Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய விஞ்ஞானிகள் மீது தாகுதல் - ஒருவர் பலி
#1
<span style='color:red'><b>பங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு</b>

பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி மையத்தில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

நேற்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சில் உள்ள ஜே.என்.டாடா ஆடிட்டோரியத்தில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் 36 வெளிநாட்டினர் உள்பட 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

மாநாடு முடிந்து அனைவரும் வெளியேறிபோது அங்கு அம்பாசிடர் காரில் வந்த தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். ஆனால், அது வெடிக்கவில்லை. இதையடுத்து ஒரு தீவிரவாதி தன் வசம் இருந்த ஏ.கே47 துப்பாக்கியால் விஞ்ஞானிகளை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பியோடினான்.

பின்னர் அவன் அந்தக் காரிலேயே ஏறி தப்பிவிட்டான்.

இந்தத் தாக்குதலில் 2 விஞ்ஞானிகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் எம்.எஸ்.ராமைய்யா, மல்லிகே மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால, இதில் ஓய்வு பெற்ற டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் எல்.என்.பூரி மரணமடைந்தார். இவர் டெல்லி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி)யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்னொரு விஞ்ஞானியான விஜய் சந்துரு என்பவருக்கு உடலில் இருந்து குண்டுகளை வெளியேற்ற அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இவர்கள் தவிர சங்கீதா, படேல் ஆகியோர் உட்பட மேலும் 6 விஞ்ஞானிகளும் காயமடைந்தனர்.

இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் ஏற்கனவே பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாத அமைப்பின் ஹிட்லிஸ்டில் உள்ளது. ஆனாலும் இதற்கு போதிய பாதுகாப்பு அளிக்க பெங்களூரில் போலீசார் தவறிவிட்டனர்.

இதனால் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டு நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரிய நிர்வாகி கூறுகையில், வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த நான்கு பேர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தவுடன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர் என்றார்.

ஆனால், ஒரே ஒரு தீவிரவாதி தான் தாக்குதல் நடத்தினான் என்றும், அவன் காரில் வரவில்லை என்றும், வாயில் வழியாக நடந்தே வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு சுவர் ஏறித் தப்பியதாக போலீசார் கூறுகின்றனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஏகே47 ரக துப்பாக்கியையும், அதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் 2 மேகசின்களையும் தீவிரவாதி அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியுள்ளான். அவை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐயில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளின் கைவரிசை இருப்பது ஊர்ஜிதமாவதாக மத்திய உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் போலீசார் சொல்வது போல் ஒரு தீவிரவாதி மட்டுமே வந்து தாக்குதல் நடத்தவில்லை என்றும், 4 பேர் காரில் வந்து தாக்கிவிட்டுத் தான் தப்பியுள்ளனர் என்றும் உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தையடுத்து பெங்களூரில் விதான சௌதா உட்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

[size=9]தற்ஸ்தமிழ்.கொம்</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
திட்டமிட்ட இந்த தாக்குதல் பாகிஸ்தான் கோழைகளால் நடத்தப்பட்டுள்ளது.... ஒரு விஞ்ஞானி மறைந்தால் அதற்கு பதிலாக ஆயிரம் விஞ்ஞானிகள் இந்தியாவில் உருவாவார்கள் என்பது அந்தக் கோழைகளுக்கு தெரியாது.....
,
......
Reply
#3
Luckyluke Wrote:திட்டமிட்ட இந்த தாக்குதல் பாகிஸ்தான் கோழைகளால் நடத்தப்பட்டுள்ளது.... ஒரு விஞ்ஞானி மறைந்தால் அதற்கு பதிலாக ஆயிரம் விஞ்ஞானிகள் இந்தியாவில் உருவாவார்கள் என்பது அந்தக் கோழைகளுக்கு தெரியாது.....

இலங்கை அரசாங்கம் போல சரியான கோமாளித்தனமா இருக்கு இப்படி நீங்கள் சொல்வது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#4
யார் கோமாளி, யார் ஏமாளி என்பதை காலம் தான் முடிவு செய்யும் நண்பரே......
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)