12-18-2005, 10:39 AM
<b>கறுப்புச் சப்பாத்து</b>
பல் வேறு வடிவங்களாக உருமாறி உருமாறி முகில்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன. வைகாசி மாத காற்று எழுந்து விட்டதை அவை உணர்த்திக் கொண்டிருந்தன் எதுவுமே நிரந்தரமில்லை எங்கும் ஏதிலும் மாற்றங்கள் மட்டும்தான் நிகழ்ந்து கொண்டே இருக்கும் மாற்றங்கள் மட்டும்தான் நிரந்தரம் போலும் ஆனால் . . .என் வாழ்வில் மட்டும் ஏன் மாறாத சோகம் அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் .அடங்க மாட்டாத அழுகை சட்டெண்டு வெளி வந்து விட்டது சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தி மெல்ல அதனை அடக்கினாள் கண்களில் கண்ணீர் நிறைந்து பார்வையைத் தெளிவற்றதாக்கியது மெல்லக் கண்களைத் துடைத்துக் கொண்டாள் கணவனின் முகம் மனதில் விழுந்தது எட்டு வருடங்களுக்கு முன்பு அவனைத் திருமணம் செய்த போது அவள் இருந்த நிலையை எண்ணிப் பாத்தாள்
துரை உனக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதவன் என்று சொன்ன சின்னம்மாவும் அவன் படிப்பறிவில்லாதவன் குடிகாரன் நீ பாழ்கிணத்துக்க விழப்போறியே எனக் கேட்ட உறவினர்களையும் சரசு நீ பேசாமப்படி இப்ப என்ன கலியாணத்துக்கு அவசரம் என்று ஆதுரத்துடன் உரைத்த ஆசிரியரையும் மீறி அவனை அவள் திருமணம் செய்ய சம்மதித்ததே தன்னை விருப்பத்துடன் ஒருவன் வீடு தேடி வந்து கேட்கும் போது மறுப்பதா ? என்ற ஒரு நிலையிலேயே.
ஆனால் எல்லாம் அவர்கள் சொன்னது போலவே நடந்தது துரை கணவனாக வந்தது முதல் அவள் மெல்ல மெல்ல வெறுமையாகத் தொடங்கினாள். அவளது கைகள் கழுத்து எல்லாமே மூளியாகி விட்டது வீட்டின் பாத்திரம் பண்டம் எல்லாம் மெல்ல மெல்ல சாராயக் கடைகளுக்கும் தவறணைகளுக்கும் போய்க் கொண்டிருந்தன கண்ணீர் நிறைந்து கன்னத்தை ஈரமாக்கின விருப்பமில்லாத வேண்டாத அந்த கடந்த கால சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து குடைந்து கொண்டிருந்தன அவள் பலமாகத் தலையை அசைத்தாள் எல்லாவற்றையும் எறிந்து விட்டு கைகளை விசிறி நடக்கவேண்டும் போலிருந்தது. கையிலிருந்த அந்த சிறிய சப்பாத்துப் பெட்டி கூட பெரிய சுமையாக இருப்பதைப் போல உணர்ந்தாள்
வேண்டாத சுமையைச் சுமப்பதாகவே அவள் மாலவனை சுமந்தாள் ஆனால் அவன் பிறந்த பிறகு அவளுக்கு இருந்த ஒரே ஆறதலாக மாலவன் இருந்தான். குடிகார கணவனை நம்பி காலத்தை ஓட்ட முடியுமா. . . .
முhலவன் பிறந்த பலனோ என்னவோ அவளுக்கு பெரிய ஆஸ்பத்திரியில் அந்த தாதி வேலை கிடைத்தது இப்போதெல்லாம் துரை அவளது சம்பள நாளன்று மட்டும் குடிவெறியில்லாது நல்ல கணவனாகக் காத்திருப்பான் ஆனால் அவளுக்குத் தெரியும் அவனது வேடம் அந்த சம்பளத்தைப் பறிக்கும் வரைதான் என்பது அதைப் பறிப்பதுக்கு சகல விதமான கைங்கரியங்களையும் அவன் செய்வான். கொடுக்கா விட்டால் வீட்டில் பிரளயம் தான் ஏற்படும் ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பிரளயங்களைச் சந்திக்க பழகிவிட்டிருந்தாள் மனதில் சமை பெருமூச்சாக கிளர்ந்து வெளிப்பட்டது கையிலிருந்த சப்பாத்துப் பார்சலைப் பார்த்தாள் சிறிய கறுப்புச் சப்பாத்துக்கள் இரண்டு மாதமாக மாலவன் அதனைக் கேட்டது. . .
ம். . . இந்த மாதச் சம்பளத்திலைதான் வாங்கக் கூடியதாக இருந்தது.
. . அம்மா. . .சப்பாத்துப் போடாமல் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டாம் எண்டு அங்க சேர்மார் ஏசினம் . . சில நேரம் முதல் பாடம் வகுப்புக்கு வெளியாலை நிக்க வைப்பினம். . .
திக்கி திக்கி மாலவன் சொல்லும் போதெல்லாம் . . . அவள்
. . . .வாங்கிக் கொண்டு வாறன். . . . .
என்று பொய்யாகச் சொல்வதை நம்பி சிரிப்பான் அந்தச் சிரிப்பு அவனை வேகவைத்து விடும்
அந்த நெருப்பு வெயிலில் வீட்டை நோக்கி நடந்தவளுக்கு படலையடியில் மாலவன் நிற்பது தெரிந்தது பள்ளிக் கூடம் முடிந்த பிறகு அவளது அம்மாவுடன்தான் வீட்டில் நிற்பான் ஆனாலும் அவனைக் கண்டவுடன் தான் சரசுக்கு நிம்மதி ஏற்படும்
அந்த ஒழுங்கை ஒரு நேரம் கலகலப்பாக ஆட்பிளக்கமாக இருந்தது ஆனால் இப்போது ஒரு சில குடிகளே அங்கு இருந்தனர் யுத்த காலம் இடம்பெயர்ந்த சனங்கள் இன்னும் வரவில்லை
அம்மா சப்பாத்து வாங்கிற்றா. . . .அம்மா சப்பாத்து வாங்கிற்றா. . . முகம் மலர ஓடி வந்த மாலவன் சப்பாத்து பார்சலைப் பறித்து துள்ளிக் குதித்தான் அவனது புூரிப்பில் நெகிழ்ந்து போய் வந்தவளை துரை இராவண சந்நியாசியாக வரவேற்றான் சம்பள நாளை அவள் மறந்தாலும் அவன் மறக்க மாட்டானே அனைத்தும் அடங்கி நொடிந்து போனாள் சரசு. ஆனால் மெல்ல மெல்ல பிரளயத்தை எதிர் கொள்ள ஆயத்தமானாள் சப்பாத்து கிடைத்த புூரிப்பில் துள்ளிக் குதித்த மாலவன் துரையின் அதட்டலில் அடங்கிப் போனான்
. . . எ.டேய் அங்காலை போடா. . . .
!!!!!!!!!!!!!!!!!!!
எடேய் பிள்ளேன்ரை சப்பாத்தைக் கொண்டு வந்து தந்திட்டு கள்ளுத்தா எண்டா நானென்ன செருப்புக் கடையே போடுறது காசைக்குடுத்திட்டு குடி இல்லாட்டி எழும்பிப்போ. . .துரை விருட்டென்று எழுந்தான் அவனது தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது ஆத்திரத்துடன் தூசனை வார்த்தைகள் வாயிலிருந்து புறப்பட்டன கால்கள் தள்ளாடின கைகள் பரபரத்தன அந்த சிறிய கறுப்புச் சப்பாத்துகளை கந்தப்புவிடமிருந்து வெடுக்கென்று பறித்துக் கொண்டான் கசிப்புக் கந்தப்புவின் வாயில் தெரிந்த கேலிச் சிரிப்பு அவனை இன்னும் ஆத்திரமடையச் செய்தது சைக்கிலைத் தள்ளியபடி வேகமாக நடந்தான் யாரின் மேல் என்று இல்லாமல் எல்லாவற்றின் மேலும் அவனுக்கு ஆத்திரமாக இருந்தது கைக்கெட்டியது வாய்கெட்டாத ஆற்றாமை மனதை அலைக்கழித்தது. வீடு நெருங்க நெருங்க கோவம் இன்னும் கொப்பளிக்கத் தொடங்கியது
. . . அம்மா அப்பச்சி . . சப்பாத்தோடை திரும்பி வாறார். . .
மாலவன் தனது புதிய சப்பாத்துக்களை தகப்பன் மீண்டும் கொண்டு வருவதை கண்டு கண்ணீருடன் தாயிடம் கூறினான் சரசு ஆத்திரத்துடன் எழுந்தாள்
இந்த மனிசனுக்கு வாழ்க்கை ஒரு கேடா? பிள்ளேன்ரை சப்பாத்தை வித்து குடிக்கிறதெண்டு வெளிக்கிட்டவனுக்கு குடும்பம் எதுக்கு வீடெதுக்கு? இண்டைக்குத் தான் நான் யாரேண்டு பார்க்கப் போறாய்
கிணத்தடியில் இருந்து முற்றத்துக்கு வந்தாள் படலையில் நின்ற மாலவன் தகப்பனை நோக்கி ஓடிச் சென்றான்
. . . அப்பச்சி என்ற சப்பாத்தை தா. . . .
என சப்பாத்தை வாங்க முயன்றான் மகனைக்கண்டதும் துரைக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது ஒரு போத்தல் கள்ளுக்கு வழியில்லாமல் நான் கிடக்கிறன்.. . . . .உனக்கு சப்பாத்து ஒரு கேடா வாயில் தூஷனை வார்த்தைகள் கிளர்த்தெறிந்தன அப்பச்சி. . .என்ற சப்பாத்த தா. . .அது அம்மா வாங்கித் தந்தது என்ற சப்பாத்து. . மாலவன் அவனது கைகளில் தொங்கியபடி அழுதான்
சீ . . அங்கால போ. . ஒரு சல்லிக்காசு எனக்குத் தர ஏலாது சப்பாத்தாம் சப்பாத்து உழைக்கிறன் எண்ட திமிர். . .
எடேய் . . நீயும் ஒரு அப்பனா. . .பிள்ளையை ஏன் தள்ளுறாய்
ஆக்ரோசத்துடன் சரசு ஓடி வந்தாள் துரைக்கு அவளைக் கண்டதும் தலை எகிறியது பற்களை நறுநறுத்தப்படி ஒரு முழி முழித்தான் ஒரு விதமாக மிருகம் போல் அவனது முகம் கிடந்தது
. . . .காசு தர ஏலாது கதைக்க வந்திட்டாள் கதைக்க. . . .
சரமாரியா தூஷன வார்த்தைகள் வாயிலிருந்து கிளம்ப சைக்கிலை ஒரு புறம் தள்ளி விட்டான் சைக்கிள் வேலியுடன் உராந்து ஓடி விழுந்தது சப்பாத்தாம் சப்பாத்து வாயில் முணுமுணுத்தபடி வடக்கால காடு பற்றியிருந்த தறையை நோக்கி வேகமாகச் சென்றான் அது நீண்ட காலம் ஆள் பிளக்கம் இல்லாத தரையாகக் கிடந்தது முட் செடிகளும் எருக்கலயும் நிறைந்திருந்த அந்த பற்றைக் காணியில் ஆங்காங்கே எல்லைக்கதிகால்கள் ஒன்றிரண்டு மட்டும் பாறிக்கிடந்தன வேகமாச் சென்ற துரை விழுந்து கிடந்த எல்லை வாதனாராணி மரத்தின் மேல் விடுக்கென்று ஏறினான்
மாலவன் அப்பச்சி. . .அப்பச்சி. . என ஓடி வந்து கொண்டிருந்தான் துரை அந்த கறுப்புச் சப்பாத்துகளை வெறியுடன் ஒரு கணம் பாத்தான் மனைவியின் மேல் இருந்த கோபம் இன்னும் எகிறியது
பற்களை கடித்தபடி தன்பலம் எல்லாவற்றையும் சேர்த்து அந்தச் சப்பாத்துகளை அந்த பற்றைக் காணிக்குள் விட்டெறிந்தான் மாலவன் கண்ணீர் பொங்க தாயை நோக்கி அழுது அரற்றியபடி திரும்பி ஓடினான் துரையின் முகத்தில் ஒரு வெறியும் வெற்றிக் களிப்பும் புலர்ந்தது பாறிக்கிடந்த மரத்தின் மேலிருந்த காலை தரையில் வைத்தான் தள்ளாடியபடி கால் சற்று இடறிவிட விழுந்து விடாமல் இருக்க புதர்பக்கமாக மற்றக் காலை வைத்தான்
பாவம் துரை அறிந்திருக்கவில்லை அங்கே இரண்டு வருடமாக ஒரு மிதிவெடி காத்துக்கிடந்ததை. . . . . . .
(ஈழத்து இலக்கிய சூழலில் ஓவியராக நாடகவியலாளராக சிறுகதை எழுத்தானராக தன்னை தடம் பதித்துவரும் <b>முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன் </b>அவர்கள் எழுதிய <b>உதிர வேர்கள் </b>என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து. . . . . .)

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&