01-02-2006, 04:00 PM
போருக்குத் தயாராகும் நாடு! மூடப்பட்டு விட்ட பேச்சுக்கான கதவு நிழல் யுத்தத்தின் அடுத்த கட்டம் என்ன?
முழு அளவிலான யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இராணுவத்தினரின் பதில் நடவடிக்கைகள் அப்பாவிப் பொது மக்களையே இலக்கு வைப்பதாயிருப்பதால் அரசுக்கும் படையினருக்குமெதிரான உணர்வு மக்கள் மத்தியில் உச்சமடைந்துள்ளது.
போர்நிறுத்தம் அமுலிலுள்ள போதிலும் மோதல்கள் நடைபெறுகின்றன. நிழல்யுத்தத்தின் தொடர்ச்சியே இந்த மோதல்களாகும். நிழல் யுத்தத்தை அரசு தூண்டியதன் விளைவை முழுநாடும் விரைவில் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
கிழக்கில் கடந்த இரு வருடங்களாக நிலவிய நிழல் யுத்தம் வடக்கே பரவிய போதே முழு அளவிலான யுத்தமொன்றை நாடு எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோதல்களை தவிர்த்து சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதை விடுத்து போருக்கான சூழ்நிலையையே அரசு ஏற்படுத்திவருகிறது.
இந்த மோதல்களில் உயிரிழக்கும் படையினரின் மரணச் சடங்குகளுக்கு செல்ல அமைச்சர்கள் அஞ்சுமளவிற்கு போருக்கு எதிரான உணர்வு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலிருக்கையில் சமாதான முயற்சிகளை கேள்விக் குறியாக்கும் விதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
போருக்கானதொரு அரசாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கூட்டு ஆட்சிபீடமேறியுள்ளது. அதற்கேற்ப கடும் போக்காளரொருவரும் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுஇ உத்தரவுகள் மக்களை பெரும் பீதியடையச் செய்துள்ளன. மோதல்களின் பக்கவிளைவாக பெருமளவு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் கடும் தாக்குதலுக்குஇ நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் இலக்காகியுள்ளனர். இராணுவ தலைமைப் பீடத்தின் உத்தரவின் பேரிலேயே பதில் நடவடிக்கைகளில் மக்கள் இலக்காவதாக படை அதிகாரிகளே கூறுமளவிற்கு அங்கு அச்சமூட்டும் யுத்தமொன்றை நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிய அரசு பதவியேற்றவுடனேயே போருக்கான சூழ்நிலை உருவாகிவிட்டது. அதற்கான சூழ்நிலையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்படுத்தியிருந்தார். புதிய ஜனாதிபதிஇ அந்தச் சூழ்நிலை தொடரக் காரணமானதுடன் முழு அளவிலான போருக்கும் வழிவகுத்துவிட்டார்.
அவரது கூட்டணிக் கட்சிகளான ஜே.வி.பி.யும்இ ஜாதிக ஹெல உறுமயவும் சமாதான முயற்சிகளுக்கு ஆப்பு வைத்தன. சர்வதேச சமூகத்தின் நெருக்குதலாலும் கிழக்கில் புலிகள் பலவீனமடைந்திருப்பதாக கருதியதாலும்இ புலிகளால் யுத்தமொன்றுக்குச் செல்ல முடியாத நிலையிருப்பதாக இவர்கள் தப்புக்கணக்கு போட்டனர்.
ஆனாலும்இ நிலைமை வேறு. போர்நிறுத்த உடன்பாட்டை முற்றுமுழுதாக அமுல்படுத்துவதன் மூலம் தற்போதைய மோதல் நிலைமைகளை தடுக்க முடியுமெனப் புலிகள் கூறுகின்றனர். ஆனால்இ போர்நிறுத்த உடன்பாட்டில்இ தமிழர்களுக்கு சாதகமான அம்சங்களை வெட்டி நீக்கி அதில் திருத்தங்களை கொண்டுவர அரசு முனைகிறது.
மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினரை வாபஸ் பெறுவதுஇ அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாதொழிப்பதுஇ தமிழ் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து அவர்களை வடக்கு - கிழக்கிற்கு வெளியே அப்புறப்படுத்துவது உட்படஇ மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பல அம்சங்கள் போர்நிறுத்த உடன்பாட்டிலுள்ள போதிலும் அவை எதுவும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
இயல்பு நிலையை உருவாக்கும் இவ்வாறான அம்சங்களையெல்லாம் உடன்பாட்டிலிருந்து நீக்கிவிடவே அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. இதனால் தான்இ போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முயல்கிறது. ஆனாலும்இ இந்த உடன்பாட்டை முழு அளவில் அமுலாக்கும் பேச்சுக்களுக்கு மட்டுமே தாங்கள் தயாரெனவும் இதில் திருத்தங்களை ஏற்படுத்தும் எவ்வித முயற்சிக்கும் சம்மதிக்கப்போவதில்லையெனப் புலிகள் கூறிவிட்டனர்.
இந்த நிலையில் தான் வடக்கு கிழக்கில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாரிய மோதலொன்றுக்கு தேவையான சிறுசிறு தாக்குதல்களும் மோதல்களும் இடம்பெற்றுவிட்டதால் இனி முழு அளவிலான போருக்கு நாடு காத்திருக்கிறது. அதுவும் விரைவில் வெடித்துவிடும் சூழ்நிலை உருவாகிவிட்டது.
நோர்வேயை அனுசரணைப் பணியிலிருந்து அப்புறப்படுத்தி ஆசிய நாடொன்றை அதிலமர்த்தும் முயற்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈடுபட்டபோதேஇ போர்நிறுத்த உடன்பாடு கேள்விக் குறியாகிவிட்டது. அத்துடன்இ போர்நிறுத்த உடன்பாட்டில் பல திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்ற அவரது நிலைப்பாடுஇ மோதல்களுக்கு வழிவகுத்து விட்டது.
புலிகளின் பலம் தொடர்பான தப்புக்கணக்கே இந்த நிலைமைக்கு காரணமாகிவிட்டது. புலிகளின் பலத்தின் அடிப்படையில் தான் இந்தப் போர்நிறுத்த உடன்பாடு உருவானதென்பதையும் புதிய அரசு மறந்துவிட்டது. இதனால்இ புலிகளின் பலத்தை உணரும் வரை இந்த அரசு சமாதான முயற்சிகளை ஒருபோதும் ஆரம்பிக்கமாட்டாது. மாறாகஇ போரொன்றின் மூலம் புலிகளை சுலபமாக அடக்கிவிடலாமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.
அதேநேரம்இ மக்களை அச்சமூட்டும் உளவியல் போரில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது. தாக்குதல்கள் நடைபெறும் இடங்களில் கண்டபடி சுட்டுத் தள்ளுவதன் மூலம்இ படையினர் குறித்து மக்கள் பெரிதும் அச்சமுறும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கில் தமிழ் குழுக்களை பயன்படுத்தி எவ்வாறு நிழல்யுத்தம் மேற்கொள்ளப்படுகிறதோ அதே பாணியில் வடக்கில் படையினரே நேரில் இறங்கி மக்களை அச்சமடையச் செய்யும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கருணா குழு என்ற பெயரில் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படும் நிழல்யுத்தத்தை புலிகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தியிருந்தாலும் அங்கும் மக்களை இலக்கு வைப்பதன் மூலம் புலிகளிடமிருந்து மக்களைத் தாங்கள் பிரித்து வைத்திருப்பதாகவே அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஜோசப் பரராஜசிங்கத்தின் இழப்பு புலிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் அமைப்பில் கருணா புரட்சி செய்த நாள் முதல் கருணா குழுவின் நடவடிக்கைகளை ஜோசப் பரராஜசிங்கம் கடுமையாக எதிர்த்து வந்தவர். வடக்கு - கிழக்கு பிரதேசவாதம் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதில் அவர் மிகத் தீவிரமாக இருந்தார். அதனால்இ அவரை கருணா குழுவும் அந்தக் குழுவை இயக்குபவர்களும் இலக்கு வைத்திருந்தனர்.
கருணா குழு இன்று பலமிழந்து வெறும் சிலருடன் இயங்கினாலும் அது மிகப்பெரும் பலத்துடனிருப்பது போல் காண்பிக்க வேண்டியதொரு தேவையுள்ளது. சாதாரண பொது மக்களை இவர்கள் கொல்லும் போது அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆனால்இ கௌசல்யன்இ ஜோசப் பரராஜசிங்கம் போன்றோர் கொல்லப்பட்ட போதுஇ கருணா குழு மிகவும் சக்திமிக்கதாகவும் புலிகளின் மிக முக்கியஸ்தரொருவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிக முக்கியஸ்தரொருவரையும் இலகுவாகக் கொல்லுமளவிற்கு அவர்கள் சக்திமிக்கவர்களாயிருப்பது போன்றதொரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையின் விளைவு விரைவில் உணரப்படுமெனக் கருதப்படுகிறது. சமாதானப் பேச்சுக்களுக்கான வாய்ப்பே இல்லையென்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஒருபுறம்இ அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை அகற்றுவதன் மூலம் சமாதான முயற்சிகளைஇ தங்கள் தேவைக்கேற்பவெல்லாம் கையாள முடியுமெனக் காட்ட அரசு முனைவதுடன் மறுபுறம் ஜோசப் பரராஜசிங்கம் போன்றோரின் கொலைகள் மூலம் கள நிலையிலும் தங்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்பதை காட்ட முயல்கின்றனர்.
சமாதான முயற்சிகளை கேள்விக் குறியாக்குவதுடன் சண்டையை தூண்டுவதுதான் நோக்கமென்பது தெளிவாகிவிட்டது. இதனைப் புலிகளும் நன்குணர்ந்துள்ளனர். எவர் ஆட்சிக்கு வருவதன் மூலம் தங்கள் இலட்சியம் நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனப் புலிகள் கருதினார்களோ அவர் ஆட்சிக்கு வந்துஇ புலிகள் நினைத்த காலப்பகுதியை விட மிக விரைவிலேயே தமிழர்களின் தாயகப் போராட்டத்தை விரைந்து முன்னெடுக்கக் காரணமாகியும் விட்டார்.
அதேநேரம்இ அனுசரணை முயற்சியிலிருந்து நோர்வேயை அப்புறப்படுத்தி அதற்குப் பதிலாக ஜப்பானை நுழைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால் வேண்டாவெறுப்பாக நோர்வேக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதிஇ விஷேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மை அப்பதவியிலிருந்து மட்டுமல்லாது அனுசரணைப் பணியிலீடுபடும் குழுவிலிருந்தும் அப்புறப்படுத்தவும் முனைகிறார்.
அடிக்கடி இவ்வாறு ஆட்களை மாற்றுவதன் மூலம் சமாதான முன்னெடுப்புகளை மேலும் மேலும் தாமதப்படுத்துவதும் புதிதாக அனுசரணைப் பணிக்கு வருவோரை குழப்பமடையச் செய்வதும் இதன் நோக்கமாகும். ஆனாலும்இ எரிக் சொல்ஹெய்மை இக் குழுவில் நியமிப்பதில் நோர்வேயின் புதிய அரசும் தீவிரம் காட்டுகிறது. இதனால்இ இழுபறி நிலை தொடர்கிறது.
இவ்வாறானதொரு நிலைமைஇ தற்போதைய மோதல்களை தணிக்க எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. முழு அளவில் போர் வெடிக்கும் நாள் வெகு தூரத்திலில்லையென போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவும் கூறிவிட்டது. நிலைமையை கட்டுப்படுத்த அவர்களாலும் முடியவில்லை. அறிக்கைகளை வெளியிடுவதுடன் அவர்களது பணி முடிவடைந்து விடுகிறது.
ஆனால்இ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இடைக்கிடையே படையினருக்கும் மக்கள் படைக்குமிடையே நடைபெறும் சிறுசிறு குழு மோதல்கள் பெரும் மோதல்களாக வெடிக்கப் போகின்றன.
புலிகளே பொங்கியெழும் மக்கள் படையென்ற பெயரில் தாக்குதல்களை நடத்துவதாக அரசும் படைத்தரப்பும் கூறினாலும்இ தங்களிடம் ஆயுதப் பயிற்சிபெற்ற மக்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புலிகள் கூறுகின்றனர். முழு அளவில் மோதல் வெடிக்கும் போது புலிகளும் மக்கள் படையுடன் இணைவரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கில் கருணா குழுவின் பெயரில் படைத்தரப்பு எவ்வாறு தாக்குதல்களை நடத்துகின்றதோ அவ்வாறே மக்கள் படையென்ற பெயரில் வடக்கில் புலிகளே தாக்குதல்களை நடத்துவதாக பலரும் கருதுகின்றனர். மக்கள் படை இந்த மோதல்களில் ஈடுபடும் வரை அது சிறுசிறு மோதல்களாகவும் தாக்குதல்களாகவுமே இருக்கப்போகின்றது. இந்த நிலைமையை உணர்ந்துஇ மக்கள் படை புலிப்படையாக மாறிபெரும் போர் வெடிப்பதற்கிடையில் நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட வேண்டும்.
ஆனாலும்இ இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அரசோ அல்லது அனுசரணையாளர்களோ பெரிதும் முயலவில்லை. தற்போதைய மோதல்களுக்கு புலிகளே காரணமெனப் படையினர் கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியில் கிளைமோர் தாக்குதலை நடத்தி மோதலை உருவாக்கியது அவர்களே எனவும் அரசும் படைத்தரப்பும் குற்றஞ்சாட்டுகின்றன.
ஆனால்இ கிளைமோர் தாக்குதல் நடைபெறுவதற்கான காரணங்களை மறைக்கிறார்கள். கிழக்கின் நிழல்யுத்தத்தை வடக்கிற்கு நகர்த்தியது யார் எனக் கூற மறுக்கின்றனர். இந்த நிழல் யுத்தம் நிஜ யுத்தமாகப் போகின்றதென எச்சரித்த போதெல்லாம் மௌனம் சாதித்தவர்கள்இ அந்த நிழல் யுத்தம் இன்று நிஜப் போருக்கு வழிவகுத்து விட்டதென்ற உண்மையை மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.
அனுசரணைப் பணிக்கு நோர்வேயை அழைத்தது அரசும் புலிகளும் தான். அப்பணியிலிருந்து அவர்களை விலக்க வேண்டுமென்றால்இ அழைத்த இரு தரப்பும் தான் நிராகரிக்கவும் வேண்டும். ஆனால்இ ஒரு தரப்பு அவர்களை நிராகரிக்கும் போது எப்படி மற்றத்தரப்பு புதிய அனுசரணையாளர்களுக்கு ஆதரவு வழங்குமென உணர அனைவரும் தவறிவிட்டனர்.
புதிய நோர்வே அரசுஇ அமெரிக்க விரோதப் போக்கை கொண்டதென்பதால் அமெரிக்காவும் அதன் நேச அணியான ஐரோப்பிய ஒன்றியமும் மௌனம் சாதிக்கின்றன.
முழு அளவில் போர் வெடித்து விடலாமென்ற சூழ்நிலையில்இ அந்த நிலைமையை தணிக்கக்கூடிய நோர்வே அனுசரணையாளர்களையும் வேண்டாமென்றால்இ அரசு யுத்தப் பிரகடனத்தை செய்யப்போகின்றதா?
ஏற்கனவேஇ மோதல்கள் உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டதால் போர்நிறுத்த உடன்பாடு செயலிழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதனால்இ போருக்கான அந்தப் 14 நாள் கால அவகாசமும் காலாவதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
போர்நிறுத்த உடன்பாட்டின்படி மக்கள் குடியிருப்புக்களிலிருந்து படையினர் வெளியேறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும். ஆனால்இ மக்கள் குடியிருப்புகளுக்குள்ளிருக்கும் படையினர்இ மோதல்களின் போது மக்களைத் தாக்குவதால்இ போர்நிறுத்த உடன்பாட்டுக்கு விரோதமாகஇ மக்கள் குடியிருப்புக்களிலிருந்து மக்களே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய மோதல்கள் முடிவுக்கு வரும் சாத்தியமில்லை. அரசும் - புலிகளும் அல்லது புலிகளும் - படையினரும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாது போய்விட்டது. எரிக் சொல்ஹெய்ம் கூட இந்த மாதக் கடைசியில் தான் வரப்போகின்றார். அதற்கு இன்னும் பல நாட்களிருப்பதால் அதற்கிடையில் என்ன நடக்கப்போகின்றது என்பது தான் மிகப்பெரும் கேள்வி.
சொல்ஹெய்ம் என்றாலென்ன நோர்வே என்றாலென்ன எவர் வந்தாலும் இந்த மோதல்களை எப்படி நிறுத்தப் போகின்றார்கள்? போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்க அரசோ படைத்தரப்போ ஒருபோதும் தயாரில்லை. இதனால்இ நிழல் யுத்தம் நிறுத்தப்படப் போவதில்லை. மக்கள் குடியிருப்புக்களிலிருந்து படையினரும் வாபஸ்பெறப்படப் போவதில்லை.இதனால்இ நிழல்யுத்தமும் தொடரத்தான் போகின்றது.
இந்த நிலையில்இ ஒற்றையாட்சிஇ தாயகக் கோட்பாடில்லைஇ சுயநிர்ணய உரிமை இல்லைஇ சமஷ்டி பற்றி பேசக்கூடாதென்றெல்லாம் கூறும் அரசுடன் எந்த அடிப்படையில் புலிகள் பேச்சுக்களை ஆரம்பிப்பர்.
சமாதானமும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆனால்இ சண்டையும் வந்துவிடக்கூடாதென இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் விரும்புவதை தமிழ்த்தரப்பு எப்படி ஏற்றுக் கொள்ளும்?
புலிகளின் பலத்தின் அடிப்படையில் உருவான போர்நிறுத்தத்திற்கே இன்று மவுசில்லை. புலிகளின் பலம் பற்றி தென்னிலங்கை மறந்துவிட்டது. போர்நிறுத்த கால ஹசுகம்' அவர்களை அப்படிச் சிந்திக்க வைத்துவிட்டதென்றால்இ இனியொரு யுத்தநிறுத்தத்துக்கு புலிகள் இரட்டைப் பலத்துடன் செல்ல வேண்டுமென்று தமிழர்கள் கூறுகின்றனர். அப்படியானால்இ புலிகள் வசம் பல பிரதேசங்கள் வரவேண்டுமென்றல்லவா அவர்கள் கருதுகின்றனர்.
அவ்வாறானால்இ புலிகள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?
தினக்குரல்