Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அஞ்சலி செலுத்துமாறு மக்களை மிரட்டும் கடற்படை
#1
திருமலை கடலில் பலியான தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை மிரட்டும் கடற்படை

வெள்ளைக் கொடி கட்டாவிட்டால் வீடுகளை உடைப்போமெனவும் எச்சரிக்கை

திருகோணமலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை டோராப் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தையடுத்து, திருமலை நகர்ப் பகுதியில் கடற்படையினரின் கெடுபிடிகள் மேலும் அதிகரித்துள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

திருமலையில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலினால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. வீதியெங்கும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடற்கரையை அண்டிய பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் பொது மக்களை பலவந்தமாக வெளியில் அழைத்து டோராப் படகு வெடித்துச் சிதறியபோது இறந்ததாக கருதப்படும் கடற்படையினருக்கு துக்கம் தெரிவிக்கு முகமாக வீடுகளுக்கு முன்னால் வெள்ளைக் கொடிகளைக் கட்டுமாறு பணித்துள்ளனர்.

எனினும், பொது மக்கள் வெள்ளைக் கொடிகளை கட்டாது இருக்க, மீண்டும் அவ்வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் வெள்ளைக் கொடிகளைக் கட்டாவிட்டால் வீடுகளை உடைப்போம் என எச்சரித்து அவ்விடத்தில் நின்று வீடுகளுக்கு முன்னால் வெள்ளைக் கொடிகளை கட்டுவித்துள்ளனர்.

மாணவர்கள் இறந்ததற்கு கறுப்புக் கொடிகளை கட்டுவது போல, கடற்படையினர் இறந்ததற்கு வெள்ளைக் கொடி கட்ட வேண்டுமென கடற்படையினர் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளனர்.

கடற்படையினரது மிரட்டலுக்கு அடிபணிந்து வெள்ளைக்கொடி கட்ட முடியாது எனக் கூறிய பொதுமகன் ஒருவரது மோட்டார் சைக்கிளை கடற்படையினர் உடைத்து நாசம் செய்துள்ளனர்.

இதனால், திருமலையில் நேற்றைய தினம் கடற்கரையை அண்டிய பகுதிகளில் பதற்ற நிலை காணப்பட்டது.
http://www.thinakural.com/New%20web%20site...mportant-11.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)