12-23-2005, 07:45 AM
"ரியூப்' வெடித்த சத்தத்தில் மிரண்ட படையினர்
பொதுமக்களை கண்டபடி தாக்கினர்!
நெல்லியடியில் நேற்று பிற்பகல் பரபரப்பு
வாகனத்தின் ரியூப் வெடித்ததினால் ஏற்பட்ட சத்தமும், அதனால் ஏற்பட்ட பதற்றமும் பொதுமக்களுக்கு படையினரிடமிருந்து பெரும் அடி உதையைப் பெற்றுக்கொடுத்தன.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நெல்லியடி நகரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சி நோக் கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனத்தின் ரியூப் நெல்லியடி பொலீஸ் நிலையத்துக்கும் ஈ.பி.டி.பியின் அலுவலகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது.
இந்தச் சத்தத்தைக் கேட்டதும் பருத்தித்துறை பிரதான வீதியூடாகப் பயணித்த பொது மக்களும், நெல்லியடி நகரப் பகுதியில் திரண்டிருந்தவர்களும் குண்டுத்தாக்குதல் எதுவும் இடம்பெற்றுவிட்டதோ என்று எண்ணி சிதறி ஓடியுள்ளனர்.
இதனைக் கண்ட வீதியோரத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த படையினர் தமது தரப்பினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது என்று எண்ணி, துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டதுடன், சிதறி ஓடிய மக்களை கொட்டன்களாலும், துப்பாக்கியின் பின்பகுதியாலும் பலமாகத்தாக்கினர் என்று கூறப்படுகின்றது.
இதனையடுத்து, நெல்லியடிப் பகுதியில் உள்ள கடைகள் இழுத்து மூடப்பட்டன. நேற்று முன்னிரவுவரை நெல்லியடிப் பகுதியில் பதற்றம் நிலவியது.
http://www.uthayan.com/pages/news/today/15.htm

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>