Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மீண்டும் தமிழகத்தில் பெரும் உணர்வெ
#1
தானாடாவிட்டாலும் சதை ஆடும்'' என்பார்கள். அந்த வகையில் ஈழத் தமிழர்களுக்காக உரிமையோடு குரல் எழுப்பத் தயாராகிவிட்டது தமிழகம்.
சென்னையில் நேற்றுமுன்தினம் பேரெழுச்சியோ டும் , உணர்வோடும் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அங்கு ஆற்றப்பட்ட உரைகளும் அதைத்தான் எடுத்தி யம்புகின்றன.
ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு தொப்புள் கொடி உறவு போன் றது என்பார்கள்.
அதனால் தான் ஈழத்திலிருக்கும் தமது தசைக்காகத் தமிழகத்திலுள்ள தமிழர்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்.
ஈழத் தமிழரின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முகிழ்ந்து பெரு விருட்சமாக வளர்ச்சிபெறுவதற்கான உரம் 1983 மத்தியில்தான் இடப்பட்டது. அந்த உரத்தை வழங்கி, விடுலைப் போராட்டத்துக்கு உணர்வூட்டி, உறையுள் அளித்து, வழிப்படுத்தி, வலுப்படுத்திய பெருமை தமிழகத்துக்கே உண்டு. இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியில் தொடங்கி, தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் வரை பல பெருந்தகைகளின் வழிப் படுத்தலில் பரந்து, வளர்ந்த விடுதலைப் போராட்டம் இன்று தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கின்றது.
இடையில் சில கசப்புணர்வுகள், துன்பியல் நிகழ்வு கள் காரணமாகவும்
தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை கேவலப்படுத் திய சில தமிழக ஆட்சியாளர்களின் கெடுபிடிப் போக் கின் காரணமாகவும்
ஈழத் தமிழர்களுக்கான குரல் தமிழகத்தில் உரிய முறையில் ஒலிக்க முடியாதபடி இக்கட்டு நேர்ந்தது.
அப்படி இக்கட்டு விளைவித்தோரே இன்று ஈழத் தமி ழர்களுக்கும் அவர்களது விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் திரண்டுவரும் ஆதரவு கண்டு தமது போக்கை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
தன்னுடைய அரசியல் இலக்குக்காக ஆரம்பத்தில் ஈழத் தமிழர்களின் உரிமைப்போரையும் அதற்காகத் தம்முயிரைத் தியாகம்செய்து போராடும் விடுதலைப் புலிகளையும் மெச்சி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பின்னாளில் மிக மோசமாக தீவிரமாக புலி எதிர்ப்பு வாதத்தில் குதித்தார். அவரே இப்போது, தமிழகத்தில் வளர்ந்துவரும் ஈழத் தமிழர் ஆதரவு உணர்வுக்கு அஞ்சி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது மாநிலத்தில் வரவேற்புக் கொடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் சூழல் உருவாகியிருக்கின்றது.
இன்னும் ஆறு மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர் தல் நடைபெற இருக்கிறது. ஈழத் தமிழரை அடக்கி ஒடுக்கிவரும் தென்னிலங்கைச் சிங்கள அரசின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தச் சமயத்தில் தமிழகத்தில் தாம் வரவேற்புக் கொடுப்பதோ, அவரைச் சந்தித்துப்பேசுவதோ மாநிலத்தில் தமக்கு எதிரான உணர் வலைகளை எழுப்பித் தம்மைப் பெரிதும் பாதித்துவிடும் என்ற உண்மையை உணர்ந்துகொண்ட தமிழக முதல் வர் ஜெயலலிதா, மெல்ல ராஜபக்ஷவின் தமிழக வரவை வெட்டிவிடச் செய்துவிட்டார்.
ஈழத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் ஆதரவாகச் செயற்படுவோரை "பொடா' சட்டத்தைக்காட்டி அடக்கி, மிரட்டி, சிறையில் அடைத்துவந்த ஜெயலலிதா அரசு, அந்தச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு பெருகிவரும் ஆதரவுகண்டு அடங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் வாளாவிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கருத்து நிலைப்பாடு மீண்டும் தமிழகத்தில் உணர்வெழுச்சி பெறுவது, புதுடில்லி அரசுக்கும் சில யதார்த்தங்களை உணர்த்தியிருக் கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கும் தனது நீண்டநாள் திட்டத்துக்கு இலக்குக்கு இந்தியாவின் புதுடில்லி அரசுத் தலைமை, இரண்டு கரத்தால் உதவிகளை அள்ளி வழங்கும், ஆதரவு தரும் என்றெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டு கனவுகளோடு அங்குசென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலும் வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலைமை ஏற்பட்டதற்கு இலங்கை விவகாரம் தொடர்பான தமிழக மக்களின் உணர்வு நிலைப்பாடும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயங்களை உணர்ந்து, அதற்காக உரத்துக் குரல் கொடுக்கும் தமிழக மாநில மக்களின் உணர்வு நிலைப்பாட்டுக்கு மாறாக அதை மீறி போக முடியாத புதுடில்லித் தலைமை, அந்த மக்களின் அவர்களின் தலைவர்களின் கருத்துகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் செவிமடுத்து இலங்கை விடயத்தில் தனது கொள்கைப் போக்கை வகுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதனால்தான் "வெறுங்கை யோடு மீண்டான் இலங்கை வேந்தன்' என்ற இராமாயணப் பாணியில் நாடு திரும்பும் நிலைமைக்கு உள்ளாகியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.
நேற்றுமுன்தினம் சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறிய ஒரு கருத்து வெகுவிரைவில் நிதர்சனமாகும் என்ற உறுதியை நம்பிக்கையை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் உணர்வெ ழுச்சி தந்திருக்கிறது.
அது ஐ.நா. சபையில் விரைவில் தமிழீழக் கொடியும் பறக்கும் என்ற எதிர்வு கூறல்தான்
http://www.uthayan.com/editor.html
Reply
#2
எது தான் எப்படி இருந்தாலும் காலைத்தூக்கி அடியெடுத்து வைக்க கற்றுத்தந்த இந்தியாவே சடுதியிலே காலையும் வாரியும் விட்டது. எது எப்படித்தான் இருந்தாலும் "தானாடாவிட்டாலும் சதை ஆடும்'' என்பது போல் தமிழகத்து தமிழரின் குரல்கள் எமக்காகவே ஒலிக்கின்றன.
Reply
#3
ஈழத்தில் ஆறுமுகம் தொண்டமான் சந்திரசேகரன் மனோ கனேசன் தமிழீழ அரசில் துறையை தனித்தனியாக சந்தித்தது மீண்டும் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் எல்லாம் நல்ல சமிக்கைகள் போலத்தான் தெரிகின்றன எவ்வளவு இப்பிடி கூச்சல் போட்டாலும் எங்கடை மொட்டைகளுக்கும் சிவப்புச்சட்டைக்கும் விளங்குமா???? எண்டது சந்தேகமாகத்தான் கிடக்கு..............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இப்பிடி கூச்சல் போட்டாலும் எங்கடை மொட்டைகளுக்கும் சிவப்புச்சட்டைக்கும் விளங்குமா???? எண்டது சந்தேகமாகத்தான் கிடக்கு.....

அவைகளுக்கு விளங்கினது ஒன்று தான் அது தான் அடி அதை செய்தால் ஒழங்காக எல்லாம் புரியும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)