து கோட்டூர் போலீஸார், மாவட்ட காவல்துறை ஆணையர் பாஸ்கரனுக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக பாஸ்கரன், டிஎஸ்பி கல்யாண ராமன் உள்ளிட்ட போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று சிவலிங்க சிலைகளைப் பார்வையிட்டனர். சுரேஷின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூரைச் சேர்ந்த 8 பேரிட¬ம் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக டிஜிபியின் அனுமதியை அவர்கள் கோரியுள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கில் ஜெயேந்திரரை உள்ளே தள்ள அதிமுக அரசு முயல்வதாகக் தெரிகிறது.

பழி வாங்குகிறது அதிமுக அரசு:

இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நான் பெரியகுடி கோவிலுக்கு சென்றது உண்மைதான். ஆனால் நவரத்தின கற்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை. அப்பட்டமான பொய் புகார் அது.

என்னைப் பழிவாங்க தமிழக அரசு துடிக்கிறது. இதன் காரணாகவே சங்கரராமன் கொலை வழக்கில் என்னை சேர்த்துள்ளனர். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்ற தலையீட்டின் பேரில் தமிழகத்திலிருந்து புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதைப் பொறுக்க முடியாத தமிழக அரசு, பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது தற்போது யாரையோ விட்டு பொய்யான புகாரைக் கொடுக்க வைத்துள்ளது. இந்த புகாரின் பேரில் நான் கைது செய்யப்படக் கூடும் என அஞ்சுகிறேன்.

எனவே எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயேந்திரர்.

Nandri : Thatstamil
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)