12-26-2005, 08:59 PM
<b>இன்றும் இதயத்தால் இரத்தம் வழிகிறது!</b>
<img src='http://img309.imageshack.us/img309/4735/tsunami200529gj.jpg' border='0' alt='user posted image'>
<b>ஓராண்டு உருண்டே ஓடிவிட்டது...
மனதின் ஓலங்கள் இன்னும் ஓய்வதாய் இல்லை!
அந்த அவலம் சுமந்த நாட்கள் இன்றும்
எம் ஆன்மாவை விட்டு எழுந்து போவதாய் இல்லை!
இன்று காலையும் எம் தேசத்து மழலை ஒன்று
கடலை வெறித்து பார்த்தபடி காத்து நிற்கிறது...
அம்மா வருவாளா என்று!
இன்றும் தாயொருத்தி கரை மணலை கிளறி கொண்டே இருக்கின்றாள்...
தன் சேய் ஒரு வேளை இங்கு இருப்பானோ என்று!
இந்த நாள்...............
எம்மையும் எம் கனவுகளையும் தன் தோழ்வலிக்க சுமந்து நின்ற ...
தந்தை உடலை வயிறு பிளந்த படி கிடக்க...
வடலி இடுக்கிடையினுள் இருந்து மீட்டு வந்தோமே - அந்த நாள்!
இந்த நாள்.....
ஒருவாய் சோறு எமக்கூட்ட.......
ஓராயிரம் கதை சொல்லி ...
நிலவை பிடிச்சு தருவேன் நீ இதை உண்டால் என்று...
செல்ல கதைகள் சொல்லி..எம் தேகத்தில் ஜீவன் கொண்டாளே-என் பாட்டி..
அவளை மண்ணுக்குள் கொண்டு சென்று புதைத்து விட்டு வந்து...
நாமெல்லாம் மார்பில் அடித்து அழுத நாள்!
இந்த நாள்.........
ஒன்றாகவே எம்முடன் பிறந்து...
ஒரு தட்டில் உண்டு...
என் கையை பிடித்து கொண்டே கவனமாய்..
பள்ளி கூட்டி சென்று வந்தனரே... என் அண்ணா,அக்கா..
அம்மணமாய் கிடந்த அவருடலை...
பாய் கொண்டு சுற்றி...அயலவர் எடுத்து போக...
ஐயோ...எரிக்காதயுங்கோ அவை தாங்க மாட்டினம்...
சித்தம் கலங்கி போய் ....
மண்ணில் விழுந்து அழுதழுதே... எம் ஆவி தொலைத்தோமே
அந்த நாள்!
நீர் வற்றி போன குளமாய் போனதே எம் கண்கள்..
ஒன்றா இரண்டா துயரங்கள்?
இன்னும் எம்மிடம் கண்ணீர் இருக்கிறதா?
இருந்தால் அது உலக அதிசயம்!
கடலோடு கடலாய்...
கரை மணலோடு ஒரு துணிக்கையாய்..
அரசியல் எல்லைகள் தாண்டியும் அப்பால்
கரை சென்று ஒதுங்கிய உடல்களே... எம் உறவுகளே.......
எம் இதயம் தன் இயக்கம் நிறுத்தும் நாள்வரை..
உமக்காய் அழுவோம்..
இன்றும் இதயத்தால் இரத்தம் வழிகிறது!</b>

<b> .. .. !!</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&