04-20-2006, 09:41 PM
வணக்கம் அணைவருக்கும்!
சாத்திரியின் ஐரோப்பா அவலத்துக்கு போட்டியாக இந்த வட அமெரிக்காவின் அவலம் தொடரப்போகின்றது. சாத்திரி தாத்தா கோவிக்க கூடாது. யாழ் வாசிகளே வாசியுங்கள்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை நாம் ஆண்டாண்டு காலமாக நம்புகின்றோம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் நுழையும் அந்த நாளில் பலருடைய ஆசி பெறுவதற்காகவே திருமண வீடு என்று ஒரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டது. பல பெரியோர்கள் கூடி வந்து மணமக்களை ஆசிர்வதித்து விருந்தோம்பி மகிழ்வோடு செல்வார்கள்.
தாயகத்தில் எவ்வளவோ இளம் பெண்கள் வரதட்சணை என்னும் கொடுமையால் மஞ்சள் கயிறுக்கு கூட வழியின்றி அவர்கள் வாழ்வு முதிர் கன்னிகளாகவே கழிகின்றது. தாயகத்தில் ஒருவரின் உழைப்பிலே கூடுதலாக தந்தையின் உழைப்பிலே வாழ்க்கையை ஒட்ட வேண்டிய கட்டாய தேவை. பெரும்பலான ஏழைக் குடும்பங்களுக்கு ஓரு நேர சாப்பாடு வயிறு ஆற உண்பதற்கே வழி இருக்காது. அத்தகைய குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு திருமணம் என்பது ஏட்டாக் கனியாக இருக்கின்றது. அப்படி திருமணம் சரிவந்தாலும் திருமணத்தை கோயிலிலோ அல்லது வீட்டில் கூடிய சொந்தக்காராருடனோ முடித்து விடுவார்கள். பல ஏழை வீடுகளில் வீட்டு சாமி படங்களுக்கு முன்னாலையே திருமணம் நடந்ததை நாம் அனைவரும் அறிந்திருக்க முடியும். தாயகத்தில் எவ்வளவு எளிதாக திருமணம் நடைபெற்றாலும் நமது சம்பிரதாயங்கள் அங்கே மறக்கடிக்கப்படுவதுல்லை.
ஆனால் புலம் பெயர்ந்த சிலர் வேலை செய்கிறார்களோ இல்லை அகதி பணத்தில் காலமெல்லாம் வாழ் நாளை ஒட்டிக்கொண்டு இருக்கினமோ இல்லையோ சில புதிய சம்பிரதயாங்களை பின்பற்ற தயங்குவதில்லை. நாம் கேள்விப்பட்டிராத தமிழ் ஆகாராதியில் இல்லாத புது கொண்டாங்கள் சமீபா காலத்தில் எம்மை ஒட்டுண்ணிகள் மாதிரி ஒட்டிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. அப்படியான சம்பிராதயங்களை பின்பற்ற விட்டால் தம்மை தாமே தரக்குறைவாக நினைக்கின்றார்கள்.
அண்மையில் புலம் பெயர்ந்த இளம் சமுதாயத்திடம் அவதானிக்க கூடிய ஒரு நிகழ்வை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். Bachelor party / Bridle Shower என்று கூறப்படும் கொண்டாங்கள். இதற்குரிய தமிழ் மொழிப்பெயர்ப்பு என்னவெனில் முதலாவது திருமணம் ஆகாத ஆண்களுக்குரிய கொண்டாட்டாம். அடுத்தது திருமணம் ஆகப் போகும் பெண்ணுக்குரிய கொண்டாட்டாம். இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
திருமணம் ஆகாப்போகும் ஆண்களுக்குரிய கொண்டாட்டத்தை பற்றி விரிவாக முதலில் பார்ப்போம். இந்த நாளில் என்ன செய்வார்கள்? திருமணம் செய்யப்போகும் ஆண் தன்னுடைய ஆண் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைப்பார். அதில் என்ன விருந்து இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? சாப்பாட்டை விட தண்ணீவகைகள் தான்(மதுவகைகள்) கூட இருக்கும். ஒரு வசனம் சொல்லுவார்கள் கலியாணம் கட்ட முன் கடைசியாக சந்தோசமாக இருக்க போகின்றோம் என்று (கலியாணத்திற்கு பிறகு குடிக்க மாட்டினம் ஆக்கும்???) கூடுதலான இந் நிகழ்வு கடைசியில் அடிபடுகளுடன் முடிவது தான் வேதனைக்குரிய விடயம். இந் நிகழ்வு சேரும் நண்பர்களை பொறுத்து வேறுபடும். அன்று அந்த ஆண் மகன் செலவழிக்கும் பணம் கட்டாயம் 1000 டொலர் தாண்டும்
அடுத்து பெண்களுக்கான நிகழ்வை பற்றி பார்ப்போம். இந் நிகழ்வானது வட இந்தியார்கள் மூலம் தான் இங்கு அறிமுகமாகி இருக்கின்றது. அது அவர்களின் பரம்பாரிய நிகழ்வு. அதை எமது படித்த பல அறிவாளிப் பெண்கள் அந்த கூத்தை எமது பாரம்பரிய நிகழ்வாக கொண்டாட நினைக்கின்றார்கள். அம்மா அப்பா எவ்வளவு கடன் பட்டு தாங்கள் திருமணத்தை நடத்துகின்றார்கள் என்றா எண்ணம் இல்லமால் தாங்கள் நண்பிகளை அழைத்து அவர்களுக்குள் ஒரு பார்ட்டி. அந்த பார்ட்டியில் பிரதான நிகழ்வு மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படும் பரிசுகள். அந்த பரிசுகள் எழுத்தில் எழுத முடியதாளவுக்கு கேவலமாக இருக்கும்.கேட்டால் அந்த பரிசு பொருட்கள் திருமணத்தின் பின்னர்அந்த தம்பதிகள் தாம்பத்திய உறவிற்கு பாவிக்க என்று சில பொருட்களை பரிசாக கொடுப்பார்கள். இடங்களில் கேக் வெட்டுதலும் நடக்கும்.
இத்தகைய நிகழ்வுகள் நம் காலச்சாரத்திற்கு தேவை தானா? உண்ண உணவின்றி மாற்று உடுப்பு இன்றி எமது இளம் சமுதாயம் தாயகத்தில் தவிக்கின்றன. இரவு பகலாக ஊண் உறக்கமின்றி நம் கலாச்சாரத்தை காக்க தம்முயிரை தியாகம் செய்கின்றார்கள் எம் வீரார்கள். பேணி பாதுக்காக்க வேண்டிய எம் காலச்சாரத்திற்குள் மற்றறை நாட்டு காலச்சாரங்களை புகுத்தி எமது காலச்சாரத்திற்குரிய வரைவிலங்கணங்களை அழிக்க நாமே காரணமாக இருக்கின்றோமா? இனி வரும் சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லப்போவது காலம் காலமாக நாம் மூதையார்கள் பேணி பாதுகாத்து வந்த காலச்சாரத்தையா அல்லது பெயர் தெரியமால் என்ன காரணத்திற்காக கொண்டாடுகின்றோம் என்று தெரியமால் அவர்கள் அப்படி செய்தார்கள் நாமும் அப்படி தான் செய்வோம் என்று அடம் பிடிக்கும் நம் சின்னப்புள்ள தனத்தையா விட்டு செல்லப்போகின்றோம்?. சிறு பிள்ளைகள் போல் இவர்கள் செய்யும் கூத்தை பார்க்க இந்த பழமொழி தான் நினைவிற்கு வருகின்றது கான மயில் ஆட அதை கண்ட வான் கோழி தன் சிறகை விரித்தாடுமாம். வான் கோழி தன் சிறகை விரித்து ஆடினால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் தானே. தொடரும்...........

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->