04-18-2006, 12:58 PM
<b>போர்மூலமே தீர்வெனில் தமிழர்கள் தயார்: தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர்</b>
[செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 16:21 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
சமாதானத்தீர்வு ஒன்றை எட்டுவது என்பது போர்மூலம் தான் சாத்தியப்படும் என்றால் அதனை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தயாராகவே உள்ளனர் என்று தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப்பணியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவு நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:
தமிழர்களை அழிக்கவேண்டும் என்ற சிந்தனை அழியாத சிந்தனையாக சிங்கள அரசிடம் தொடர்ந்தும் உள்ளது.
சிங்கள அரசு அன்று முதல் இன்று வரையில் சிந்தனையிலோ, செயற்பாட்டிலோ எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது செயற்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே திருகோணமலையில் அப்பாவித்தமிழ் மக்கள் மீதான வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பற்றாளர்களும், தமிழீழத்திற்காக உழைப்பவர்களும் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் வெளிப்படையான ஒன்றாகவே இருக்கின்றது.
அவர்கள் மிகவும் மனித பண்புகளில் இருந்து மாறுப்பட்டு, அப்பாற்பட்டு நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இன்றைய நவீன உலகம் ஜனாயகம் உள்ளதாக மனிதாபிமானம் உள்ள சமூகமாக மாறி வருகின்ற அதேவேளை சிங்கள தேசம் மட்டும் காட்டுமிராண்டித்தனமான கொள்கையுடன் செயற்பட்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் விடுதலையை எட்டுவதற்கான விளிம்பில் நிற்கின்ற சூழலில் தமிழ் மக்கள் போராட்டத்திற்கான பல்வேறு வகையிலான அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சமாதானம் எனப்படுகின்ற காலகட்டத்தில் நாங்கள் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றோம்.
சமாதானத்தீர்வு ஒன்றை எட்டுவது என்பது போர்மூலம் தான் சாத்தியப்படும் என்றால் அதனை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தயாராகவே உள்ளனர்.
அதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றியை எட்டும்.
இன்று இருக்கின்ற அரசியல் சூழல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கே சாதகமாகவே உள்ளது.
இந்தச் சாதகமான சூழலைச் சரியாகப் பயன்படுத்த ஒருமித்த ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும்.
வயது வேறுபாடின்றி பெரும் எண்ணிக்கையில் மக்கள் முன்வந்து போராட்டத்தில் இணைவது என்பது மிகப்பெரிய வெற்றியைத் தரப்போகின்ற வெற்றியின் தொடக்கம் என்றார் முகுந்தன்.
தமிழர் புனர்வாழ்வுக்கழக நிர்வாக அலுவலகர் ஜெராட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கான சுடரினை வவுனியா மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணிப்பாளர் மூர்த்தி ஏற்றினார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினைச் சேர்ந்த மனோரஞ்சிதன் மலர் மாலையை அணிவித்தார்.
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிக்கொட் திட்டப்பணிப்பாளர் சுடர் நினைவுரை நிகழ்தினார். கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
<b>தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com</b>

[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI