01-09-2006, 05:48 AM
இங்கிலாந்து தொடரில் கலக்கிய வேகப் புயல் சோயப் அக்தர், அடுத்து இந்தியாவுக்கு எதிராக சாதிக்க காத்திருக்கிறார். இந்தியா என்ற பெயரை கேட்டாலே தன்னம்பிக்கை தானாக பிறந்து விடும் என்கிறார். தனது பவுலிங் மாற்றத்துக்கு என்ன காரணம்? இந்திய தொடரில் தனது இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் அக்தர் அளித்த ருசிகர பேட்டி:
* வணக்கம் அக்தர். இங்கிலாந்து தொடரில் பிரமாதம் பண்ணி விட்டீர்கள்! அடுத்து இந்தியாவை பழி வாங்க காத்திருக்கிறீர்களா?
பழி வாங்க ஒன்றுமில்லை. விட்டதை பிடிக்க காத்திருக்கிறேன். கடந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் இம்முறை சிறப்பாக பந்துவீச திட்டமிட்டுள்ளேன்.
* யாருக்கு அதிக வாய்ப்பு காணப்படுகிறது?
இரு அணிகளும் சொந்த மண்ணில் வெற்றி பெற்ற கையோடு களம் காண உள்ளன. ஆனாலும், பாகிஸ்தான் அணி வலிமைமிக்க இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இதனால் எங்களுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது.
* இத்தொடருக்கு தயாராக இருக்கிறீர்களா?
நிச்சயமாக. இந்தியா என்ற பெயரை கேட்டதும் தன்னம்பிக்கை, ஊக்கம் எல்லாம் தானாக வந்துவிடும். இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே... சாதிக்கும் துடிப்பு பிறந்து விடும். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களும் இந்திய தொடருக்கு தயாராக இருக்கிறார்கள்.
* கடந்த முறை ஏற்பட்ட சர்ச்சை பாதிக்குமா?
சென்ற முறை ராவல்பிண்டி டெஸ்டின் போது எனக்கு ஏற்பட்ட காயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது எனது அர்ப்பணிப்பு உணர்வு குறித்து கேள்வி எழுப்பினார்கள். இது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது எல்லாவற்றையும் மறந்து விட்டேன்.
* இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் அள்ளியதன் ரகசியம்?
இத்தொடருக்கு முன்னதாக எனது குரு இம்ரான் கானை சந்தித்தேன். அவர் சில அறிவுரைகள் தந்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் இக்கட்டான நிலையில் இருப்பதை எடுத்துக் கூறினார். இத்தொடரில் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டுமென எச்சரித்தார். இவரது ஆலோசனையை பின்பற்றியதால் சாதிக்க முடிந்தது. அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. மூன்று டெஸ்டிலும் பங்கேற்றதால் எனது அர்ப்பணிப்பு குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை.
* தங்களது "சூப்பர் பார்ம்' தொடருமா?
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 17 விக்கெட் வீழ்த்தினேன். இதே "பார்ம்' இந்தியாவுக்கு எதிராகவும் தொடர விரும்புகிறேன். சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடி தந்தால் நிம்மதி பெருமூச்சு விடலாம்.
* இந்திய அணியின் வலிமைமிக்க பேட்டிங் படை குறித்து?
சச்சின், சேவக், டிராவிட் என நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்களில் பவுலர்களை மிரட்டக் கூடியவர் கேப்டன் டிராவிட் தான். இவரை வெளியேற்றுவது மிகவும் கடினம். தற் காப்பு ஆட்டத்தில் கெட்டிக்காரரர். சச் சின், சேவக் போல் விளாசாமல் நிதானமாக ஆடும் ஆற்றல் படைத்தவர். அதிரடியாக விளையாடாத ஒருவரை அவுட் டாக்குவது எப்போதுமே சிரமம் தான்.
* இம்முறை பாகிஸ்தான் சாதிக் குமா?
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். பவுலர்கள் தங்கள் பணியை திறம்பட செய்தனர். இருப் பினும் பாகிஸ்தான் சூழ்நிலை இந்தியாவுக்கு பழக்கமானது. எனவே, கூடுதல் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். கேப்டன் இன்சமாம் அபார "பார்மில்' இருப்பதால், இந்திய அணியை அசைக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.
source :www.dinamalar.com

.
.
.