Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திரிகோணமலையில் மோதல்
#1
<b>திரிகோணமலையில் விடுதலைப்புலிகள்- ராணுவம் மோதல்: துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி </b>

கொழும்பு, ஜன. 9-

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் இடையே 3 ஆண்டுகள் நீடித்து வரும் போர் நிறுத்தம் அதிகார பூர்வமாக வாபஸ் பெறப்பட்டாலும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடை பெற்று வருகிறது. தமிழர் பகுதியில் ராணுவம் கெடு பிடி செய்து வருவதை தொடர்ந்து தமிழர்கள், குடும் பம் குடும்பமாக வெளியேறி வருகிறார்கள்.

இந்த நிலையில் திரிகோணமலையில் 5 தமிழ் இளைஞர்களை ராணுவம் சுட்டு கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் ராணுவத்தினர் மீது அதி ரடி தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ படகு மீது விடுதலைபுலிகளின் தற்கொலை படையினர்அதி ரடி தாக்குதல் நடத்தி 15 கடற்படையினரை கொன்றனர்.

இந்த நிலையில் திரிகோண மலை பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் இருதரப் பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இலங்கை ராணுவத்தினர் 2 லாரிகளில் திரிகோணமலை பகுதியில் ஒரு கிராமத்தில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது விடுதலைப்புலிகள் புதர் மறைவில் இருந்து அவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 வீரர்கள் காயம் அடைந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பில் ஒருவர் பலியானார்.

Maalaimalar


<b>Latest clash kills one soldier, one rebel in Sri Lanka"s northeast</b>
http://www.khaleejtimes.com/DisplayArticle...bcontinent&col=


<b>Violence escalates in Sri Lanka</b>
http://english.aljazeera.net/NR/exeres/A07...D6E0469BD04.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b>Three die in Sri Lanka violence</b>

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4594464.stm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)