Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2005ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின்
#1
2005ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை ரத்துசெய்யுமாறு ஐனாதிபதி உத்தரவு.
2005 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் பகுதி ஒன்று பல்தேர்வு வினாத்தாள்களின் முடிவுகளை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கனணி மயப்படுத்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக தமது பரீட்சை முடிவுகள் தொடர்பில் மீள் திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்தே இந்த உத்தரவு ஜனாதியினால் பரீட்சை ஆணையாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கண்டி மற்றும் தங்காலை பகுதி மாணவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் இந்த பிரச்சினை குறித்து விளக்கமளித்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்தார்.

இதேவேளை இந்தப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை 2006 ஆம் ஆண்டுக்காக பல்கலைகழகத்திற்கான மாணவ அனுமதிகளை நிறுத்திவைக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கனணி மயப்படுத்தலில் தவறுகளை ஏற்படுத்திய அதிகாரிகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார்.

பதிவு
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)