Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"துடிதுடிக்கும் தொப்புள் கொடி உறவுகள்"
#1
ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்: டிச.29-ல் ஒரே மேடையில் நெடுமாறன், வைகோ,வீரமணி,ராமதாஸ் பங்கேற்பு!!
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 23:18 ஈழம்] [புதினம் நிருபர்]
திராவிடர் கழகம் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 29ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது.


சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை வகிக்கிறார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலை வகிக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் என்று திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

http://www.eelampage.com/?cn=22898
"
"
Reply
#2
மகிந்த ராஜபக்ச விரிக்கிற வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது: கொளத்தூர் தா.செ.மணி வேண்டுகோள்!
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 07:05 ஈழம்] [புதினம் நிருபர்]
அன்று ஜெயவர்த்தன விரித்த வலையில் சிக்கியதைப் போல் இன்று மகிந்த ராஜபக்சே விரிக்கிற வலையில் இந்திய அரசு சிக்கிவிடக் கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மகிந்த ராஜபக்சவின் இன்றைய இந்திய வருகை நம்மில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த போர் விடுதலைப் புலிகள் தாங்களாகவே முன்வந்து அறிவித்த போர் நிறுத்தத்தின் மூலமாக முடிவுக்கு வந்தது. அதை நோர்வே ஏற்பாட்டில் சிறிலங்கா அரசை ஏற்கச் செய்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட செய்திகளான

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கிற மக்கள் வாழும் இடங்களிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வது

இதர தமிழ்க் குழுக்களின் ஆயுதங்களைக் களைவது

போன்றவற்றைக் கூட நிறைவேற்றாத காரணத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும், அப்பாவிப் பொதுமக்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் இராணுவ வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பின்னடைந்து கொண்டிருக்கிற அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இந்தவேளையில் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.

ஏற்கனவே அமைதிப் பேச்சுகளை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிற நோர்வேயின் ஏற்பாட்டில் அது தொடருவதுதான் அது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்ற நிலையில்,

இப்போது ஆட்சித் தலைமை ஏற்றிருக்கிற ராஜபக்ச,

ஆசிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று சொல்வதும்

ஒற்றையாட்சி என்ற அடிப்படையில் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்வதும்

அமைதி முயற்சியைக் குலைப்பதாகத்தான் இருக்கிறதே தவிர அவர் அமைதி முயற்சியில் உண்மையான ஈடுபாட்டுடன் உள்ளார் என்பதைக் காட்டவில்லை.

அப்படிப்பட்ட ராஜபக்ச இன்று இந்தியாவுக்கு வருகிறார்.

இந்தியாவை தனது சூழ்ச்சிப் பொறிக்குள் சிக்க வைக்கிற முயற்சியாகவே மகிந்த ராஜபக்சவின் பயணத்தை நாம் கருத வேண்டியிருக்கிறது.

ஏற்கெனவே கடந்த காலத்தில் பாதிப்புக்குள்ளான ஈழத் தமிழர்களுக்குப் "பூமாலை" என்ற நடவடிக்கை மூலம் உதவச் சென்ற இந்தியாவையே விடுதலைப் புலிகளுடன் மோத வைத்து- தன்னுடைய இராணுவத்தைப் பாதுகாப்பாக ஒதுக்கி வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தை விடுதலைப் புலிகளோடு மோத வைத்த முயற்சி - அன்று ஜெயவர்த்தனவின் வருகையின் மூலம் நடந்ததைப் போலவே தானும்

இப்போதும்

இந்தியாவை அந்த சிக்கல்களில் ஈடுபடுத்தும் முயற்சியாகவே நாம் மகிந்த ராஜபக்சவின் பயணத்தைக் கருதுகிறோம்.

இந்த நிலையில் இங்கு இந்திய மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,

தனது குறைந்தபட்ச பொதுவேலைத்திட்டத்தில் தான் ஏற்றுக்கொண்டுள்ள படி

ஈழத் தமிழர் பிரச்சனையை கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தீர்வு காண உதவுவோம் என்ற அடிப்படையிலும்

நோர்வே நாட்டின் ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற அமைதி முயற்சிகளுக்கு தாங்கள் ஒத்துழைப்போம் என்று கூறிய அந்த நிலையில் உறுதியாக நின்று மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நல்ல சுமூகமான தீர்வு ஏற்பட உதவியாக இருக்க வேண்டும்.

ராஜபக்ச விரிக்கிற வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.

http://www.eelampage.com/?cn=22883
"
"
Reply
#3
மகிந்தவை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: தொல். திருமாவளவன்
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 06:57 ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத போரை நடத்தும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்து எதிர்வரும் 30 ஆம் நாள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.


சென்னையில் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற நாள் முதல் ஈழத் தமிழ் மக்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடங்கியுள்ளார்.

கடந்த வாரம் சிறிலங்கா கடற்படையினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்சினி என்ற தமிழ்ப்பெண்ணை பாலியல் படுகொலை செய்து கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

இப்படுகொலையை கண்டித்து தமிழர்கள் எழுச்சியுற்ற போது யாழ்ப்பாணம் நகரில் உள்ள தமிழர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது.

அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த சிங்கள ராணுவம் அங்கிருந்த மாணவர்களையும், துணைவேந்தர்களையும், கொடூரமாக தாக்கியுள்ளது.

இச்செயல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய குற்றம் என்பதோடு மனித நேயத்திற்கு எதிரான வன்கொடுமை செயலாகும்.

இந்நிலையில் தமிழ் ஈழத்தில் தமிழினத்திற்கு எதிரான அரசு வன்கொடுமைகளை கட்டவிழ்த்துள்ள சிங்கள அரச தலைவர் ராஜபக்ச இந்திய அரசு உறுதுணையோடு தமிழ் இனத்தை நசுக்க முயற்சிப்பது வேதனைக்குரியதாகும்.

இவ்வாறான சூழலில் தமிழினப்பகைவர் ராஜபக்சவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுப்பது இந்திய எல்லைக்குள் வாழும் 8 கோடி தமிழர்களையும் அவமதிக்கும் போக்காகும்.

எனவே தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் சிங்கள அரச தலைவர் ராஜபக்சவை இந்திய அரசு நமது நாட்டு மண்ணுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

இதை வலியுறுத்தி வருகிற 30 ஆம் நாள் அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=22881
"
"
Reply
#4
எத்தனை பொடாக்களோ/தடாக்களோ வந்தாலும் அறுக்கப்படமுடியாத தொப்புள் கொடி உறவிது! இவர்கள் எமக்காக அனுபவித்த துன்பங்கள் சொல்லிலடங்காதவை! சிறைக்கூடங்கள், சித்திரவதைகளென்ன பதவிகளைக்கூட தமிழ்த்தேசியத்துக்காக தூக்கியெறிந்தவர்கள்! இறுதி மானமுள்ள ஈழத்தமிழன் இருக்கும்வரை, நீங்கள் எங்கள் இதயங்களில்...........
"
"
Reply
#5
தம்பி துடிக்கையில் அண்ணன் சும்மாய் இருக்க மாட்டான். கடமையை செய்கின்றார்கள்.எல்லோரும் ஒன்று சேந்து ஒன்றாக நிற்பதை பாற்றிய செய்தியை கேட்டதுமே, மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கின்றது.

சொந்த சதோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு,
பொறுமை இழந்து
பொங்கி எழுந்தாரடி.
தமிழன் அழிவதை தடுக்க
முழக்கமிட்டாரடி.
முத்தமிழன்னையைக் காக்க
ஒன்று பட்டாரடி.
ஒற்றுமையே பலம்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

தகவலை இணைத்தமைக்கு நன்றி நெல்லையன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)