Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதல் சுற்றுப்பேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்?
#1
முதல் சுற்றுப்பேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்? சொல்ஹெய்ம் வந்ததும் இறுதி முடிவு
புலிகளுடனான சமரசப்பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளதன் காரணமாக புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க முதற்சுற்றுபேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக அவருடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இலங்கை வரவிருக்கும் நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வந்ததும் பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுமென தெரியவருகின்றது.

நேற்று முன்தினமிரவு மஹிந்த ராஜபக்ஷ தனது சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை அழைத்து சுதந்திரக்கட்சியின் திட்டங்கள், வடக்கு கிழக்கு உள்ளூராட்சி தேர்தல், சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இதில் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஜோன் செனவிரட்ன, அனுரபிரியதர்ஷன யாப்பா, நிமால் சிறிபாலடிசில்வா, சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்தர்ப்பத்திலேயே வடக்கு கிழக்கில் நடைபெறும் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமாயின் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து தொடர்ந்து முரண்பாடுகள் இருக்கக்கூடாது. முதல் சுற்று பேச்சுவார்த்தையை நோர்வேயில் நடத்திவிட்டு இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையை ஆசிய நாட்டில் நடத்தலாம் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விட்டுக்கொடுப்பின் மூலம் அரசாங்கத்திற்கு சர்வதேச ஆதரவை திரட்ட முடியும் என்றும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தெரியவருகிறது.
இணைப்பு : : kugan
Fri, 13 Jan 2006, 18:31:11 GMT

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இந்த விசயத்தில இறங்கிவரவே சிங்களவன் இவ்வளவு கஸ்டப்படுறான். எங்கட முழு உரிமைகளையும் குடுக்க எவ்வளவு நாள் சண்டை போடவேணுமோ... ஆண்டவா...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)