Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சவுதிஅரேபியாவில் 345 பேர் பலி
#1
மெக்காவிற்கு அருகே கூட்ட நெரிசல், 345 பேர் பலி

சவூதி அரேபியாவில் இருக்கும் புனிதத்தலமான மெக்காவுக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கிட்டத்தட்ட 345 முஸ்லீம் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஹஜ் புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானை குறிக்கும் மூன்று தூண்களை நோக்கி கல்லெறியும் சடங்கின்போது, அந்த தூண்களை நோக்கி ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் முண்டியடித்து முன்னேறியதாக, சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சூரியன் மறைவுக்கு முன்பு இந்த சடங்கை முடித்துவிட வெண்டும் என்கிற நோக்கத்தில், எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் அங்கே குழுமத்துவங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் சிலர் ஒருவரோடு ஒருவர் தோள்களைக் கோர்த்துக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்து செல்ல முயன்ற போது, மோசமன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் புனிதப்பயணத்தை மேற்கொள்ளும் போது, விபத்துக்கள் நடப்பது என்பது தொடர் நிகழ்வாக மாறிவருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன், கூட்ட நெரிசலில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.

BBC தமிழோசை
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)