Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுவரை 28 பெண்கள் கற்பழிப்பு தப்பி வந்த அகதிப்பெண் கண்ணீர்
#1
<b>இலங்கை ராணுவம் வெறிச்செயல் இதுவரை 28 பெண்கள் கற்பழிப்பு தப்பி வந்த அகதிப்பெண் கண்ணீர் </b>


ராமேசுவரம், ஜன. 12- இலங்கை ராணுவம் கடந்த ஒரு மாதத்திற்குள் 28 தமிழ்பெண்களை கற்பழித்துள்ளதாகவும், சோதனை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்படும் ஆண்களின் கதி பற்றி தெரியவில்லை என்றும் தனுஷ்கோடி வந்த இலங்கை அகதிப்பெண் கண்ணீருடன் கூறினார்.

இலங்கை புதிய அதிபராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றப் பிறகு விடுதலைப்புலிகளுடன் மோதல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர்.

தமிழ் ஆதரவு எம்.பி., கடந்தமாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு போர் அபாயம் மேலும் அதிகாpத்துள்ளது. இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான கப்பலை சமீபத்தில் புலிகள் நடுக்கடலில் மூழ்கடித்தனர். ராணுவம் மற்றும் புலிகளுக்கு இடையிலான அடுத்தடுத்த மோதல்களால் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் பதட்டம் அதிகாpத்துள்ளது.

தமிழர்களில் பெரும்பாலானோர் உயிர் பிழைப்பதற்காக வெளியேறி வருகின்றனர். அவர்களில் 6 குடும்பத்தை சேர்ந்த 8 ஆண்கள், 6 பெண்கள், 10 குழந்தைகள் என மொத்தம் 24 பேர் தலைமன்னார் செல்வபுரத்திலிருந்து நேற்று காலை அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். தாசில்தார் குருசாமி, டி.எஸ்.பி. சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தங்கவேலு ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தனுஷ்கோடி அhpச்சல் முனைக்கு வந்திறங்கிய அகதிப்பெண் ரஜனி கூறியதாவது„ தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் அத்து மீறி நடக்கின்றனர். இதுவரை 28க்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கை ராணுவத்தினரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். நு}று வீடு திட்டம் பகுதியில் பல ஆண்களை சோதனை எனும் பெயரில் அழைத்து சென்றனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்றே இதுவரை தெரியவில்லை.

விடுதலைபுலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று வருகிறது. நு}ற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் பேசாலையில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாளை (ஜன.14)க்கு பின்னர் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தும் என கூறப்படுகிறது. காடுகளில் தஞ்சம் புகுந்து, உணவு, தண்ணீர் இன்றி மூன்று நாட்கள் குழந்தைகளுடன் மறைந்திருந்தோம்.

உயிர்பிழைப்பதற்காக படகு மூலம் தப்பி இந்தியா வந்தோம். இதே போன்று வருவதற்கு ஏராளமான பேர் அங்கு காத்திருக்கின்றனர். இனி அங்கு உயிருடன் வாழ முடியாது என்ற நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இலங்கை அகதிகள் வருகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் செல்லமுத்து தலைமையில் விவாதிக்கப்பட்டது. தமிழக கடலோரப் பகுதிகளில் கடற்படை, க்யூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அகதிகள் அனைவரையும் தீவிரமாக விசாரித்த பிறகே, மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மூன்றhண்டுகளாக அமைதி நிலவியதால் அகதிகள் வரத்து இல்லை. மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக அகதிகள் இந்தியா வந்துள்ளனர்.

போர் நெருக்கடி அதிகாpத்துள்ளதால், இனி அகதிகள் வருகை அதிகளவில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Dinakaran
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
þÐ ¦À¡ö ¦ºö¾¢ ¾¢É¸Ãý ¸¡Í ¦¸¡ÎòÐ þôÀÊ¡É
¦ºö¾¢ §À¡ÎÐ ´Õ ¬¾¡ÃÓõ þø¨Ä
Å¡½õÀ¡ÊìÌ §ÅÈ §Å¨Ä þø¨Ä

இதை நான் கேட்க இல்லை இப்படி கேட்டு தான் சிலர்(?)
முக்கு உடைபட்டு காணம போனவை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கள் பெண்களின் அவலங்கள் என்னும் கணக்க வெளியில்
வருவது இல்லை Cry Cry Cry
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#3
நர்மதா தந்திருந்த அக்கிரமங்கள் பற்றிய பட்டியலில் <b>சில</b> பற்றிய தகவல்கள்
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2199
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=62
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=186
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=196
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1128
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1451
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4006
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1719
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5709
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4757
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4492
Reply
#4
Quote:<b>இலங்கை ராணுவம் கடந்த ஒரு மாதத்திற்குள் 28 தமிழ்பெண்களை கற்பழித்துள்ளதாகவும்</b>, சோதனை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்படும் ஆண்களின் கதி பற்றி தெரியவில்லை என்றும் தனுஷ்கோடி வந்த இலங்கை அகதிப்பெண் கண்ணீருடன் கூறினார்.

என்னையா குழப்புறீங்க :roll: :roll: 28 ஆ உண்மையாகவா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)