Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை சினேகா தற்கொலை மிரட்டல்
#1
நடிகை சினேகா - நாகாரவி பற்றிய விவகாரம் இன்னும் ஓயவில்லை.

தற்கொலை முயற்சி

நடிகை சினேகாவுடன் இணைத்து பேசப்பட்ட மலேசிய தொழில் அதிபர், நாகாரவி. இவருக்கும், நடிகை சினேகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை சினேகா மறுத்தார்.

இந்த நிலையில் சென்னை வந்த நாகாரவி, தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்குப்பின் அவர் உயிர் பிழைத்தார்.

பேட்டி

தற்கொலைக்கு முயன்றது பற்றியும், சினேகாவுடன் இருந்த தொடர்பு பற்றியும் நாகாரவி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சினேகாவை நான் முதன் முதலாக சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். சினேகாவும், அவருடைய அண்ணனும் மலேசியா வந்தபோது அவர்களை அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்தேன்.

ஓட்டல் பிடிக்கவில்லை என்று சொன்னதால், அவர்களை என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் வீட்டில் இருந்தபோது எல்லா வேலைகளையும் சினேகாவே செய்தார்.

விருந்து

'பாண்டு' என்ற தெலுங்கு படப்பிடிப்பு மலேசியாவில், என் அலுவலகத்துக்கு அருகில் நடந்தது. சினேகாவை நான் என் காரில் கொண்டு போய் விடுவேன்.

கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி சினேகாவின் அக்கா டின்னருக்கு அழைத்தார். ஓட்டலுக்கு நான் சென்றேன். அங்கு சினேகா, அவரது அக்கா, நான் என 3 பேர் மட்டுமே இருந்தோம்.

வைர மோதிரம்

அப்போது சினேகாவின் அக்காதான் சினேகாவை திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். வைர மோதிரம் வாங்குங்க. மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்றார்.

எனது வீட்டில் சினிமா நடிகை என்றால் பிடிக்காது. இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்தால் எங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள் என்றேன்.

தெலுங்கில் 'ராமதாஸ்', தமிழில் 'புதுப்பேட்டை' ஆகிய படங்கள்தான் சினேகாவின் கடைசி படங்கள். எனவே பிரச்சினை இல்லை என்றார்கள். எனவே நானும் சரி என்றேன். அதன் பிறகு சினேகா எனக்கு வைர மோதிரம் அணிவித்தார்.

வருமானவரி சோதனை

சினேகா வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது, நான் அவருக்கு வாங்கிக் கொடுத்த ரூ.8.9 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசும் மாட்டிக் கொண்டது.

நான் அவருடைய வீட்டுக்கு சென்றபோது, சினேகாவின் தந்தை வருமானவரி அதிகாரிகளிடம் என்னைக் காட்டி, "இவர்தான் எங்கள் மருமகன்" என்று அறிமுகம் செய்தார்.

இந்த ஆண்டு தீபாவளியை கூட நானும் சினேகாவும், அவரது வீட்டில்தான் கொண்டாடினோம். சினேகாவின் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடினோம்.

அவரது பிறந்த நாளுக்காக எனது கிரடிட் கார்டில் டிரஸ் எடுத்தோம். நகைகள், ஷூக்கள் எல்லாம் வாங்கினோம்.

அப்போது எங்களை நடிகர் அஜீத் பார்த்தார். அவரிடம் என்னை குடும்ப நண்பர் என்று அறிமுகம் செய்தார்.

மிரட்டல்

சினேகா என்னிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தார். நம் விஷயத்தை வெளியே சொன்னால் என் அறை முழுவதும் உங்கள் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார்.

நம்மால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்று இவ்வளவு நாளும் அமைதியாக இருந்தேன்.

ஆனால் எனக்கும் என்னை வளர்த்து ஆளாக்கிய எனது தாயாருக்கும், என் உறவினர்களுக்கும் தொடர்ந்து அவமானத்தையும், மனக் கஷ்டத்தையும் கொடுப்பது போல சினேகா நடந்ததால்தான் வெளிப்படையாக நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது".

இவ்வாறு நாகாரவி கூறினார்.

சினேகா பேட்டி

நாகாரவியின் குற்றச்சாட்டுகள் பற்றி சினேகாவிடம் கேட்டபோது, முதலில் அவர், "பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

"என்னை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு நாகாரவி அவமானப்படுத்தி விட்டார். அதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை".

மேற்கண்டவாறு சினேகா கூறினார்.
Thnaks:Thanthi...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
நாகாரவி கூறுவது உண்மை போல் தெரிகிறது.
Reply
#3
நாகாரவி கூறுவது உண்மை என்று தான் நானும் நினைக்கின்
Reply
#4
படங்கள் கூட இருக்கின்றது... www.tamilcinema.com
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)