01-08-2006, 09:48 PM
<b>அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் </b>
[திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்]
தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்:
சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் சனிக்கிழமை இரவு இயந்திரப் படகு மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.
அவர் தற்போது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமராகிய உங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடித் தொழிலையே சார்ந்துள்ளது. இப்பகுதி மீனவர்கள் பெரும்பாலும் கச்சத் தீவு பகுதியைச் சுற்றியுள்ள இடங்களிலேயே மீன் பிடித்து வருகின்றனர்.
கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும். அதன் மூலம்தான் இப்பகுதியில் மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இயலும்.
பாக் நீரிணை பகுதியில் மீனவர்களுக்கு எதிராக சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல முறை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். அப்பாவி மீனவர்களுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இந்த விடயத்தில் இந்திய அரசின் கடும் கண்டனத்தை சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
எனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை மத்திய அரசு காண வேண்டும்.
கச்சத் தீவை குத்தகை எடுப்பதன் மூலம் இப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமையை நிலை நாட்ட முடியும் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
http://www.eelampage.com/?cn=23229

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>