01-13-2006, 10:28 AM
தற்பாதுகாப்புத் தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவு
[வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2006, 04:33 ஈழம்] [ச.விமலராஜா]
சிறிலங்கா இராணுவத்தினர் தற்பாதுகாப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:
விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் போது தற்பாதுகாப்புக்காகத் தாக்குதலை நடத்தவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று நடக்கவும் இராணுவத்துக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் 80-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட நிலையிலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பிலும் பேச்சுக்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலையில் மாற்றமில்லை. நாம் யுத்த நிறுத்தத்தில் ஈடுபாட்டோடு இருக்கிறோம் என்று சர்வதேச சமூகத்துக்கு நிரூபித்து வருகிறோம். இதையே விடுதலைப் புலிகளும் மேற்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் போன்ற கெரில்லா அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு எல்லாம் அரசாங்கம் எதிர்வினையாற்றாது. நாங்கள் பொறுமையாக இருந்ததன் விலையாக அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் விடுதலைப் புலிகளை எச்சரித்துள்ளன. அண்மையில் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான மகிந்த ராஜபக்சவின் சந்திப்பின் போதுகூட அரசாங்கத்தின் பொறுமையை அவர்கள் பாராட்டினார்கள்.
நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் எதிர்த்த போதும் நாம் வரவேற்கிறோம். கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவருடனான அவரது சந்திப்புக்குப் பின்னர் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கக் கூடும் என்று நம்புகிறோம்.
தென்னிலங்கை கட்சிகளின் இணக்கப்பாடு என்பதில் அனைத்துக் கட்சிகளும் போரை விரும்பவில்லை என்பதுதான் தற்போதைய முன்னேற்றக்கரமான நிலைமை என்றார் நிமல் சிறிபால டி சில்வா.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாகவும் வவுனியாத் தாக்குதலைக் கண்டித்து உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>