01-01-2006, 09:33 AM
இவர்கள் பேசிக் கொள்வதே "பாட்டு பாஷை'யில் தான் : அட்ரஸ் கேட்டாலும், பாடித்தான் சொல்றாங்க
ஷில்லாங்: இந்த கிராம மக்கள், மூச்சு விட்டாலே, பாட்டு தான் வருகிறது. யார், எது பேசினாலும், "பாட்டு பாஷை' தான். யாராவது முகவரி கேட்டாலும், பாட்டு பாடியே விவரம் சொல்கின்றனர். பிறந்தது முதல் இறக்கும் நொடி வரை, இவர்கள் வாழ்நாளில், பாட்டுப் பாடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
நமக்கு தெரியாமல், எங்கோ ஒரு அமைதியான கிராமமே, காலை விழித்தெழுவது முதல் துõங்குவது வரை பாடுகிறது என்றால், ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வது போலத்தான் உள்ளது இல்லையா? இந்த "பாட்டு' கிராமம், வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தில் உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் காஷி மலையில், கிழக்குப்பகுதியில், கடார் ஷ்னாங் என்ற இடத்தில் உள்ள "காங்தாங்' என்ற அமைதியான கிராமம் தான் பாட்டு கிராமம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மலை கிராமத்துக்கு போவது சுலபமே அல்ல. சாதாரணமாக நடந்து போய்விட முடியாது.
செங்குத்தான மலைப்பாறைகளின் இடுக்குகளில் நுழைந்து, செல்ல வேண்டும். இங்கு மொத்த கிராமவாசிகள் எண்ணிக்கையே 500 தான். மலை கிராமத்தில் நுழைந்ததுமே, முகவரி கேட்டால், அசந்து விடுவீர்கள். பாடிக்கொண்டே இருப்பர். "என்னது முகவரி தானே கேட்டோம், அதற்கு இப்படியா பாடுவது?' என்று நினைத்து, மீண்டும் குறிப்பிட்டவர் பெயரை சொல்லி கேட்டால், மீண்டும் பாட்டு தான் வரும்.
சரி, இன்னொருவரை கேட்கலாம் என்று தேடிப்போய் கேட்டால், அவரும் பாடுவார். "என்னடா சாமி இது, ஏதோ சங்கீத வித்வான்கள் பிறந்த ஊர் போலிருக்கிறதே என்று நினைப்போம். ஆனால், காலம்காலமாக இந்த கிராமத்தில் "பாட்டு பாஷை' தான் பேச்சாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல், முதியவர்கள் வரை, பாட்டுப் பாடியபடி தான் பேசிக் கொள்கின்றனர்.
இரண்டு பேருக்கு இடையே கோபம் வந்தாலும், பாட்டில் தான் மோதிக் கொள்வர்களாம். குழந்தையிடம் பாடலில் பேசிப்பேசி, அதற்கு தொற்றிக் கொள்கிறது. அது வயதாக வயதாக, இந்த "பாட்டு பாஷை' அதிகமாகி விடுகிறது. கிராமத்தில் யாரிடம் எது கேட்டாலும், பாட்டு பாஷை யில் பதில்கள் வரும் என்றால், யார் தான் பாடாமல் இருக்க முடியும்.
"இதெல்லாம் எங்களுக்கு எப்போது வந்தது என்பதே தெரியவில்லை. என் மூன்று தலைமுறைக்கு முன்பு இருந்த தாத்தா, பாட்டி பாடித்தான், எதையும் பேசுவர் என்று சொல்லிக்கேட்டு இருக்கிறேன். குழந்தைப் பருவத்தில் இருந்தே, பாட்டுபாடியே பழக்கப்படுத்துவதால், யாருக்கும் இந்த பாட்டு பாஷை பெரிய கஷ்டமாக இல்லை. எங்களில் சிலர் அழகாக பாடுவர். அவர்கள் பேசுவதை, அதான் பாடுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்' என்கிறார் கிராம பஞ்சாயத்து தலைவர் கைர்டெய்டு மஜாவ்.
"எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்களின் பெயர்கள், இகைருவிகளின் பெயர்களை ஒட்டித்தான் இருக்கும். சிலர் தான் இப்போதுள்ள தலைமுறையினர், பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். எந்த கூட்டத்தில் இருந்தாலும், எங்கள் கிராமத்து மக்களை எளிதாக அடையாளம் காணமுடியும். பாட்டுப்பாடி பேசுவதை பலரும் இன்றும் அதிசயமாக பார்க்கின்றனர்' என்று கிராம சபை செயலர் கமிங்கோம் பினாங்க் கூறினார்.
என்ன இப்படியும் கூட இந்தியாவில் ஒரு ஓரத்தில் மக்கள் இருக்கின்றனரா? உச்சகட்ட வியப்பு தான் இல்லையா?
Dinamalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>