01-15-2006, 05:07 AM
<b>நான்தான் உண்மையான மனைவி என்கிறார்கள், சென்னையில் ருசிகர வழக்கு
ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம்
ரூ.1 கோடி சொத்துக்காக குடுமிபிடி சண்டை </b>
சென்னை, ஜன.14-
ஒரு கணவருக்கு 3 பெண்கள் நான்தான் அவருடைய மனைவி என்று சொந்தம் கொண்டாடும் அதிசய வழக்கு சென்னை நகர போலீசில் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி சொத்துக்காக அவர்களிடையே இந்த குடுமி-பிடி சண்டை நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதில் போலீசார் தலையை பிய்த்தபடி உள்ளனர்.
அதிசயம்
சென்னை நகரில் காலியாக கிடக்கும் நிலங்களை புரோக்கர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் போட்டி போட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். சொத்துக்களை அபகரிப்பதில் உறவினர்களே போட்டிபோடும் நிலை உள்ளது. தந்தை, பிள்ளைகளை ஏமாற்றுகிறார், பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றுகிறார்கள், மனைவியே கணவரை ஏமாற்றும் அவலநிலையும் உள்ளது. இங்கே 42ஆண்டுகளாக கணவர் ஒருவர் காணாமல் போன நிலையில் சொத்துக்காக, அவருக்கு மனைவி என்று வயதான பெண்கள் 3 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள். கணருக்குரியவர் காணாமல் போனதால், அவர் வந்து தனது மனைவி என்று அடையாளம் காட்டமுடியாது என்ற நிலை இருப்பதால், இந்த போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ருசிகர வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-
42 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூளைமேடு ஐரோட்டில் நானாஆசாரி என்ற நகை செய்யும் தொழிலாளி வசித்து வந்தார். இவரது உண்மையான மனைவி பெயர் சேதுபாய் என்பதாகும். இவர் வசித்த ஓட்டு வீடு 3 கிரவுண்டு சொந்த இடத்தில் இருந்தது. அந்த நேரத்தில் அந்த பகுதியில் நானா ஆசாரி பிரபலமாக வாழ்ந்தார். திடீரென்று அவர் காணாமல் போய் விட்டார். அவர் என்ன ஆனார், உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
வாழ்ந்த பெண்
நானாபாய் காணாமல் போன பிறகு அவருடைய மனைவி சேதுபாய் என்று சொல்லிக்கோண்டு அவருடைய வீட்டில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டுவரை இந்தப் பெண்தான் நானா ஆசாரியின் உண்மையான மனைவியாக காட்சி தந்தார்.
கடந்த ஆண்டு திடீரென்று அவர் தான் வாழ்ந்த நானாபாயின் வீட்டில் காலிமனையாகக்கிடந்த நிலத்தில் முக்கால் கிரவுண்டு இடத்தை விற்றுவிட்டார். அதோடு நின்றால் பரவாயில்லை. மீதி 2 கிரவுண்டு இடத்தோடு இருந்த வீட்டை ராமலிங்கம் என்ற கட்டிட காண்டிராக்டருக்கு கொடுத்து, அதில் பல அடுக்கு மாடி கட்டிடம் கட்டி விற்று அதில் கிடைக்கும் பணத்தை, இருவரும் பங்கு போட்டுக் கொள்ள ஒப்பந்தம் போட்டிருந்தனர். இதன் பிறகுதான் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது.
ரூ.1 கோடி மதிப்பு
ஒப்பந்தம் போடப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். இந்த நிலம் இப்போது 3 பெண்களின் குடுமிபிடி சண்டையில் சிக்கி தவிக்கிறது. காணாமல் போன நானாபாய் கூட இப்போது திரும்பி வந்தால் நொந்து போய் விடுவார். நான்தான் நானாபாயின் உண்மையான மனைவி சேதுபாய் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். நிலத்தை விற்ற சேதுபாய் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். இன்னொரு சேதுபாய் வடபழனியில் வசிக்கிறார். 3-வது சேதுபாய் வசிக்கும் இடம் தெரியவில்லை.
இவர்கள் 3 பேரும் சொத்துக்கு சொந்தம் கொண்டாடி, போலீஸ் கமிஷனர் நடராஜிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் உள்ளது. துணைகமிஷனர் மாரியப்பன், உதவிகமிஷனர் அன்புமொழி, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். முதலில் நுங்கம்பாக்கம் போலீசார்தான் இந்த வழக்கை விசாரித்தார்கள். ஆனால் அவர்களால் வழக்கை தீர்க்க முடியாமல் கைவிட்டு விட்டனர். இப்போது இந்த வழக்கை தீர்க்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உயில் எங்கே?
காணாமல் போவதற்கு முன்பு நானாபாய் தனது நிலம் மனைவி சேதுபாய்க்குத்தான் சொந்தம் என்று உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயில் யாரிடம் இருக்கிறதோ, அந்த பெண்ணிடம் சொத்தை ஒப்படைக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். உயில் ஒரு பெண்ணிடம் உள்ளது. ஆனால் உயில் போலியானது என்று உயில் கையில் இல்லாத மற்ற இருவரும் சொல்கிறார்கள். காணாமல் போன நானாபாய்க்கு 3 மகன்கள் இருப்பதாக ஒரு புதிய கதையும் சொல்லப்படுகிறது. 3 மகன்களையும் அழைத்து உங்களின் உண்மையான தாய் யார் என்று விசாரித்து அதன் மூலம் பிரச்சினையை தீர்த்து விடலாமா என்றும் போலீசார் யோசித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
எப்படியாவது உண்மையான சேதுபாயை கண்டுபிடித்து சொத்தை ஒப்படைக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். காணாமல் போன நானாபாயே திரும்பி வந்தால்தான் இதில் பிரச்சனை தீரும் என்று போலீஸ்காரர் ஒருவர் நகைச்சுவையோடு கூறினார். அதில் கூட போலி நானாபாய் வந்து விடுவார் என்று இன்னொரு போலீஸ்காரர் பதிலுக்கு ஜோக் அடித்தார். எப்படியோ இந்த பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று போலீசார் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>