12-31-2005, 05:42 PM
<b>எகிப்தில் வன்முறையில் 10 சூடான் அகதிகள் சாவு</b>
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஐக்கிய நாடுகள் சபை
அலுவலகங்களுக்கு எதிரில் கடந்த 3 மாதங்களாக
முகாமிட்டிருந்த சூடான் நாட்டு அகதிகளை போலீஸர்
அகற்ற முயன்றபோது, வன்முறை ஏற்பட்டு 10 பேர்
உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை காலை இச் சம்பவம்
நடந்தது. அகதிகளை அகற்ற அந்த இடத்தில் 5 ஆயிரம்
போலீஸôர் குவிக்கப்பட்டனர்.
சூடானில் 21 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுக் கலவரம்
ஓய்ந்துவிட்டது. அப்படியும் நாடு திரும்ப முடியாத
அகதிகள் ஏராளமானோர் பிற நாடுகளில் தஞ்சம்
புகுந்துள்ளனர். அவர்களில் ஏராளமானோர் கெய்ரோவில்
முகாமிட்டு, அங்குள்ள ஐ.நா. அதிகாரிகளிடம் தங்களுக்கு
மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரி வந்தனர்.
கடும் குளிரிலும் பனியிலும் திறந்த வெளியில்
அட்டைகளையும் பிளாஸ்டிக் ஷீட்டுகளையும் கூரையாகக்
கொண்டு கூடாரம் அமைத்து திறந்த வெளியிலேயே
தங்கியுள்ளனர். அவர்களால் சில பிரச்சினைகள் வந்ததால்
அங்கிருந்து அகற்றுமாறு போலீஸருக்கு
உத்தரவிடப்பட்டது.
அப்போது அவர்கள் அதற்கு பலத்த எதிர்ப்பு
தெரிவித்தனர். இதனால் போலீஸர் முதலில் தண்ணீரைப்
பீய்ச்சியடித்து வெளியேற்ற முயன்றனர். பிறகு தடியடிப்
பிரயோகம் செய்தனர். அப்போது நெரிசலில் சிக்கி 10 பேர்
இறந்தனர், 30 பேர் காயம் அடைந்தனர்.
இறந்தவர்களில் முதியவர்கள், இளைஞர்கள் உள்ளனர்.
பெண்களும், குழந்தைகளும் கூட்டத்தில் இருந்தனர். 10-
க்கும் மேற்பட்ட பஸ்களைக் கொண்டுவந்த போலீஸர்,
வலுக்கட்டாயமாக அதில் அவர்களை ஏற்றிச் சென்றனர்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Nn%A7Ls&Topic=0

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>