Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு;மங்கள சமரவீர
#1
ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும்

அமெரிக்காவிடம் மங்கள வேண்டுகோள்

விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் என்று விபரித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புலிகள் தொடர்பில் அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நிதியளிக்கும் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு இரக்க மற்ற கொலைகார இயக்கத்துடனேயே தொடர்புகளை கொள்கின்றார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை "நவீனகால பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள்" என்று குறிப்பிட்டுள்ள மங்கள சமர வீர, தற்கொலைக் குண்டுகள் மற்றும் கப்பல்கள் மீதான விரைவுப் படகு தாக்குதல்கள் போன்ற விடுதலைப்புலிகளின் நுட்பங்களில் சிலவற்றை கூட அல்- ஹைடா கைக்கொள்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர கொண்டலீசா ரைஸையும் ஏனைய அதிகாரிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
திருமலைப் படுகொலையில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு கொலைகள், கற்பளிப்புகள் எல்லாவற்றிக்கும் புலிகள்தான் பொறுப்பு எண்டு கதை அளக்கிறார் போல...
::
Reply
#3
இந்தியாவிற்கு பாடம் படிப்பப் போனவை. அது சரி வரவில்லை என்றவுடன் அமெரிக்காவிற்கு படிப்பிக்கப் போட்டினம். அது சரி...... மங்கள எந்தப்பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்?
[size=14] ' '
Reply
#4
அதுங்கே பாடம் படிப்பீக்க இல்லை அதுக்கு பெயர் காவடி. அங்குள் பத்திரிகைகளே ஜனாதிபதி கிட்டத்தட்ட முழு அமச்சரவையோடு காவடி எடுத்தவர் எண்டு வருணிச்சவை.

அது கொஞ்சப்பேருக்கு சுட்டுப்போட்டுது. அதிலை சில பேர் சுயமரியாதை உள்ள எந்த அரசாங்கமும் இப்படி அவமானப்படாது என்று புலம்பீனம். மிச்சப்பேர் வேறை தலைநகரங்களில் காவடி எடுக்க நிக்கினம்.
Reply
#5
kurukaalapoovan Wrote:அது கொஞ்சப்பேருக்கு சுட்டுப்போட்டுது. அதிலை சில பேர் சுயமரியாதை உள்ள எந்த அரசாங்கமும் இப்படி அவமானப்படாது என்று புலம்பீனம். மிச்சப்பேர் வேறை தலைநகரங்களில் காவடி எடுக்க நிக்கினம்.

அதென்ன தூலாக்காவடியை கொடிகாமம், பளை பக்கம் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கினமாம். புலிகள் உள்ளுக்கு வந்து கஸ்டப்பட்டு எடுக்காமல் வாசலில் வைத்தே கொடுக்கும் ஜடியாவோ??
[size=14] ' '
Reply
#6
Vaanampaadi Wrote:ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும்

அமெரிக்காவிடம் மங்கள வேண்டுகோள்

விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் என்று விபரித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புலிகள் தொடர்பில் அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நிதியளிக்கும் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு இரக்க மற்ற கொலைகார இயக்கத்துடனேயே தொடர்புகளை கொள்கின்றார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை "நவீனகால பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள்" என்று குறிப்பிட்டுள்ள மங்கள சமர வீர, தற்கொலைக் குண்டுகள் மற்றும் கப்பல்கள் மீதான விரைவுப் படகு தாக்குதல்கள் போன்ற விடுதலைப்புலிகளின் நுட்பங்களில் சிலவற்றை கூட அல்- ஹைடா கைக்கொள்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர கொண்டலீசா ரைஸையும் ஏனைய அதிகாரிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

Thinakural

"ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும்."

ஹ்ம்ம்.. ஈவும் இரக்கமும் மில்லியன் கணக்கில கொண்ட சிறீலங்கா வின் அமைச்சர் சொல்லி இருக்கார் .. தேவைதான்!

விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் .

"வாஃவ்வ்"......... தர்சினிய உடம்பெல்லாம் கத்தியால
..குத்து குத்து எண்டு குத்திவிட்டு.. கல்லைக்கட்டி கிணத்தில போட்டிங்களே..

அல்-ஹைடாவ விட நீங்க மோசமான இயந்திரம் இல்லையா?
அட சொல்லவே இல்ல :wink:

"விடுதலைப் புலிகளை "நவீனகால பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள்" என்று குறிப்பிட்டுள்ள மங்கள சமர வீர"

டடடா......... இது வேறயா?
அப்போ 4 வயசு குழந்தையை.. சுட்டு கொன்றுவிட்டு ..மன்னாரில...வீட்டுக்குள்ள போட்டு எரிச்ச நீங்கள்.. எந்த காலத்தின் ஞான தந்தைகள்?

:புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு இரக்க மற்ற கொலைகார இயக்கத்துடனேயே தொடர்புகளை கொள்கின்றார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.:

ஓஹோ ...பின்னிட்டீங்க...
செப்டம்பர் 11 க்கு பிறகு உலகத்தில ஒரு விடுதலை இயக்கம் ஒண்டு இருக்கு ..என்று அமெரிக்கா எப்போ சொல்லிச்சு?

அதை விடுங்க என்னது... அல்ஹைடாவ விட ஈவு இரக்கம் அற்ற கொலைகார இயக்கத்துடன் புலிகள் தொடர்பா?
அந்த இயக்கம் எங்க இருக்கு?

அல்ஹைடாவே உலகின் ஈவு இரக்கம் அற்ற இயக்கம் என்று சொல்லி ஏமாந்து கொண்டு இருக்கிற அமெரிக்காக்கு ..உண்மையை சொல்லாம விட்ட உங்களை என்னவென்று சொல்ல??

அட தமிழனை கொல்ல ஹெல்ப் பண்ணுங்க எண்டு நேரடியா கேக்கலாம் தானே.. அதுக்கு ஏன் இவ்ளோ பில்ட்-அப்??
8) [/b]
-!
!
Reply
#7
புலிகள் ஈவிரக்கமற்றவர்களாக இருந்தாலும் நாட்டுக்காக அவர்களுடன் பேச வேண்டியுள்ளது

அமைச்சர் மங்கள கூறுகிறார்

விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற ஒரு இயக்கம் என்ற போதிலும் நாட்டின் நலன்
கருதி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

விடுதலைப்புலிகள் கடந்த 25 வருடங்களாக ஈவிரக்கமற்ற இயக்கமாகவே செயற்பட்டு வருகின்றனர். இப்போதும் கூட ஈவிரக்கமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஆனாலும், நாட்டின் நலன்கருதி அவர்களையும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசிற்கு உள்ளது.

அவர்கள் ஈவிரக்கமற்றவர்கள் என்ற போதிலும் அவர்களும் இலங்கையர்களே. அவர்களும் எமது சகோதர சகோதரிகளே.

ஆனாலும், அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தம் காரணமாகவே அவர்களை அரசியல் நீரோட்டத்தினுள் கொண்டுவர முடியும் என நாம் நம்புகிறோம்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கு யுத்தம் தீர்வல்ல என்பதே அரசின் நிலைப்பாடு.

பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்துமுள்ளோம்.

புலிகள் 80 களில் பயன்படுத்தியதைப் போன்ற தற்கொலைக் குண்டுதாரிகளையே தற்போது அல் - ஹைடா இயக்கத்தினர் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்துவதாக லண்டனிலுள்ள தந்திரோபாயங்களிற்கான கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, புலிகள் பயன்படுத்திய தொழில்நுட்பங்களையே அல்-ஹைடா அமைப்பும் தற்போது பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
தேர்தலுக்கு முன்ன
"பிரபாகரன் தனக்கு சொந்தக்காரர்" என்று மங்கள சமரவீர சொன்னது மாதிரி ஞாபகம்.
இப்ப "விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற ஒரு இயக்கம்" என்கிறார்.
ஊருக்கு போனா சொந்த பந்தங்களோட இருந்திட்டு வரலாமே?
Reply
#9
AJeevan Wrote:தேர்தலுக்கு முன்ன
"பிரபாகரன் தனக்கு சொந்தக்காரர்" என்று மங்கள சமரவீர சொன்னது மாதிரி ஞாபகம்.
இப்ப "விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற ஒரு இயக்கம்" என்கிறார்.
ஊருக்கு போனா சொந்த பந்தங்களோட இருந்திட்டு வரலாமே?

வரும் போது சங்கரி ஐயாவையும் கூட்டி வரச்சொல்லுங்கோ? :wink:
.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)